திங்கட்கிழமை, செப்டம்பர் 28
Shadow

சென்னை தலைமைச்செயலகத்தில் போலீசார் குவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை தலைமைச்செயலகம்  கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது..
 
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடுக்கும் வண்ணம் தமிழக போலீசார் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை நேற்று முன்தினம் முதலே கைது செய்த வண்ணம் உள்ளனர்.இருந்தபோதிலும், போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பின் செய்தி தொடர்பாளரும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவருமான கு.தியாகராஜன் தெரிவித்தார்.
சென்னை கோயம்பேடு அருகே போராட்டத்தில் பங்கேற்க வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார்  ஈடுபட்டுள்ளனர்.
12 இடங்களில் எண்ணை எடுக்கப்பட்டு வரும் கதிரமங்கலம் கிராமத்தில் குழாய்களை மாற்றி பரமாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது ஓஎன்ஜிசி நிறுவனம். இதனால் கதிராமங்கலம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணை கசிவால் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அந்த கிராம மக்கள் கடந்த 2 மாதமாக போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை எண்ணெய் கசிவு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்களின் அந்த போராட்டத்தில் தடியடி நடத்தி பலரையும் கைத்து செய்தனர் போலீசார்.
 
இதனையடுத்து அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கதிராமங்கலம் கிராம மக்கள் சென்னைக்கு வரவுள்ளதாகவும் அவர்கள், தலைமைச்செயலகம், கவர்னர் மாளிகை, பாஜக அலுவலகம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களை முற்றுகையிடப் போவதாகவும் நேற்று தகவல் பரவியது.
மேலும் மெரினாவிலும் போராட்டம் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டதையடுத்து நேற்று அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இரண்டாவது நாளாகவும் இந்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் கூடியுள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் வழக்கத்தை விட போலீசார் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் அதிகமாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன