செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: ராகுல் காந்தி

மோடி பதவியேற்பு விழாவில் ராகுல், சோனியா பங்கேற்கிறார்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மோடி பதவியேற்பு விழாவில் ராகுல், சோனியா பங்கேற்கிறார்கள் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நாளை (30-ம் தேதி) மாலை 7 மணியளவில் இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்கிறார். இவ்விழாவில் பங்கேற்க வருமாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த அழைப்பையேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மத்திய முன்னாள் மந்திரி குலாம் நபி ஆசாத் ஆகியோர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்கும் விழாவில் பங்கேற்கிறார்கள்....
தேர்தல் படுதோல்வி- 6 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா

தேர்தல் படுதோல்வி- 6 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாராளுமன்றத் தேர்தலில் பாஜக 302 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரசின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் தோல்வியடைந்தார். இதேபோல் பல்வேறு முன்னணி காங்கிரஸ் தலைவர்களும் தோல்வியைத் தழுவினர். தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதங்களை கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளனர். உத்தர பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநில தலைவர்களைத் தொடர்ந்து, பஞ்சாப், அசாம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில தலைவர்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதுவரை 6 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில், மேலும் சில மாநில தலைவர்கள் ராஜினாமா செய்யலாம் என கூறப்படுகிறது....
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28–வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதோடு நாடு முழுவதும் ராஜீவ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது....
5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல் காந்தி தாக்கு

5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல் காந்தி தாக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலோர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அநீதி இழைத்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்  'நல்ல நாள் வரும்' என  கூறிக் கொண்டிருந்தார். தற்போது 'நான் உங்கள் காவலாளி' என எங்கு சென்றாலும் கூறி வருகிறார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் ஏழைகள், சிறுகுறுவணிகர்கள், தொழிலாளர்கள் என அனைவரிடம் இருந்தும் பணத்தை பறித்துக் கொண்டார். ஆனால் காங்கிரஸ் அறிவித்த நியாய் திட்டம் மக்களுக்கு நல்ல பலனை தரும். காங்கிரஸ், மத்தியில் ஆட்சி அமைத்தால் ஒரே வருடத்தில் 22 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். ஜிஎஸ்டி நிச்சயம் எளிமையாக்கப்படும். 3 ஆண்டுகளுக்கு புதிதாக  தொழில் தொடங்கும் யாரும் அனுமதி வாங்க தேவையில்லை. மேலும் நாட்டி...
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் “நீட்” ரத்து – ராகுல்காந்தி அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் “நீட்” ரத்து – ராகுல்காந்தி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
*காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல் காந்தி.* *காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.* *விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.* *மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.* *'நியாய்' எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும்.* *100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் - காங். தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு.* *2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும் - காங். தேர்தல் அறிக்கை.* *தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - காங். தேர்தல் அறிக்கை.* *இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை - காங். தேர்தல் அறிக்கை.*...
ராஜஸ்தான், தெலுங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது…  நாளை ஓட்டுப்பதிவு

ராஜஸ்தான், தெலுங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது… நாளை ஓட்டுப்பதிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  2019 ஆண்டு நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் ஓட்டுப்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும் நாளை (7-ந் தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது. 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபை தேர்தல், பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுக்கும் முக்கியமானது. கடந்த 25 ஆண்டுகளாக அங்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதால், ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதாவும், கைப்பற்றுவதற்கு காங்கிரசும் வரிந்து கட்டுகின்றன. இங்கு ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் தேர்தல் ஒத்தி போடப்பட்டுள்ளது. 199 தொகுதிகளில் மட்டுமே நாளை ஓட...
சி.பி.ஐ. உயர் அதிகாரி ஊழல் புகார் – ‘கிரைம் திரில்லர்’ படத்துக்கு ஒப்பிட்ட ராகுல்

சி.பி.ஐ. உயர் அதிகாரி ஊழல் புகார் – ‘கிரைம் திரில்லர்’ படத்துக்கு ஒப்பிட்ட ராகுல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதலில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அவர்கள் இருவரின் அதிகாரத்தையும் பறித்து, கட்டாய விடுமுறையில் அனுப்பியது. இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவை நியமித்தது. சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதலில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அவர்கள் இருவரின் அதிகாரத்தையும் பறித்து, கட்டாய விடுமுறையில் அனுப்பியது. இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவை நியமித்தது. ஆனால் மத்திய மந்திரி ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, தீய நோக்கம் கொண்டது என கூறி மறுத்தார். இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. உயர் அதிகாரி தெரிவித்துள்ள ஊழல் புகார் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கடுமையாக விமர்சித்து பதி...