சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: விக்ரம்

விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு!

விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு!

Uncategorized
விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு! விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதையடுத்து, பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், விக்ரமின் அடுத்த படத்தை பா.ரஞ்சித் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்சமயம் சீயான் 61 என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது....
மருத்துவமனையில் கமல்… விக்ரம் படப்பிடிப்பில் மாற்றம்!

மருத்துவமனையில் கமல்… விக்ரம் படப்பிடிப்பில் மாற்றம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
மருத்துவமனையில் கமல்... விக்ரம் படப்பிடிப்பில் மாற்றம்! கமல்ஹாசன் விக்ரம் படத்தின் படப்பிடிப்பிலும், பிக்பாஸ் படப்பிடிப்பிலும் மாறி மாறி பங்கேற்று வந்தார். இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் படப்பிடிப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் விக்ரம் பட வேலைகள் தாமதமாகி உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் சார்பில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அப்போது ஆஸ்பத்திரியில் இருந்தபடியே கமல்ஹாசன் பேசிய காட்சிகளை திரையில் ஒளிபரப்பினர். அதில், ‘‘கொரோனா தடுப்பூசி போட்டதால் எனக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. கொரோனா அச்சம் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று கூறினார். விக்ரம் படத்தில் கமல்ஹாசனும், வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதியும் நடிக்கும் சண்டை காட்சியை படமாக்க பொள்ளாச்சியில் அரங்கு...
கமல் பிறந்தநாளுக்கு விக்ரம் படக்குழுவினர் கொடுத்த பரிசு!

கமல் பிறந்தநாளுக்கு விக்ரம் படக்குழுவினர் கொடுத்த பரிசு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமல் பிறந்தநாளுக்கு விக்ரம் படக்குழுவினர் கொடுத்த பரிசு! கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நடிகர் கமல் தனது பிறந்தநாளை நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாட இருக்கிறார். இதையொட்டி விக்ரம் படக்குழுவினர் ஒரு வாரத்திற்கு முன்பே படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பகத் பாசில், நடன இயக்குனர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். நாளை பிறந்தநாள் கொண்டாட இருக்கும் நிலையில், தற்போது விக்ரம் படக்குழுவினர் சிறப்பு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். இந...
மாஸான அப்டேட்டை வெளியிட்ட ‘மகான்’ படக்குழு – ரசிகர்கள் உற்சாகம்!

மாஸான அப்டேட்டை வெளியிட்ட ‘மகான்’ படக்குழு – ரசிகர்கள் உற்சாகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாஸான அப்டேட்டை வெளியிட்ட ‘மகான்’ படக்குழு - ரசிகர்கள் உற்சாகம்! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மகான்’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘மகான்’ படத்தில் இடம்பெறும் ‘சூறையாட்டம்’ என்கிற பாடல் வருகிற செப்டம்பர் 22-ந் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். மகான் படக்குழு வெளியிட்டுள்ள இந்த திடீர் அப்டேட்டால் ரசி...
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்!

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்! மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க இருக்கிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷிவானி இணைய இருப்பதாக த...
மகான்-ஆக மாறிய விக்ரம் – வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மகான்-ஆக மாறிய விக்ரம் – வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மகான்-ஆக மாறிய விக்ரம் - வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தை இதுவரை ‘சியான் 60’ என்று அழைத்து வந்தனர். தற்போது இப்படத்திற்கு ‘மகான்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது....
‘சியான் 60’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘சியான் 60’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES
‘சியான் 60’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘சியான் 60’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘சியான் 60’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், சியான் 60 படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 20-ந் தேதி ‘சியான் 60’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா!

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா! நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் வில்லனாக நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகப்பு நிற கோர்ட் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, கோடு ரெட் (code RED) என குறிப்பிட்டுள்ளார். விக்ரம் படத்தின் பர்ஸ்ட் ...
விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் விக்ரம் படத்தில் இணைந்திருக்கிறார். இதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதிபடுத்தி இருக்கிறார். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக காளிதாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்....
கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த ‘கைதி’ பட பிரபலம்!

கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த ‘கைதி’ பட பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த ‘கைதி’ பட பிரபலம்! நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதேபோல் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில், பிரபல நடிகர் நரேன், விக்ரம் படத்தில் இணைந்துள்ளார். இதன்மூலம், கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நடிகர் நரேன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் 2-வது படம் இதுவாகும். அவர் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பி...