நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் பான் இந்திய படைப்பான 'மைக்கேல்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் நட சிம்ஹம் நந்தமுரி பாலகிருஷ்ணா, தமிழில் முன்னணி நட்சத்திர பிரபலங்கள் ஜெயம் ரவி மற்றும் அனிருத் ரவிச்சந்தர்,
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரம் நிவின்பாலி ஆகியோர் இணைந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படம் 'மைக்கேல்'.
இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்.
இவருடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், வருண...
*வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து சேவையாற்ற வேண்டும் - தொழிலதிபர் நல்லி குப்புசாமி*
*வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய நாள்தோறும் நல்ல விசயங்களைத் தேடித் தேடிக் கற்கிறோம்- ‘இறைவி’ விற்பனையக நிறுவனர் ஜெயஸ்ரீ ராஜேஷ்*
சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ எனும் விற்பனையகமும் ஒன்று.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் 'இறைவி' விற்பனையகம் ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது.
இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவன வள...
*பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டீசர் !*
இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்றான “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் அழகான டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, ரசிகர்களிடம் எக்கசக்க எதிர்பார்ப்பு நிலவி...
‘தெருகூத்துக் கலைஞனி’ல் மீண்டும் இணைந்திருக்கும் எல். ராமச்சந்திரன் - விஜய் சேதுபதி கூட்டணி
விஜய் சேதுபதியின் ‘தெருகூத்து கலைஞன்’ காலண்டர் வெளியீடு
தமிழகத்தின் தொன்மையான கலைகளில் தெருக்கூத்து கலையும் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தெருக்கூத்து கலையை, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் இது அடர்த்தியுடன் கடத்துவதற்காக பல கடினமான சூழல்களையும் எதிர்கொண்டு, போற்றி பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இத்தகைய கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகவே தொடர்கிறது.
நலிவடைந்து இருக்கும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரசாங்கம் மாதந்தோறும் நிதி உதவி அளித்து வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான முனைவர் எல். ராமச்சந்திரன் பிரத்யேக முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறார்.
தெருக்கூத்து க...
6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன்!
கொரோனாவால் முடங்கிய பெரிய நடிகர்கள் படங்களின் படப்பிடிப்புகள் வேகவேகமாக முடிந்து தற்போது அடுத்தடுத்து திரைக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் `டான்' ஆகிய 2 படங்களையும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
ஏற்கனவே 2016-ல் விஜய்சேதுபதியின் றெக்க, சிவகார்த்திகேயனின் `ரெமோ' ஆகிய 2 படங்களும் ஒரே நாளில் மோதின. 6 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இருவர் படங்களும் மோத வருகின்றன. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த `டாக்டர்' படம் எந்த பெரிய படங்களும் போட்டிக்கு வராத நிலையில் தனித்து வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படம் ரூ.100 கோடி வரை வசூல் பார்த்ததாக கூறப்பட்டது.
விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ்...
சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர், தற்போது சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.
உலகம் முழுவதும் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சி தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்கிறார்கள். அந்த நிகழ்ச்சியை தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். ‘மாஸ்டர் செஃப் இந்தியா - தமிழ்’ என்ற பெயரில் இந்நிகழ்ச்சி தயாராகியுள்ளது.
உலகளவில் பிரபலமான இந்நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதால், இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஏற்கனவே ரசிகர்களிடம் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக இந்நிகழ்ச்சி அமையு...
கொரோனா பாதிப்பு எதிரொலி.... விஜய் சேதுபதியின் பாலிவுட் பட ஷூட்டிங் ஒத்திவைப்பு!
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘அந்தாதூன்’. 3 தேசிய விருதுகளை வென்ற இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பும் நடிக்க ஒப்பந்தமாகினார்.
இப்படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் 15-ந் தேதி தொடங்க திட்டமிட்டு இருந்தனர். அந்த சமயத்தில் நடிகை கத்ரீனா கைப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால், படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்ட போதிலும், நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருவதால், படப்பிடிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளனர்.
இதுதவிர நடிகர் விஜய் சேதுபதி காந்தி டாக்கீஸ், மும்பைகார் போன...
விஜய் சேதுபதி பாடல் படைத்த சாதனை!
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’. எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், யாழா யாழா என்ற முதல் சிங்கில் பாடலும் டிரெண்டிங்கில் இடம்பெற்றது.
இதையடுத்து யாமிலி யாமிலியா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடல் வெளியான 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது....
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’!
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதால் அரசு இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்து உள்ளது. இதனால் சினிமாத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் தினமும் இரவுக் காட்சிகளை ரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் தான் திரையரங்கிற்கு அதிக கூட்டம் வரும். அன்று முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளதால் கடும் நஷ்டம் ஏற்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தயாரிப்பாளர்கள் கவனம் மீண்டும் ஓடிடி தளங்கள் பக்கம் திரும்பி உள்ளது. அந்தவகையில், விஜய் சேதுபதி நடிப்பில் உர...