சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை வலுப்படுத்த நடவடிக்கை- பிரதமர் மோடி பேச்சு!
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடைபெற்ற மாநில முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டு தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
ஒரு நாடு- ஒரே வரி, ஒரு நாடு-ஒரே மின்கட்டமைப்பு, ஒரு நாடு- ஒரே மொபிலிட்டி கார்டு, ஒரு நாடு-ஒரே ரேஷன் கார்டு ஆகிய முயற்சிகள் அனைத்தும் எங்களின் திடமான மற்றும் தெளிவான கொள்கைகளின் பிரதிபலிப்பு.
சமீபத்தில் நாங்கள் 8 வருட ஆட்சியை நிறைவு செய்துள்ளோம். சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை ஒரு தேசமாக வலுப்படுத்த நாங்கள் உழைத்து வருகிறோம்.
இந்த ஆண்டுகளில், சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற மந்திரத்தில் நாங்கள் நாட்டை முன்னேற்றி உள்ளோம். கொள்கை ஸ்திரத்தன்மை, ஒருங்கிணைப்பு மற்றும் எளிதான வணிகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம்.
இன்று உலகம் இந்தியாவின் செயல்திறனைப் பாராட்டுகிறது. ஜி20 நாடுகளின் பொருளாதாரத்தில் நாம் வேகமாக வளர்ந்...









