வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

Tag: கொரானா வைரஸ்

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுக்கு அரசு கடிதம்!

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுக்கு அரசு கடிதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுக்கு அரசு கடிதம்! இந்தியாவில் கொரானா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வைரஸை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் ஆகியவற்றை ஏற்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தது. அதனைதொடர்ந்து தமிழ்நாடு தலைமைச் செயலர் சண்முகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆய்வு கூட்டங்கள் அரசு மருத்துவர்களும் தனியார் மருத்துவர்களும் கொரானா வைரைஸ் தொடர்பாக ஆய்வு கூட்டங்களை மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.கொரனா வைரஸ் தீவிரம், அதை தடுக்கு வழிமுறைகள், அவசர ஊர்திகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். தனி வார்டுகள் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள்...
கொரானா வைரஸ் பீதி டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாகுமா?

கொரானா வைரஸ் பீதி டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாகுமா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா வைரஸ் பீதி டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாகுமா? டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை 24  ஆம் தேதி முதல்  மற்றும் ஆகஸ்டு 9 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளையில், சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜப்பானையும் கொரோனா வைரஸ் தாக்கம் விட்டு வைக்கவில்லை. இதனால், வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் திட்டமிட்டபடி நடத்தப்படுமா? என்று கேள்விகள் எழுந்தன மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கை வேறு இட...
ஹூகானில் உள்ள இந்தியர்களை மீட்க மீண்டும் சீனா செல்லும் ராணுவ விமானம்!

ஹூகானில் உள்ள இந்தியர்களை மீட்க மீண்டும் சீனா செல்லும் ராணுவ விமானம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சீனாவில் உள்ள ஹூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 136 பேர் உயிரிழந்தாகவும், ஆயிரத்து 749 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுதும் பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வரும் இந்த கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க பல நாடுகளில் மருந்து கண்டுபிடிக்க கடும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் உள்ள ஹூகான் மாகாணத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏற்கெனவே மத்திய அரசு அனுப்பி வைத்த இரு விமானங்கள் மூலம் ஹூகானில் இருந்து 640 இந்தியர்கள் கடந்த 1 மற்றும் 2–ந் தேதிகளில் டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 406 பேர் டெல்லியில் உள்ள இந்தோ–திபெத்திய எல்லை போலீஸ் படை முகாமில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டனர். மற்றவர்கள் அரியா...
கொரானா வைரஸ் பீதி… சீனாவில் கரன்சியை அழிக்க திட்டம்!

கொரானா வைரஸ் பீதி… சீனாவில் கரன்சியை அழிக்க திட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா வைரஸ் பீதி... சீனாவில் கரன்சியை அழிக்க திட்டம்! சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இது வரை 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72,000 பேருக்கு மேல் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுதும் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ், நுண் எச்சில் நீர் துகள்கள் படிந்த கரன்சி நோட்டுகள் மூலம் பரவ வாய்ப்புள்ளதால், ஹூபாய் மாகாணத்தின் ஷாப்பிங் மால்கள், பேருந்துகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் வசூலான கரன்சி நோட்டுகளை எரித்து சாம்பல் ஆக்க சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. அதன் படி வங்கிக்கு வரும் நோட்டுகளை 14 நாட்களில் அல்ட்ரா வைலட் கதிர்கள் மற்றும் அதிக வெப்பதில் வைத்து  நோட்டுகளை அழிக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளதாம். ஏற்கனவே இந்த மாகாணம் முழுதும் உள்ள எல்லைக்குள் யாரும் வரவோ வெளியேறவோ முடியாதபடி அரசு தடை ச...
கொரானா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் சீனாவில் 65 பேர் பலி!

கொரானா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் சீனாவில் 65 பேர் பலி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சீனாவில் தொடரும் சோகம் ... கொரானா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் சீனாவில் 65 பேர் பலி! கொரோனா வைரஸ் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிறப்பு மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளன. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் ...
கொரானா வைரஸ் பீதியால் சீனாவில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து!

கொரானா வைரஸ் பீதியால் சீனாவில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      கொரானா வைரஸ் பீதியால் சீனாவில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து! சீனாவில் இந்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி (நேற்று) சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்ட நாளாக கருதப்பட்டது. ஏனெனில் 02.02.2020 என்ற தேதியை பின்பக்கமாக வாசித்தாலும் ஒரே மாதிரியே இருக்கும். இதனால் இந்த அதிர்ஷ்ட நாளில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை நடத்த சீன மக்கள் முன்னரே திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர். ஆனால் தற்போது அங்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிவேகத்தில் பரவிவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிப்ரவரி 2-ந்தேதி திருமணங்களை நடத்த வேண்டாம் என மக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்தது. இது குறித்து சீன மக்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பிப்ரவரி 2-ந்தேதி அதிர்ஷ்ட நாள் என்று நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ரத்து செய்து விடுங்கள். தற்போது நிலவும் சூழ்நிலையை மற்றவர்கள...
கொரோனா வைரஸ் பீதி – சீனாவில் இருந்து 2வது கட்டமாக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த இந்தியர்கள்!

கொரோனா வைரஸ் பீதி – சீனாவில் இருந்து 2வது கட்டமாக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த இந்தியர்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரோனா வைரஸ் பீதி - சீனாவில் இருந்து 2வது கட்டமாக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த 323 இந்தியர்கள்! சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரசினால் அந்நாட்டில் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளனர். 14,000 நபர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட பல நாடுகளில் இந்த வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  உலக நாடுகள் பலவும் சீனாவில் உள்ள தங்களது குடிமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன.   இதற்கிடையே, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள வுகான் நகரில் உள்ள இந்தியர்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதுகுறித்து சீன அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்ச...