சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: அஜித்

அஜித் ஹீரோவாக நடிக்கும் வலிமை பட டப்பிங் முடிந்தது!

அஜித் ஹீரோவாக நடிக்கும் வலிமை பட டப்பிங் முடிந்தது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் ஹீரோவாக நடிக்கும் வலிமை பட டப்பிங் முடிந்தது! அஜித்-எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதனை ஸ்பெயின் நாட்டில் படமாக்க உள்ளனர். ஸ்பெயின் அரசின் அனுமதிக்காக படக்குழு காத்திருக்கின்றனர். அனுமதி கிடைக்க தாமதமாவதால், கடந்த சில நாட்களாக, வலிமை படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறதாம். அதேபோல் நடிகர் அஜித் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் அஜித்தின் பிற...
அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போகும் வெங்கட் பிரபு!

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போகும் வெங்கட் பிரபு!

CINI NEWS, செய்திகள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மங்காத்தா'. இது அஜித்தின் 50-வது திரைப்படம். அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்ற படம் இது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், அஜித்தின் ரசிகர்கள் ஆவலுடன் ‘மங்காத்தா 2' குறித்த தகவல்களை வெங்கட் பிரபுவிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் அதிரடியான பதிலை கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். இது பற்றி பேசிய வெங்கட் பிரபு, ‘மங்காத்தா 2' படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால், கண்டிப்பாக அஜித்துடன் ஒரு திரைப்படம் பண்ண ஆவலுடன் இருக்கிறேன். மங்காத்தா 2 எடுக்க நான் தயாராக இருக்கிறேன். மேலும் நிச்சயமாக அஜித்துடன் இன்னொரு படமும் பண்ணுவேன் என்று தெரிவித்திருக்கிறார். வெங்கட் பிரபுவின் இந்த அறிவிப்பு...
போனி கபூருக்காக அஜித்தின்  “தல 59” படத்தில் நடிக்கிற  வித்யாபாலன்..!

போனி கபூருக்காக அஜித்தின் “தல 59” படத்தில் நடிக்கிற வித்யாபாலன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். போனிகபூர் தயாரிப்பிலேயே அடுத்தடுத்து இரண்டு படங்களில் அஜித் நடிக்கிறார் என அவரது பி.ஆர்.ஓ.சுரேஷ்சந்திரா கூறியிருக்கிறார். https://twitter.com/SureshChandraa/status/1086618560107933696 வித்யா பாலன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் வித்யா பாலன் எப்போதும் கண்டிப்பாக இருப்பார் என்ற பெயர் இந்தி சினிமாவில் உண்டு. முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை மட்டுமே அவர் தேர்வு செய்வார். ரீமேக் படங்களில் நடிக்கக் கூடாது என்பதையும் வழக்கமாகவே வைத்திருந்தார். மூன்றாம் பிறை படம் இந்தியில் சத்மா என்ற பெயரில் 1983-ம் ஆண்டு உருவானது. அந்தப் படத்தை மீண்டும் இந்தியில் ரீமேக் செய்வதற்காக ஸ்ரீதேவி கதாபாத்திரத்த...
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை – சிவா

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை – சிவா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வந்தது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இரண்டு அஜித் இருந்ததால் இந்த தகவல் பரவியது. ஆனால் விஸ்வாசம் படத்தில் ஒரு அஜித் தான் என்று இயக்குனர் சிவா கூறி இருக்கிறார். படத்தின் கதை பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் ‘தேனி மாவட்டத்தில் கொடுவிலார்பட்டி என்கிற கிராமத்தில் நடக்கும் கதை இது. வெளியே வீரமாகவும், உள்ளுக்குள்ளே வெள்ளந்தியாகவும் வாழும் மனிதர்களின் உணர்வுபூர்வமான சம்பவங்கள்தான் `விஸ்வாசம்’. படத்தில் அஜித்துக்கு ஒரே ஒரு வேடம்தான். முரட்டு மீசையோடு அலப்பறையான தடாலடி ஆசாமி ‘தூக்குதுரை’ அஜித். முதல்பாதியில் தேனி கிராமத்துத் திருவிழாக் கொண்டாட்டத்தில் அதிரடி செய்கிறார். இடைவேளைக்குப் பிறகு நகரத்தில் தூள் கிளப்...
கஜா புயல் சேதம் – அஜித் ரூ.15 லட்சம் நிதியுதவி

கஜா புயல் சேதம் – அஜித் ரூ.15 லட்சம் நிதியுதவி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். இதற்கிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் இன்று மாலை பார்வையிட்டு வருகின்றனர். இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 நன்கொடை வழங்கியுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சம்  வழங்கியுள்ளார். அஜீத் இந்த நிதியை வழங்கி பல நாட்கள் ஆகியும் அரசு ...
விஸ்வாசம் படக்குழுவின் புதிய அறிவிப்பு

விஸ்வாசம் படக்குழுவின் புதிய அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் நடிப்பில், சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. அஜித் இரு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தில், தெலுங்கு வில்லன் நடிகரான ரவி அவானா, வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அஜித் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் இந்தப் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....