சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி பாடல் படைத்த சாதனை!

விஜய் சேதுபதி பாடல் படைத்த சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
விஜய் சேதுபதி பாடல் படைத்த சாதனை! விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’. எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், யாழா யாழா என்ற முதல் சிங்கில் பாடலும் டிரெண்டிங்கில் இடம்பெற்றது. இதையடுத்து யாமிலி யாமிலியா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடல் வெளியான 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது....
இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட்!

இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட்! ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய்சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாகி, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 என்று பல படங்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தன. விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது லாபம் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் ரம்ஜான் பண்டிகை நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி எடுத்த போட்டோ ஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. Man of Fusion என்ற தலைப்பில் பிரபல புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன் இந்த புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்....
லாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
லாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி லாபம் படம் வருகிற ரம்ஜான் பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவக...
‘சூரி – வெற்றிமாறன் – விஜய் சேதுபதி’ இணையும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘சூரி – வெற்றிமாறன் – விஜய் சேதுபதி’ இணையும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘சூரி - வெற்றிமாறன் - விஜய் சேதுபதி’ இணையும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு ‘விடுதலை’ என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராக நடிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்ப...
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’!

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’! தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதால் அரசு இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்து உள்ளது. இதனால் சினிமாத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் தினமும் இரவுக் காட்சிகளை ரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் தான் திரையரங்கிற்கு அதிக கூட்டம் வரும். அன்று முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளதால் கடும் நஷ்டம் ஏற்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தயாரிப்பாளர்கள் கவனம் மீண்டும் ஓடிடி தளங்கள் பக்கம் திரும்பி உள்ளது. அந்தவகையில், விஜய் சேதுபதி நடிப்பில் உர...
பிரபல இயக்குனருடன் 3-வது முறையாக இணையும் விஜய் சேதுபதி!

பிரபல இயக்குனருடன் 3-வது முறையாக இணையும் விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபல இயக்குனருடன் 3-வது முறையாக இணையும் விஜய் சேதுபதி! ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய்சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாகி, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 என்று பல படங்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தன. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதும், இமேஜ் பார்க்காமல் வில்லன், திருநங்கை, முதியவர் தோற்றங்களில் நடிப்பதுமே அவரை பெரிய நடிகராக்கி உள்ளது. பிறமொழி படங்களிலும் வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலமான, இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்க...
புது கார் வாங்கிய குட்டி ‘பவானி’…. நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி!

புது கார் வாங்கிய குட்டி ‘பவானி’…. நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
புது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி! ‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். பொங்கலுக்கு விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில், மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளம் வயது விஜய் சேதுபதியாக ‘பவானி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து எல்லோராலும் பாராட்டப்பட்டார் மகேந்திரன். சமீபத்தில் அவர் புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். தற்போது அந்த காருடன் நடிகர் விஜய் சேதுபதியை, அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் மகேந்திரன். அந்த காரை ஓட்டிப் பார்த்த விஜ...
‘கர்ணன்’ படம் பார்த்ததும் மாரி செல்வராஜை முத்தமிட்டு வாழ்த்திய விஜய் சேதுபதி!

‘கர்ணன்’ படம் பார்த்ததும் மாரி செல்வராஜை முத்தமிட்டு வாழ்த்திய விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘கர்ணன்’ படம் பார்த்ததும் மாரி செல்வராஜை முத்தமிட்டு வாழ்த்திய விஜய் சேதுபதி! மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் ஹீரோயினாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, நட்டி நட்ராஜ், யோகிபாபு, லால், கவுரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தாணு தயாரித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் உட்பட படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் ‘கர்ணன்’ படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளனர். இதனிடையே, படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்காக ‘கர்ணன்’ படத்தின் சிறப்புக் காட...
அழகான மனிதரை சந்தித்ததில் பெருமை… பிரபல நடிகரை புகழும் துருவ் விக்ரம்!

அழகான மனிதரை சந்தித்ததில் பெருமை… பிரபல நடிகரை புகழும் துருவ் விக்ரம்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அழகான மனிதரை சந்தித்ததில் பெருமை... பிரபல நடிகரை புகழும் துருவ் விக்ரம்! நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ‘வர்மா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது தந்தை விக்ரமுடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் துருவ் விக்ரம். இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் ’இந்த அழகான மனிதரை சந்தித்ததால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துருவ் விக்ரம் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
விஜய் சேதுபதி அறிமுகமாகும் பாலிவுட் படத்தின் மாஸான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

விஜய் சேதுபதி அறிமுகமாகும் பாலிவுட் படத்தின் மாஸான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சேதுபதி அறிமுகமாகும் பாலிவுட் படத்தின் மாஸான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாநகரம். இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. மும்பைகார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுகமாகிறார். தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் நாயகனான விக்ராந்த் மஸ்ஸேவின் பிறந்தநாளான இன்று, மும்பைக்கார் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விக்ராந்த் மஸ்ஸே, விஜய் சேதுபதி உள்பட சில நடிகர்களின் தோற்றங்களுடன் கூடிய இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....