வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

திரைப்படங்கள்

‘ஜகமே தந்திரம்’-முக்கிய அப்டேட்!

‘ஜகமே தந்திரம்’-முக்கிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘ஜகமே தந்திரம்’-முக்கிய அப்டேட்! பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ‘ரகிடா ரகிடா’ மற்றும் ‘புஜ்ஜி’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே 22-ந் தேதி ‘நேத்து’ என்கிற பாடல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்பாடல் வெளியிடப்படும் என அறி...
‘ஜன கன மன’ இயக்குனருடன் ஜெயம் ரவி கூட்டணி!

‘ஜன கன மன’ இயக்குனருடன் ஜெயம் ரவி கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘ஜன கன மன’ இயக்குனருடன் ஜெயம் ரவி கூட்டணி! ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படம் கடந்த ஜனவரியில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. தற்போது மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’, அஹ்மத் இயக்கும் ‘ஜன கன மன’ ஆகிய படங்கள் ஜெயம் ரவி கைவசம் உள்ளன. ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு பாதி முடிந்துள்ள நிலையில் கொரோனாவால் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. ‘ஜன கன மன’ படப்பிடிப்பும் பாதியில் நிற்கிறது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். இந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க வேண்டி உள்ளது. ஆனால் வெளிநாடுகளில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ‘ஜன கன மன’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால், நடிகர் ஜெயம்ரவி, இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் மற்றொரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் முழு படப்பிடி...
‘இந்தியன் 2’ பிரச்சனை எதிரொலி….ஷங்கருக்கு ராம்சரண் புதிய நிபந்தனை!

‘இந்தியன் 2’ பிரச்சனை எதிரொலி….ஷங்கருக்கு ராம்சரண் புதிய நிபந்தனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘இந்தியன் 2’பிரச்சனை எதிரொலி....ஷங்கருக்கு ராம்சரண் புதிய நிபந்தனை! கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படம் முடங்கியதால், இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாரானார். இதுபோல் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க உள்ளதாகவும் அறிவித்தார். இது சர்ச்சையானது. ‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்தப் பிரச்சினையில் இருதரப்புக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் தெலுங்கு, இந்திப் படங்களை இயக்க அனுமதிக்க வேண்டாம் என்று அங்குள்ள திரைப்பட வர்த்தக சபைகளுக்கும் ‘இந்தியன் 2’ பட நிறுவனம் கடிதம் அனுப்பி உள்ளது. இந்த சர்ச்சைகளை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க ராம்சரண் தயங்கு...
‘ஒத்த செருப்பு’ விரைவில் இந்தியும் ஆங்கிலமும் பேச இருக்கிறது – பார்த்திபன்!

‘ஒத்த செருப்பு’ விரைவில் இந்தியும் ஆங்கிலமும் பேச இருக்கிறது – பார்த்திபன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘ஒத்த செருப்பு’ விரைவில் இந்தியும் ஆங்கிலமும் பேச இருக்கிறது - பார்த்திபன்! நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தினார் பார்த்திபன். இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் வியந்து பாராட்டினர். இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. இந்நிலையில், ஒத்த செருப்பு படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். ஒத்த செருப்பு படத்தின் இந்தி ரீமேக்கில் நவாசுதீன் சித்திக் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆங்கில ரீமேக்கில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் எ...
கமலின் விக்ரம் படத்தில் இணையும் மலையாள நடிகர்!

கமலின் விக்ரம் படத்தில் இணையும் மலையாள நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமலின் விக்ரம் படத்தில் இணையும் மலையாள நடிகர்! நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகினார் ஆண்டனி வர்கீஸ். இதனால் அவரை விக்ரம் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்த பின் இப்படத்தின் படப்பிடி...
பாலா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஆர்.கே.சுரேஷ்!

பாலா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஆர்.கே.சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாலா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஆர்.கே.சுரேஷ்! மலையாளத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில்  ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ‘ஜோசப்’ படத்தை இயக்கிய பத்மகுமாரே அதன் தமிழில் ரீமேக்கான விசித்திரனையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹீரோயினாக பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய நடிகர் ஆர்.கே.சுரேஷ், முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலனையில் இருந்ததாகவும், இயக்குனர் பாலா தான் தன்னை பரிந்துரைத்ததாகவும் அவர் கூறி உள்ளார். மேலும் இ...
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்!

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதன் படப்பிடிப்பிற்காக கடந்த ஒரு மாதமாக ஐதராபாத்தில் தங்கி இருந்த ரஜினிகாந்த், சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். விரைவில் டப்பிங் பணிகளில் கலந்துகொள்ள உள்ள அவர், அது முடிந்ததும், அடுத்த மாதம் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா சென்று வந்த பின் நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு தயாராக் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று வந்த பின், நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக புத...
இதுவரை எந்த ஹீரோயினும் நடித்திராத வேடத்தில் நடித்துள்ளேன் – பூஜா ஹெக்டே!

இதுவரை எந்த ஹீரோயினும் நடித்திராத வேடத்தில் நடித்துள்ளேன் – பூஜா ஹெக்டே!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இதுவரை எந்த ஹீரோயினும் நடித்திராத வேடத்தில் நடித்துள்ளேன் - பூஜா ஹெக்டே! தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தெலுங்கில் பிரபாசுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம், அகில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் படத்தில் இதுவரை எந்த கதாநாயகிகளும் நடித்திராத, ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம் பூஜா ஹெக்டே. ஸ்டாண்ட் அப் காமெடி செய்பவராக இந்தப்படத்தில் நடித்து உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்....
தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘தேன்’!

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘தேன்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘தேன்’! கணேஷ் விநாயகன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படம் தேன். இப்படத்தில் தருண் குமார் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலமாக பிரபலமான அபர்ணதி மலைவாழ் பெண்ணாக நடித்துள்ளார். தேன் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார்களாம். இதன் தெலுங்கு ரீமேக்கையும், கணேஷ் விநாயகன் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் கதாநாயகனாக ஆதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் மிருகம், அரவான், மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ‘சூரரைப் போற்று’!

சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ‘சூரரைப் போற்று’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ‘சூரரைப் போற்று’! சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா, வருகிற ஜுன் 11 ம் தேதி துவங்கி 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காலம் என்பதால், ஷாங்காய் திரைப்பட விழா இந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட உள்ளதாம்....