சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: இளையராஜா

தெய்வீக குரலால் உலக மக்களை தன்வசம் வைத்தவர் லதா மங்கேஷ்கர் – இளையராஜா வேதனை!

தெய்வீக குரலால் உலக மக்களை தன்வசம் வைத்தவர் லதா மங்கேஷ்கர் – இளையராஜா வேதனை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், வீடியோ
இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களாக லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாகவே இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை சற்று சீரடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது அவர் காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு ஒரு வீடியோ பதிவின் மூலம் அவருடைய...
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையராஜா!

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையராஜா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையராஜா! இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இளையராஜா இசையமைத்து வருகிறார்.  இந்த நிலையில் நேற்று இரவு உடல்நலக்குறைவால் இளையராஜா மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கிடையே தான் நலமுடன் இருப்பதாக இளையராஜாவே டுவிட்டரில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். 33 விநாடிகள் ஓடும் வீடியோவில் காரில் பயணிக்கும் இளையராஜா, தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ...
முதன்முறையாக இளையராஜா உடன் கூட்டணி அமைக்கும் பா.இரஞ்சித்!

முதன்முறையாக இளையராஜா உடன் கூட்டணி அமைக்கும் பா.இரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
முதன்முறையாக இளையராஜா உடன் கூட்டணி அமைக்கும் பா.இரஞ்சித்! அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இதனைத் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தை இயக்க உள்ளார். முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை பா.இரஞ்சித் இயக்கிய 5 படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து இருந்தார். அதனால் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கும் அவரே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பா.இரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் அடுத்ததாக இயக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த...
இளையராஜாவிற்கு பாட்டு பாடி  வாழ்த்து சொன்ன பாடகி சித்ரா!

இளையராஜாவிற்கு பாட்டு பாடி வாழ்த்து சொன்ன பாடகி சித்ரா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
இளையராஜாவிற்கு பாட்டு பாடி வாழ்த்து சொன்ன பாடகி சித்ரா! இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசைஞானியால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகிகளில் ஒருவர் சித்ரா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இளையராஜாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது: நீங்கள் எனக்கு ஒரு குருவாக, அப்பாவாக இருந்து அறிவுரை கூறி என்னை வழிநடத்தினீர்கள். உங்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. இந்த கோவிட் பிரச்சனை காரணமாக ஒருத்தரை ஒருத்தர் பார்க்க முடியவில்லை. இந்த தருணத்தில் கடவுள் உங்களுக்கு நல்ல தீர்க்காயுசு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். இன்னும் 100 வருஷம் உங்களுடைய இசை பயணம் வெற்றிகரமாக அமை...
‘சூரி – வெற்றிமாறன் – விஜய் சேதுபதி’ இணையும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘சூரி – வெற்றிமாறன் – விஜய் சேதுபதி’ இணையும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘சூரி - வெற்றிமாறன் - விஜய் சேதுபதி’ இணையும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு ‘விடுதலை’ என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராக நடிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்ப...
ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா!

ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா! இசைஞானி இளையராஜா இசையமைத்த "மதுரை மணிக்குறவன்" படத்தின் பாடல்களை அவரது புது ஸ்டூடியோவான இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் வெளியிட்டார். காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி.காளையப்பன் தயாரிக்க ராஜரிஷி.கே இயக்கியுள்ளார். தூத்துக்குடி, மதுர சம்பவம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹரிக்குமார் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். படத்தில் இடம் பெற்றுள்ள 6 பாடல்களையும் கவிஞர் முத்துலிங்கம் எழுதியுள்ளார். மனசில பெரியவன் தான் மதுரக்காரன்... என்ற பாடலை இளையராஜாவே பாடியுள்ளார். படத்தின் அனைத்து பாடல்களும் ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்துள்ளார். மதுரை மணிக்குறவன் படத்தின் பின்னணி இசை முதல் படமாக இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது. மதுரையில் நடந்த உண்மை சம்பவமும் பல கொலைக் குற்றங்களில் நிகழும் பின்னணி பற்றியும் உருவாக்கப்பட்ட கதை...
இளையராஜா ஸ்டுடியோவுக்கு விசிட் அடித்த ரஜினி!

இளையராஜா ஸ்டுடியோவுக்கு விசிட் அடித்த ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  இசைஞானி இளையராஜா ஸ்டூடியோவை பார்த்து ரசித்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை தி நகரில் இசைஞானி இளையராஜா சொந்தமாக "இளையராஜா ஸ்டுடியோ" என்ற பெயரில் ஹைடெக் ஸ்டூடியோ கட்டி இசைப்பணிகள் மேற்கொண்டு வருகிறார். திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகள் அங்கே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை இளையராஜா தி நகர் வீட்டுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் , அவருடன் பல விஷயங்கள் பேசியிருக்கிறார். பின்னர் இளையராஜா சொந்த ஸ்டூடியோ கட்டியிருப்பதை கேள்விப்பட்டு அந்த ஸ்டூடியோவுக்கு இளையராஜாவுடன் சென்று இருக்கிறார் ரஜினிகாந்த். ஸ்டூடியோவை சுற்றி பார்த்து, வியந்து, கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது என பாராட்டி இருக்கிறார். பின்னர் இசைஞானியுடன் நீண்ட நேரம் பல விஷயங்கள் பேசியிருக்கிறார். இந்நிலையில் இன்றும் 2வது முறையாக இளையராஜா ஸ்டூடியோவுக...
2 லாரிகளில் எடுத்து செல்லப்பட்ட இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகள்,வாங்கிய விருதுகள்!

2 லாரிகளில் எடுத்து செல்லப்பட்ட இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகள்,வாங்கிய விருதுகள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
2 லாரிகளில் எடுத்து செல்லப்பட்ட இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகள்,வாங்கிய விருதுகள்! சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனி அரங்கத்தில் தனது இசைப்பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது ஸ்டூடியோ அரங்கை பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இதன் பிறகு இளையராஜாவை எந்த பிரச்சினையும் இன்றி அங்கு எப்போதும் போல செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரசாத் ஸ்டூடியோ முன்பு போராட்டங்களும் நடைபெற்றன. அதற்கு பிரசாத் ஸ்டூடியோ அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி இளையராஜா இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த ...
மீண்டும் இளையராஜா இசையில் தமிழரசன் பட பாடலை பாடிய எஸ்.பி.பி..!

மீண்டும் இளையராஜா இசையில் தமிழரசன் பட பாடலை பாடிய எஸ்.பி.பி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  இசைஞானி இளையராஜாவின் இசையில் மீண்டும் எஸ்.பி.பி  “தமிழரசன் “  படத்திற்காக இன்று பாடல் பதிவானது எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  " தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்,  முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.. ஒளிப்பதிவு -  ஆர்.டி.ராஜசேகர் இசை  -   இளையராஜா பாடல்கள்  -  பழனிபாரதி, ஜெய்ராம் கலை  -   மிலன் ஸ்டண்ட்  -   அனல் அரசு எடிட்டிங்   -   புவன் சந்திரசேகர் நடனம்   -      பிரு...
”ஆண்மையற்றவர்கள்” யார் ராயல்டி கொடுத்துதான் பாடல்களை பயன்படுத்தினோம் – இளையராஜாவுக்கு பதிலடி கொடுத்த 96 படக்குழு

”ஆண்மையற்றவர்கள்” யார் ராயல்டி கொடுத்துதான் பாடல்களை பயன்படுத்தினோம் – இளையராஜாவுக்கு பதிலடி கொடுத்த 96 படக்குழு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
”ஆண்மையற்றவர்கள்” யார் ராயல்டி கொடுத்துதான் பாடல்களை பயன்படுத்தினோம் - இளையராஜாவுக்கு பதிலடி கொடுத்த 96 படக்குழு விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் வெள்யாகி சமீபத்தில் ஹிட் அடித்த படம் 96. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் 99 என்ற பெயரில் இந்த படம் உருவாகி வருகிறது. தமிழ் 96 படத்தில் கோவிந்த் வசந்த் இசையமைத்திருந்தாலும் பல இடங்களில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது. இது குறித்து சமீபத்தில் பேசிய இளையராஜா “96 படக்குழுவுக்கு ஆண்மையில்லை சுயமாக இசைபோடாமல் என் அனுமதி இன்றி பாடல்களை பயன் படுத்தி இருக்கிறார்கள்” என்று கடுமையாக குற்றம் சாட்டினார். இளையராஜாவின் இந்த ஆண்மையில்லாதவர்கள் பேச்சு தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பட இயக்குனர் பிரேம் தரப்பில் விசாரித்த போது “நாங்கள் பயன்படுத்திய எல்லா பாடல்களுக்கும் உரிய ராயல்டி கொடுத்த...