புதன்கிழமை, ஜூலை 29
Shadow

Tag: செல்வராகவன்

‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தாமதமாவது ஏன்? – வெளியான புதிய தகவல்!

‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தாமதமாவது ஏன்? – வெளியான புதிய தகவல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தாமதமாவது ஏன்? - வெளியான புதிய தகவல்! காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாக உள்ளது. தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. இந்நிலையில், நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படாததற்கான காரணம் வெளியாகி உள்ளது. அதன்படி பீஸ்ட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தேதியை செல்வராகவன் தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்...
பீஸ்ட் அப்டேட் – விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்!

பீஸ்ட் அப்டேட் – விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீஸ்ட் அப்டேட் - விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க இயக்குனர் செல்வராகவன் ஒப்பந்தமாகி உள்ளார். அவர் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும், இவர் இதற்கு முன்னர் ‘சாணிக் காயிதம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை....
தனுஷ் – செல்வராகவன் இணையும் படத்தின் புதிய அறிவிப்பு!

தனுஷ் – செல்வராகவன் இணையும் படத்தின் புதிய அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷ் - செல்வராகவன் இணையும் படத்தின் புதிய அறிவிப்பு! இயக்குனர் செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘நானே வருவேன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்....
உண்மையான அன்பு கிடைத்தால் பிடித்துக் கொள்ளுங்கள் – செல்வராகவன்!

உண்மையான அன்பு கிடைத்தால் பிடித்துக் கொள்ளுங்கள் – செல்வராகவன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
உண்மையான அன்பு கிடைத்தால் பிடித்துக் கொள்ளுங்கள் - செல்வராகவன்! காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன். இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘உண்மையான அன்பு எங்கேயாவது கிடைத்தால் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்! வாழ்வில் மிகக் கடினம் அதுதான்’ என்று பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  ...
முதல்முறையாக தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் சூர்யாவின்  என்.ஜி.கே.

முதல்முறையாக தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் சூர்யாவின் என்.ஜி.கே.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  முதல்முறையாக தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் சூர்யாவின் என்.ஜி.கே. தமிழ்ப்படங்களின் மார்க்கெட் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது தமிழ்ப்படங்கள் உலக அளவில் ரிலீஸ் ஆகி பட்ஜெட்டின் ஒரு பகுதியை ஓவர்சீஸ் மார்க்கெட் தயாரிப்பாளருக்கு பெற்றுத் தருகிறது. அதிலும் அமெரிக்கா, கனடா மற்றும் வளைகுடா நாடுகளில் மட்டும் வெளியாகி கொண்டிருந்த தமிழ் சினிமா கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் பல நாடுகளில் வெளியாகி வசூலையும் குவித்து வருகிறது. ரஜினிகாந்த் நடித்த முத்து ஜப்பானில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஹிட் ஆனது. இதைப் போல பல படங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டாலும் தயாரிக்கும் மொழியிலேயே ஆங்கில படங்களை போல உலகம் முழுதும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது குறைவுதான். சமீபத்தில் ஸ்ரீதேவி நடித்த மாம் படம் சீனாவில் ரிலீஸ் ஆகி 100 கோடியை வசூலித்தது. இந்...
செல்வராகவனின் அந்த 3 நொடி விதி – ரகுல்பிரீத்தி சிங் சொன்ன ரகசியம்

செல்வராகவனின் அந்த 3 நொடி விதி – ரகுல்பிரீத்தி சிங் சொன்ன ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நமக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர் செல்வராகவன் - ரகுல் ப்ரீத் சிங் செல்வராகவன் மற்ற இயக்குனர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிகொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனமாக இருப்பார். அதேபோல் கார் டிரைவர் போன்ற சிறிய பாத்திரத்திரத்தில் கூட அவரின் உடல்மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார். பாடல் காட்சிகள் என்றால் கூட இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார். படப்பிடிப்பு தளத்தில் யாரும் யாருடனும் பேச முடியாது. அவரவர் நடிக்கக் கூடிய வசனங்களையும், இங்கு நிற்க வேண்டும், இப்படி நடக்க வேண்டும் என்று அனைவரும் பயிற்சி எடுத்துக்...
செல்வராகவனிடம் நானும் நிறைய டேக் வாங்கித்தான் நடிக்கிறேன் என உண்மையை சொல்லி  சாய் பல்லவியை தேற்றிய சூர்யா – NGK அப்டேட்

செல்வராகவனிடம் நானும் நிறைய டேக் வாங்கித்தான் நடிக்கிறேன் என உண்மையை சொல்லி சாய் பல்லவியை தேற்றிய சூர்யா – NGK அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  செல்வராகவன் சினிமாவையும் நடிப்பையும் வேறு கோணத்தில் பார்க்கிறார் - சாய் பல்லவி முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு  செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும் என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிக கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக கற்றுக் கொள்ளலாம் என்று 2, 3 நாட்களில் புரிந்துகொண்டேன். பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் செல்போன் உபயோகிப்போம், மற்ற படங்களைப் பற்றி பேசுவோம். ஆனால், செல்வராகவன் படப்பிடிப்பு தளத்தில் 100 சதவீதம் அப்போது நடிக்க வேண்டிய காட்சியைப் பற்றிய வசனங்களை வைத்துக் கொண்டு ஆளுக்கொரு இடத்தில் நின்று கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். ஒழுக்கம் என்றால் என்ன? என்று அங்குதான் கற்றுக் கொண்டேன். மேலும், படப்பிடிப்...
தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா… குஷியான NGK  ரசிகர்கள்..!

தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா… குஷியான NGK ரசிகர்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா... குஷியான ரசிகர்கள்..! இந்திய மொழி படங்களில் இந்திக்கு அடுத்தபடியாக தெலுங்கு திரையுலகில் தமிழ் நடிகர்கள் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளதால் அவற்றை தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அதிக தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். இந்த படங்கள் பெரும்பாலான தெலுங்கு நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் செய்கிறது. அதிலும் சூர்யாவுக்கு தனி மார்க்கெட் தெலுங்கில் இருக்கிறது. இதை தொடர்ந்து சூர்யாவின் என்.ஜி.கே படத்தையும் தெலுங்கில் வெளியிடுகின்றனர். இந்த படத்தின் தெலுங்கு டப்பிங்கை சூர்யாவே பேசி இருக்கிறார். இது சூர்யாவின் தெலுங்கு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்.ஜி.கே படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல்பிரீத் சிங், சாய்பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். செல்வராகவன் இயக்கிய இந்த படம் சமகால அரசியலை பேசி இருக்கிறதாம்....
செல்வராகவன் ஸ்கூல் வாத்தியார் மாதிரி அத்தனை பயம் – சாய்பல்லவி

செல்வராகவன் ஸ்கூல் வாத்தியார் மாதிரி அத்தனை பயம் – சாய்பல்லவி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி பேசும்போது, ‘கதை கேட்டவுடன் எனக்கு பிடித்தது. படப்பிடிப்பு எனக்கு ஸ்கூல் மாதிரி இருந்தது. லீவு கிடைக்காதா?, மழை பெய்யாதா? என்று ஸ்கூல் மாணவன் போல் நினைத்துக் கொண்டு இருந்தேன். படப்பிடிப்பு தளம் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. நான் வீட்டில் இருந்து செல்லும் போதே இப்படி நடிக்கனும், அப்படி நடிக்கனும் என்று தயாராக செல்வேன். ஆனால், அங்கு சென்றால் வேற மாதிரி இருக்கும். நான் தயாராக செல்வதுதான் தவறு என்று புரிந்துக் கொண்டேன். இயக்குனர் செல்வராகவனிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்...