வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: தமிழக அரசு

கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசு!

கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசு! தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோருக்கான கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்துள்ளது. அதன் அடிப்படையில் தீவிரம் இல்லாத கொரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ. 5000 என்று நிர்ணயம் செய்துள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய சிகிச்சைக்கு தினமும் ரூ. 15,000 என இருந்த நிலையில் தொகுப்பாக ரூ. 7,500 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெண்டிலேட்டர் அல்லாத தீவிர சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ. 30,000 மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் நாளொன்றுக்கு ரூ. 25,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடுமையான சுவாச செயலிழப்பு ஏற்பட்டு வெண்டிலேட்டர் தேவையில்லையெனில் தொகுப்பு கட்டணம் ரூ. 27,100 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை!

பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை! தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா தொற்று குறையாததால் 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. கொரோனா முதல் அலை இந்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்தது. இதனால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு அறிவித்தது. விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த சில தினங்களில் கொரோனா 2-வது அலை தாக்க தொடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. இதன் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் கற்று வருகிறார்கள். தமிழகத்தில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடி பேர் ஆகும். பிளஸ்-2 வகுப்பில் மட்டும் சும...
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியாகும் -அரசு அறிவிப்பு!

பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியாகும் -அரசு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியாகும் -அரசு அறிவிப்பு! கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தெரிவித்தது. இந்த அடிப்படையில், மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 22ம் தேதி மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்...
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு வருகிற 21-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்த மாவட்டங்களை 3 ஆக பிரித்து ஜூன் 28-ந்தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது....
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம்- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம்- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம்- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! தமிழகத்தில் கொரோனா வைரஸ்பாதிப்பால் நடுத்தர வயதை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். கொரோனா முதல் அலையை விட 2-வது அலையில் ஏற்பட்ட இதுபோன்ற உயிரிழப்புகளால் பல குடும்பங்களில் பெற்றோர்களை இழந்து குழந்தைகள் தவித்து வருகிறார்கள். இதுபோன்ற பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு தரப்பிலும் முன் வைக்கப்பட்டது. இந்த நிலையில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலன் கருதி அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29-ந்தேதி இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டார். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம், வைப்பு தொகை நிலுவையில் வைக்கப்படும் என்று தெரி...
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்!

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்!

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்! தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து, அரசு நிர்வாகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றும் 24 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 54 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கின்றனர். இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீடுகள் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் ஜே.விஜயராணி சென்னை மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொதுத்துறை இணை செயலாளர் ஏ.ஆர்.ராகுல் நாத் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு சிமெண்ட் கழகம் மேலாண்மை இயக்குனர் எம்.ஆர்த்தி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (சுகாத...
ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு! தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- * கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டீக்கடைகள் நாளை முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. * பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. * பொதுமக்களின் நலன் கருதி அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் நாளை முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. * கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும்,...
தமிழக சட்டசபை விரைவில் கூடுகிறது- அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல்!

தமிழக சட்டசபை விரைவில் கூடுகிறது- அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக சட்டசபை விரைவில் கூடுகிறது- அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல்! தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மே 11-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். 2-வது நாள் சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் போட்டியின்றி சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டதால் அன்றைய தினமே சபாநாயகராக அப்பாவு பதவி ஏற்றார். அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், , எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட சட்டமன்ற கட்சி தலைவர்கள் வாழ்த்தி பேசினார்கள். அத்துடன் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. முந்தைய அ.தி.மு.க. அரசு இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி தாக்கல் செய்தது. புதிதாக ஆட்சி அமைத்துள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு இந்த கூட்டத்தொடரில்...
கொரோனா தடுப்பு பணிகள்- மருத்துவ குழுவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

கொரோனா தடுப்பு பணிகள்- மருத்துவ குழுவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா தடுப்பு பணிகள்- மருத்துவ குழுவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை! கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவியதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். தினமும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் முழு ஊரடங்கு கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 1-ந்தேதியில் இருந்து மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவுவது குறைந்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதிர் பார்த்த அளவுக்கு குறையவில்லை. இதனால் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையொட்டி இந்த மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. இதன் கா...
7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்!

7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்! கொரோனா பரவாமல் இருப்பதற்காக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை வருகிற 7-ந்தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த நிலையில் பொது மக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடை வியாபாரிகள் தங்களது வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் நாளை (திங்கட்கிழமை) முதல் தெருத்தெருவாக சென்று விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள கடைகளுக்கு சென்று சீட்டு எழுதி கொடுத்து விட்டு வந்து விடலாம் அல்லது செல்போன் மூலமும் மளிகைப் பொருட்களை வாங்க தகவல் கொடுக்கலாம். கடைக்காரர்கள் இந்த பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கும் அரசு அனுமதி கொடுத்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகைப் பொருட்களை விநியோகிக்க நேரம் ஒதுக்கி உள்ளது. ...