நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் எதிர்மனுதாரர் பட்டியலிலிருந்து தன்னை நீக்க கோரிய நடிகர் விஷாலின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில், படம் தோல்வி அடைந்ததையடுத்து,
1 கோடியே 51 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக சிம்பு தரப்பில், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் தன்னை குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக கூறி 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக நடிகர் சிம்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், தயா...
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தோன்றி பிறகு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிம்பு. 1984-இல் இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ’உறவு காத்த கிளி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதன்பின் தொடர்சியாக குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து காதல் அழிவதில்லை, தம், அலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்தார்.
நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பல பரிணாமங்களில் கைதேர்ந்தவர் சிம்பு.
இருப்பினும் சிம்புவின் மீது பல விமரசனங்கள் வைக்கப்பட்டு வந்தது. படங்களில் சற்று கவனம் செலுத்த தவறிய சிம்பு திடீரென அவரின் உடல் எடை அதிகரித்தது.
2019-இல் வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளியான போது சுமார் 105 கிலோ எடையுடன் பருமனான கதாநாயகனாக திரையில் தோன்றினார். இதன் காரணமாக சமூக வலைதளங்களில் உடல் எடைக்காக நடிகர் சிம்பு அ...
சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு படத்திற்கு கிடைத்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இதில் நடித்த எஸ்.ஜே.சூர்யா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணையபோவதாக சினிமா வட்டாரங்கள் முணுமுணுத்து வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் டிரைவிங் லைசென்ஸ். இந்த படத்தில் பிருத்விராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதனை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் பரவுகிறது. இந்த ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் மீண்டும் சிம்பு-எஸ்.ஜே....
கடந்த சில வருடங்களாக ஒரு மெகாஹிட் படத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்த சிம்புவிற்கு மாநாடு திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று 100 கோடி வசூல் சாதனை செய்தது.
இந்நிலையில் தொடர் வெற்றிக்கான முயற்சியில் சிம்பு அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல ஆகிய படங்களில் தற்போது நடித்துகொண்டுவருகிறார். மேலும் ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து ஒரு அறிவிப்பு வந்துள்ளது.
இப்படத்தின் பட...
சிம்புவின் மாநாடு படத்தை நக்கல் அடித்து மீம்ஸ் வீடியோ வெளியிட்ட பிரேம்ஜி!
அண்ணன் வெங்கட் பிரபு படத்தையே கலாய்த்து அவரது தம்பி பிரேம்ஜி பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
டைம் லூப் திரைக்கதையில் உருவாக்கப்பட்ட மாநாடு படத்தில் ஒரே காட்சிகள் திரும்பத் திரும்ப இடம்பெறும். ஆனால் காட்சியமைக்கப்பட்ட விதம் மற்றும் எடிட்டிங், பின்னணி உள்ளிட்டவை காரணமாக மாநாடு படத்தின் ஒவ்வொரு சீன்களையும், ரசிகர்கள் ரசித்துப் பார்த்தனர்.
ஆனால், ஒரு சிலருக்கு மாநாடு படம் இன்று வரையில் புரியாமல் இருப்பதையும் மறுக்க முடியாது. அவர்களில் ஒரு ரசிகர் மாநாடு படம் தனக்கு பிடிக்கவில்லை என்று விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி, வெங்கட் பிரபுவையும் டேக் செய்துள்ளார்.
https://twitter.com/Premgiamaren/status/1482559144658083845?ref_...
மாநாடு படத்துக்கு குவியும் விருதுகள்!
ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாநாடு’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார். இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இப்படம் பல தடைக்களை கடந்து நவம்பர் 25ம் தேதி தியேட்டரில் வெளியானது. படம் பார்த்த அனைவரும் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். தற்போது இப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், மாநாடு திரைப்படம் நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த இயக்குனராக வெங்கட் பிரபு, சிறந்த இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா, சிறந்த வில்லன் நடிகராக எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிறந்த எடிட்டிங்குக்கா...
ரசிகர்களுக்கு நேரில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சிம்பு!
ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் பல தடைகளை கடந்து நவம்பர் மாதம் 25-ந்தேதி தியேட்டரில் வெளியானது. அடுத்த சில நாட்களில் மாநாடு படத்தின் வெற்றியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் சிம்பு கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் சில தினங்களுக்கு முன்பு மாநாடு படத்தின் 25 வது நாளை படக்குழுவினர் கொண்டாடினார்கள்.
இந்நிலையில் மாநாடு படம் ஹிட் ஆனதையொட்டி நடிகர் சிம்பு தன் ரசிகர்களுடன் ஒரு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவ்விழா ஜனவரி 6-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்...
மருத்துவமனையில் சிம்பு அனுமதி
நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓட்டிக்கொண்டு இருக்கும் படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
...
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன.
அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. அண்ணாத்தே மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. அம்பது விழுக்காடு இருக்கை ஆக்ரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பை தந்தது திரைத் துறையினருக்கு நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியை தொழில் செய்யும் வெகுமதியாகப் பார்த்தோம் நன்றியோடு!
ஆனால், இப்போது வேக்சினேசன் செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது அத்தனை திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுக்க தடுப்பூசி இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை.
பதினெட்டு வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கவில்லை.
அவர்கள...