செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 1
Shadow

‘நடிகையர் திலகம்’ படத்தில் இடம்பெற்ற ‘தந்தாய்’ பாடலின் வீடியோ

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.

சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவருடைய கணவரும் நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மதுரவாணி என்ற பத்திரிகையாளர் வேடத்தில் சமந்தாவும், விஜய் அந்தோணி என்ற புகைப்படக் கலைஞர் வேடத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டாவும் நடித்துள்ளனர். மேலும், நாக சைதன்யா, ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். தமிழில் வருகிற 11 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படம், தெலுங்கில் இரண்டு நாட்கள் முன்னதாகவே, அதாவது 9 ஆம் தேதியே வெளியாகிறது.

498 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன