சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: அஜித்

வலிமை படம் ஓடிய தியேட்டரில் குண்டு வீசிய நபர் கைது!

வலிமை படம் ஓடிய தியேட்டரில் குண்டு வீசிய நபர் கைது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்திருந்த இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள், அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அச்சமயத்தில் கோவை காந்திபுரத்தில் உள்ள கங்கா யமுனா காவேரி என்ற திரையரங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓடினர். இதில் இருசக்கர வாகனம் ஒன்று சேதமடைந்திருந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், குடிபோதையில் ரசிகர்களிடம் தகராறில் ஈடுபட்டதை தட்டி கேட்டதால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக...
ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்த்த வலிமை படக்குழுவினர்!

ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்த்த வலிமை படக்குழுவினர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது. வலிமை ரிலீசையொட்டி ரசிகர்கள் தியேட்டரில் பட்டாசு வெடித்து, நடனம் ஆடி திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள். மேலும் அஜித்துக்கு கட்-அவுட் வைத்து மாலை போட்டும் அலங்கரித்து வைத்தார்கள். இந்நிலையில், வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், நாயகி ஹுமா குரேஷி, வில்லன் கார்த்திகேயா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்திருக்கிறார்கள். இவர்கள் தியேட்டரில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது....
என் சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படம் – ஹூமா குரோஷி!

என் சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படம் – ஹூமா குரோஷி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நாளை (24.02.2022) வெளிவர இருக்கும் திரைப்படம் 'வலிமை'. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, போன்ற பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்ததை குறித்து நடிகை ஹூமா குரேஷி பகிர்ந்துள்ளார். அவர் கூறியது, “வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பான ஒரு படம், எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம் எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர...
அஜித் படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

அஜித் படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அஜித் படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை! அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் கொரோனா பரவலால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து அஜித் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை தபு தமிழில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்....
வலிமை டிரைலர் படைத்த சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!

வலிமை டிரைலர் படைத்த சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வலிமை டிரைலர் படைத்த சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்! அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். வெளியான சில மணி நேரங்களில் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை செய்தது. தற்போது வரைக்கும் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்....
வலிமை படத்தின் மாஸான மேக்கிங் வீடியோ!

வலிமை படத்தின் மாஸான மேக்கிங் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வலிமை படத்தின் மாஸான மேக்கிங் வீடியோ! வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கனவே அறிவித்தார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. https://youtu.be/n2HiLyWHrWc  ...
பட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் – அஜித் திடீர் அறிக்கை!

பட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் – அஜித் திடீர் அறிக்கை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
பட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் - அஜித் திடீர் அறிக்கை! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இவரை ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் தல அஜித் என்று அழைத்து வருகிறார்கள். இந்நிலையில் அஜித் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி,மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட ச...
வாலி படத்தின் இந்தி ரீமேக்… எஸ்.ஜே.சூர்யா வழக்கு!

வாலி படத்தின் இந்தி ரீமேக்… எஸ்.ஜே.சூர்யா வழக்கு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வாலி படத்தின் இந்தி ரீமேக்... எஸ்.ஜே.சூர்யா வழக்கு! எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் மற்றும் சிம்ரன் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் வாலி. இதில் அஜித் கதாநாயகனாகவும் வில்லனாகவும் இரு வேடங்களில் நடித்து இருந்தார். அவருக்கு திருப்பு முனை படமாக வாலி அமைந்தது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கி இருப்பதாகவும் ரீமேக் பணிகளை அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. வாலி இந்தி ரீமேக்கை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனது. வாலி இந்தி ரீமேக்கில் அஜித்குமார் நடிக்காத பட்சத்தில் தானே நடிக்க எஸ்.ஜே.சூர்யா விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும், ரீமேக் உரிமை திரைக்கதை எழுதியவருக்கே உண்டு என்ற சமீபத்திய ஆரண்ய காண்டம் பட வழக்கில...
துப்பாக்கி சுடுதலில் அடுத்த லெவலுக்கு செல்லும் அஜித்!

துப்பாக்கி சுடுதலில் அடுத்த லெவலுக்கு செல்லும் அஜித்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
துப்பாக்கி சுடுதலில் அடுத்த லெவலுக்கு செல்லும் அஜித்! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 6 பதக்கங்களை வென்று அசத்தினார் அஜித். மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார் அஜித். இந்தப் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக படப்பிடிப்பு இல்லாத சமயங்களில், தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார் அஜித். தேசிய அளவிலான போட்டியிலும் அஜித் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையுடன் அவருடைய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். நடிகர் அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது....
நாங்க வேற மாரி – வலிமை படத்தின் முதல் பாடல் வெளியீடு!

நாங்க வேற மாரி – வலிமை படத்தின் முதல் பாடல் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நாங்க வேற மாரி - வலிமை படத்தின் முதல் பாடல் வெளியீடு! நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இதற்கிடையே, இன்று இரவு வலிமை படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், வலிமை படத்தின் முதல் பாடலான,  ‘நாங்க வேற மாரி’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். அஜித் ரசிகர்கள் இந்த பாடலை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்....