ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

சென்னை டிரக்கிங் கிளப்: பீட்டர் வெளிநாடு செல்லத் தடை!

சென்னை டிரக்கிங் கிளப்பின் நிறுவனர் பீட்டருக்கு வெளிநாடு செல்லத் தடைவிதித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் `லுக் அவுட் நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது.

தேனி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த 11ஆம் தேதி ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மலையேற்றத்துக்காகச் சென்ற 14 பேர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் சிலரை, சென்னை பாலவாக்கத்தில் உள்ள சென்னை டிரக்கிங் கிளப் என்ற மலையேற்றப் பயிற்சி நிறுவனம், மலையேற்றத்துக்காக அழைத்துச் சென்றுள்ளது. இதன் உரிமையாளரான பீட்டர் வான்கே தற்போது தலைமறைவாக இருக்கிறார். அவர் மீது தேனி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது நிறுவனத்தை போலீஸார் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.

இந்நிலையில், பீட்டர் வான்கே வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டாரா அல்லது இந்தியாவில்தான் இருக்கிறாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வெளிநாட்டுக்குத் தப்பிவிடாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக் அவுட்’ நோட்டீஸைத் தமிழக போலீஸார் அனுப்பியுள்ளனர்

278 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன