வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

பெயரைப் போலவே ரசிகர்களை ஏமாற்றியதா டகால்டி – கோடங்கி விமர்சனம்

 

 

காமெடி ஹீரோ ஆக்‌ஷன் ஹீரோ ஆக முயற்சி எடுத்திருக்கும் படம் தான் டகால்டி.

சின்னச் சின்ன தவறுகளை செய்து பணம் சம்பாதிக்கும் சந்தானத்திடம் ஒரு பெண்ணை கண்டுபிடித்து ஒப்படைக்கும் வேலை கொடுக்கப்படுகிறது. அந்த பெண்தான் ஹீரோயின் ரித்திகா.

அவரை பார்க்காமலேயே படம் வரைந்து வில்லன் தேடுகிறார். அவரிடம் ஹீரோயினை ஒப்படைத்து சந்தானம் பணம் வாங்கினாரா ஹீரோயின் என்ன ஆகிறார் எனபதுதான் டகால்டி கதை.

சந்தானம் நண்பராக முதல்முறையாக யோகிபாபு இணைந்து நடித்திருக்கிறார். அதனால் காமெடி நிச்சயம் என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் தான். ஆனால் அதற்கு பதிலாக சந்தானம் ஆக்‌ஷன் ஹீரோவாக பறந்து பறந்து சண்டை போடுகிறார்.

இயக்குனர் விஜய் ஆனந்த் ஆக்‌ஷனில் காட்டிய தீவிரத்தை கதையிலும் திரைக்கதையிலும் காட்டி இருந்ததால் படம் கண்டிப்பாக பேசப்பட்டிருக்கும்.

படத்துக்கும் பாடல்களுக்கும் தொடர்பில்லாமல் இருப்பதால் மனசில் ஒட்டவில்லை.

ராதாரவி, பிரமானந்தம் உட்பட பலர் இருந்தும் அவர்கள் நடிப்பெல்லாம் கதைக்கு உப்பில்லாத ஊறுகாய் ரகம்.

மொத்தத்தில் டகால்டி என்றால் ஏமாற்றுதல் என்று அர்த்தம். படத்தின் பெயரைப்போலவே கதை காமெடியாக இருக்கும் என்று நம்பி போகும் ரசிகர்களை படம் ஏமாற்றுகிறது.

கடைசியாக ஒன்று … சந்தானம் தனக்கு எது வரும் அல்லது தன்னிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து கதைகளை தேர்வு செய்வது அவரது திரைப்பயணத்திற்கு பயன் படும்.

– கோடங்கி

411 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன