
கமல்ஹாசன் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் `இந்தியன்-2′ படத்தில் நடிக்கிறார். 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான `இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இந்த படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.
எப்போதும் ஏ.ஆர்.ரகுமானுடனேயே பயணிக்கும் ஷங்கர் இந்த முறை அனிருத்துடன் இணைகிறார். இந்த படத்தில் இன்னொரு ஆச்சர்யமும் நடக்க இருக்கிறது. படத்தில் ஒரு பாடலை பாடலாசிரியர் தாமரை எழுதுகிறார்.

ஷங்கர் படத்தில் தாமரை பாடல் எழுதுவதும் இதுதான் முதல்முறை. கமல்ஹாசனுடன் இணைந்தாலும் ‘இளமையும் புதுமையும் வேண்டும்’ என்று ஷங்கர் முடிவு செய்திருப்பதால் அதற்கு தகுந்தாற்போல் தொழில்நுட்ப கலைஞர்களை `இந்தியன்-2′ வுக்காக சேர்க்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை இறுதியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
369 Views
