செவ்வாய்க்கிழமை, ஜூலை 14
Shadow

333 கோடி வரதட்சணை கொடுத்து திருமணம் செய்த சவுதி இளவரசர்..!

சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான், ரூ. 333 கோடி வரதட்சனை கொடுத்து, 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவுதி இளவரசரான 68 வயது சுல்தான் 25 வயதான பெண்ணை மணந்துள்ளார். இதற்காக அவர், 50 மில்லியன் டாலர்கள் வரதட்சணையாக அவர் கொடுத்துள்ளார்.

திருமணத்தின் போது 30 சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தவிர, ஒரு சொகுசு பேருந்தில் 30 பெட்டிகளில் பரிசுகள் கொண்டு வரப்பட்டன. இந்த பரிசுகள் மணப்பெண் வீட்டாருக்கு கொடுக்கப்பட்டது.
தவிர, வைரங்களும் தரப்பட்டது. மணப்பெண் வெள்ளை நிற ஆடையில் ஜொலிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

473 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன