
தீவுநாடான இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் கடந்த 20-ம் தேதி முதல் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக ஆறு, ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.பல இடங்களில் மண் அரிப்பினால் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
அடுத்த 72 மணிநேரத்துக்கு தொடர்ந்து 100 முதல் 150 மில்லிமீட்டர் வரையிலான கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிக அபாயகரமான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள பத்து மாவட்டங்களில் இருந்து சுமார் 1.30 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு 231 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்ததாகவும், காணாமல்போன ஒருவரை தேடும் பணியில் பேரிடர் மீட்புப்படை ஈடுபட்டு வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
371 Views
