வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

கொரானா வைரஸ் பீதியால் சீனாவில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து!

 

 

 

கொரானா வைரஸ் பீதியால் சீனாவில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து!

சீனாவில் இந்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி (நேற்று) சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்ட நாளாக கருதப்பட்டது. ஏனெனில் 02.02.2020 என்ற தேதியை பின்பக்கமாக வாசித்தாலும் ஒரே மாதிரியே இருக்கும்.

இதனால் இந்த அதிர்ஷ்ட நாளில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை நடத்த சீன மக்கள் முன்னரே திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர். ஆனால் தற்போது அங்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிவேகத்தில் பரவிவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிப்ரவரி 2-ந்தேதி திருமணங்களை நடத்த வேண்டாம் என மக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்தது.

இது குறித்து சீன மக்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பிப்ரவரி 2-ந்தேதி அதிர்ஷ்ட நாள் என்று நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ரத்து செய்து விடுங்கள். தற்போது நிலவும் சூழ்நிலையை மற்றவர்களுக்கு விவரியுங்கள்” என தெரிவிக்கப்பட்டது.

அரசின் இந்த வேண்டுகோள் காரணமாக சீனாவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன. இது, அதிர்ஷ்ட நாளில் தங்களின் திருமணத்தை நடத்த வேண்டுமென திட்டமிட்டிருந்த மணமக்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது.

ஒரு வைரஸ் கிருமி தாக்கத்தால் நாடே ஸ்தம்பித்தது உலகம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

448 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன