
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பிரீத்திசிங், சாய்பல்லவி உள்பட பலர் நடிக்கும் படம் ‘என்ஜிகே’. தற்போது, இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. செல்வராகவன் இந்த படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
ரகுல் பிரீத்திசிங் தெலுங்கில் இருந்து மீண்டும் தமிழுக்கு நடிக்க வந்த பிறகு முதலில் கார்த்தியுடன் நடித்தார். இதில் சூர்யாவுடன் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் பாத்திரம் குறித்து ரகுல் பிரீத்திசிங் கூறுகிறார்…
“நான் தென் இந்திய படங்களில் மட்டுமல்ல. இந்தி படங்களிலும் நடித்து விட்டேன். ஆனால் இந்த ‘என்ஜிகே’ படத்தில் மிகவும் அருமையான வேடம் கிடைத்திருக்கிறது. இது நான் இதுவரை நடிக்காத மாறுபட்ட வேடம். எனது நடிப்புத்திறமை நன்றாக வெளிப்படும் பாத்திரத்தை செல்வராகவன் எனக்கு கொடுத்து இருக்கிறார்.

நான் கன்னட சினிமாவில் தான் முதலில் அறிமுகமானேன். அப்போது, தமிழில் செல்வராகவன் இயக்கிய ‘7ஜி ரெயின்போ காலனி மிகவும் பிரபலம்’. அதன் கன்னட ரீமேக் ‘கில்லி’ என்ற பெயரில் தயாரானது. அதில்தான் முதலில் நடித்தேன். நான் அறிமுகமானதே செல்வராகவன் கதையில்தான். இப்போது நடித்து வரும் ‘என்ஜிகே’, அவருடைய கதையில் நான் நடிக்கும் இரண்டாவது படம். இது பெயர் சொல்லும் படமாக அமையும்”.
428 Views
