சனிக்கிழமை, மே 30
Shadow

சட்ட நடவடிக்கை எடுப்பேன் – ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு சுந்தர்.சி பதிலடி

 

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் தெலுங்கு பட உலகினர் மீது பகீர் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியிருந்தார். நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டு வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டார்கள் என குற்றம் சாட்டினார்.

அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பு ஏற்படுத்த்தினார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி கவனம இப்போது தமிழ் பட உலகம் மீது திரும்பி உள்ளது.

கடந்த வாரம் இயக்குனர் A.R.முருகதாஸ் குறித்து ஒரு பதிவு போட்டார். கோலிவுட் அதிர்ந்தது.

அதன் பின் நடிகர ஸ்ரீகாந்த், நடிகர் லாரன்ஸ் என அடுத்தடுத்து பகீர் குற்றச்சாட்டுகள் பதிவு செய்தார். எந்த குற்றச்சாட்டு குறித்தும் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் பதில் அளிக்க வில்லை.

இந்த நிலையில் இயக்குனர் நடிகர சுந்தர்.சி குறித்த பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை ஸ்ரீரெட்டி பதிவிட்டார்.

இது குறித்து இயக்குனர் சுந்தர்.சியிடம் கேட்டபோது “ஸ்ரீரெட்டி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று ஒரு வரி பதில் அளித்தார்.

ஸ்ரீரெட்டி தொடர்ந்து பகீர் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறி வருவது கோலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 

306 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன