திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

Tag: VIJAY

சைக்கிளில் வந்த விஜய்!

சைக்கிளில் வந்த விஜய்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சைக்கிளில் வந்த விஜய்! தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி ஆகியோர் வாக்குகளை செலுத்தினர். இதையடுத்து நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சைக்கிளில் வந்தார். விஜய் சைக்கிளில் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உற்சாக குரல் எழுப்பினர். விஜய் வாக்களிக்க வந்து சென்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியிருக்கிறது. பெட்ரோல் விலை உயர்வை இப்படி குறியீடாக சொல்லியிருக்கிறார் என்று சமூகவலைத்தளத்தில் பேசப்பட்டது. இதனால், சைக்கிளில் வந்த நடிகர் விஜய் ஸ்கூட்டரில் திரும்பிச் சென்றார்....
‘மாஸ்டர்’ படத்தின் ரீமேக் உரிமையை பெற பாலிவுட்டில் கடும் போட்டி!

‘மாஸ்டர்’ படத்தின் ரீமேக் உரிமையை பெற பாலிவுட்டில் கடும் போட்டி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
‘மாஸ்டர்’ படத்தின் ரீமேக் உரிமையை பெற பாலிவுட்டில் கடும் போட்டி! கொரோனா பரவலுக்கு பின் களையிழந்து காணப்பட்ட திரையரங்குகளுக்கு, புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது. இப்படம் திரையரங்குகளில் வெளியான 16 நாட்களில் ஓடிடியில் வெளியிடப்பட்ட போதிலும் நிறைய இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின. மாஸ்டர் படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், அதனை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்கான உரிமையை பெற இந்தி தயாரிப்பாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறதாம். விரைவில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்க மாஸ்டர் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம்,...
தளபதி 65 படத்தில் வில்லனாக நடிப்பது உண்மையா? – நடிகர் வித்யூத் ஜமால் விளக்கம்!

தளபதி 65 படத்தில் வில்லனாக நடிப்பது உண்மையா? – நடிகர் வித்யூத் ஜமால் விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தளபதி 65 படத்தில் வில்லனாக நடிப்பது உண்மையா? - நடிகர் வித்யூத் ஜமால் விளக்கம்! நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. இப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமால் வில்லனாக நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இதனை நடிகர் வித்யூத் ஜமால் மறுத்துள்ளார். மேலும் விஜய்யுடன் நடிக்க ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என துப்பாக்கி பட பாணியில் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் வித்யூத் ஜமால், துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனா...
‘கே.ஜி.எப்’ இயக்குனருடன் இணையும் விஜய்!

‘கே.ஜி.எப்’ இயக்குனருடன் இணையும் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘கே.ஜி.எப்’ இயக்குனருடன் இணையும் விஜய்! கே.ஜி.எப் எனும் மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். அடுத்ததாக கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கி முடித்துள்ள அவர், தற்போது பிரபாஸை வைத்து ‘சலார்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப் பல்வேறு முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாகவும், இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது. மேலும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கோலிவுட் வட்டாரத்தினர் இது உண்மைய...
தளபதி 65 படத்தில் நடிக்கும் கவின்!

தளபதி 65 படத்தில் நடிக்கும் கவின்!

HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தளபதி 65 படத்தில் நடிக்கும் கவின்! சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். இதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார். கவின் நடிப்பில் தற்போது லிப்ட் என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கவின் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற தளபதி 65 படத்தின் பூஜையில் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டனர். அதில் கவினும் கலந்துகொண்டதால், அவர் இப்படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதுதவிர வி.டி.வி கணேஷும் இப்படத்தில் நடிக்க உள்ளாராம். தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல...
தளபதி 65 அப்டேட் கொடுத்த நடன இயக்குனர்!

தளபதி 65 அப்டேட் கொடுத்த நடன இயக்குனர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தளபதி 65 அப்டேட் கொடுத்த நடன இயக்குனர்! மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கிறார். விஜய்யின் 65-வது படமான இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த நிலையில் தளபதி 65 படத்தில் ஜானி மாஸ்டர் நடனப்பயிற்சிக்காக இணைந்திருக்கிறார். இதுபற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில், “என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இந்த வாய்ப்பை மதிப்பு நிறைந்த ஒன்றாக மாற்றுவேன்.” என்ற பதிவுடன், இந்த பாடலுக்கான ரிகர்சல் ஏப்ரல் 24ம் தேதி என்றும், மே 3 முதல் 9 வரை பாடலின் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்....
விஜய்-வெற்றிமாறன் காம்போ!

விஜய்-வெற்றிமாறன் காம்போ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய்-வெற்றிமாறன் காம்போ! தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பவர் வெற்றிமாறன். தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படம், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து தயாராகி வருகிறது. நடிகர் விஜய்சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில், நடிகர் விஜய்யை வைத்து விரைவில் படம் இயக்க உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார். சூரி நடிக்கும் படத்தை முடித்த பின் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ள வெற்றிமாறன், அதன்பின் விஜய் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது....
இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ!

இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் செகண்ட் புரோமோ வெளியாகியுள்ளது .   https://twitter.com/Jagadishbliss/status/1346796208568770565?s=20 தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனான வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆவலில் உள்ளனர். இந்நிலையில் இன்று விஜய்யின் மாஸ் வசனங்களுடன் செகண்ட் புரோமோ இணையத்தை தெறிக்க விடுகிறது. அதில் ‘இதுக்கு முன்னாடி இங்க வந்த வங்கலாம் உயிர் பயத்தால ஓடிப்போய்ருக்கலாம் ஆன...
ஜனவரி 13-ந் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் படம் ரிலீஸ்!

ஜனவரி 13-ந் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் படம் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் விஜய்யின் 64-வது படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது. இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர். ஏற்கனவே படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு, தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற ஜனவரி 13-ந் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
பிற்பகல் 12.30 மணிக்கு ‘மாஸ்டர்’ ரிலீஸ் அப்டேட்!

பிற்பகல் 12.30 மணிக்கு ‘மாஸ்டர்’ ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிற்பகல் 12.30 மணிக்கு ‘மாஸ்டர்’ ரிலீஸ் அப்டேட்! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதமே இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர். ஏற்கனவே படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு, தற்போது அடுத்த அப்டேட்டுக்காக மாஸான வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த டுவிட்டில் “ஒலிக்கும் பேர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்... தடுக்கும் காலம் தாண்டி அது பரவி நிற்கும்” பிரம்மாண்டமான ரிலீஸ் அப்டேட் நாளை பிற்பகல் 12.30 மணிக...