ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

விஜய் சேதுபதி படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் சேதுபதி படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்! விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதியுடன் இணைந்து சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டிருக்கிறார். அதன்படி 'காதுவாக்குல ரெண்டு காதல்' படத்தின் டீசர் வரும் 11.02.2022 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்....
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்!

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்! தமிழில் கடந்த 2017-ல் வெளியான மாநகரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகம் ஆன இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷான், ரெஜினா கசான்ட்ரா, சார்லி, ராம்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கைந்து இளைஞர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் காரணமாக ஒரே புள்ளியில் அவர்கள் சந்திப்பதை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. மாநகரம் திரைப்படம் இந்தியில் மும்பைக்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன்!

6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன்! கொரோனாவால் முடங்கிய பெரிய நடிகர்கள் படங்களின் படப்பிடிப்புகள் வேகவேகமாக முடிந்து தற்போது அடுத்தடுத்து திரைக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் `டான்' ஆகிய 2 படங்களையும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். ஏற்கனவே 2016-ல் விஜய்சேதுபதியின் றெக்க, சிவகார்த்திகேயனின் `ரெமோ' ஆகிய 2 படங்களும் ஒரே நாளில் மோதின. 6 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இருவர் படங்களும் மோத வருகின்றன. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த `டாக்டர்' படம் எந்த பெரிய படங்களும் போட்டிக்கு வராத நிலையில் தனித்து வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படம் ரூ.100 கோடி வரை வசூல் பார்த்ததாக கூறப்பட்டது. விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னே...
விஜய் சேதுபதி மீது வழக்கு… கிரிமினல், அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

விஜய் சேதுபதி மீது வழக்கு… கிரிமினல், அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
விஜய் சேதுபதி மீது வழக்கு... கிரிமினல், அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மகாகாந்தி. நடிகரான இவர், சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- நான், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்ல கடந்த நவம்பர் மாதம் 2-ந்தேதி இரவு பெங்களூரு விமான நிலையம் சென்றேன். அங்கு எதிர்பாராதவிதமாக நடிகர் விஜய்சேதுபதியை சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவிக்க சென்றேன். ஆனால் எனது வாழ்த்துக்களை ஏற்க மறுத்த அவர், பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி பேசியதுடன், என்னையும், எனது சாதி பற்றியும் தவறாக பேசினார். விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய என் மீது அவருடைய மேலாளர் ஜான்சன் தாக்கியதுடன், காதில் அறைந்தார். இதில் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்த...
பெங்களூரு விமான நிலையத்தில் விஜய்சேதுபதி மீது தாக்குதல்…. வைரலாகும் வீடியோ!

பெங்களூரு விமான நிலையத்தில் விஜய்சேதுபதி மீது தாக்குதல்…. வைரலாகும் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
பெங்களூரு விமான நிலையத்தில் விஜய்சேதுபதி மீது தாக்குதல்.... வைரலாகும் வீடியோ! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக டெல்லி சென்று தேசிய விருது பெற்றார். அதன்பின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்றிருக்கிறார் விஜய் சேதுபதி. அங்கு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதியை ஒருவர் தாக்க வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது....
தேசிய விருது வென்ற இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி!

தேசிய விருது வென்ற இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தேசிய விருது வென்ற இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் அனபெல் சேதுபதி, கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, காந்தி டாக்ஸ், விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காக்கா முட்டை படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குனர் மணிகண்டனுடன் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மணிகண்டனுடன் ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய விஜய் சேதுபதி, தற்போது 3-வது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
மீண்டும் ‘96’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி?!

மீண்டும் ‘96’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் ‘96’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி?! பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 96. முழு காதல் படமாக உருவாகி இருந்த இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தன. தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படத்தை தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன. இந்நிலையில், இயக்குனர் பிரேம் குமார் அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தன் கைவசம் வைத்துள்ள படங்களை முடித்துவிட்டு, பிரேம்குமார் இயக்கும் படத்தில் நடிக்க நடிகர் விஜய்சேதுபதி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்!

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்! மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க இருக்கிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷிவானி இணைய இருப்பதாக...
5-வது முறையாக விஜய் சேதுபதி பிரபல இயக்குனருடன்  கூட்டணி!

5-வது முறையாக விஜய் சேதுபதி பிரபல இயக்குனருடன் கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
5-வது முறையாக விஜய் சேதுபதி பிரபல இயக்குனருடன் கூட்டணி! சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமானார். நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தேசிய விருதையும் வென்றது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கியிருந்தார் சீனு ராமசாமி. சில பிரச்சனைகளால் அந்த படம் வெளியாகவில்லை. இதையடுத்து விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து, சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ வெற்றிப்படமாக அமைந்தது. இதன் பின்னர் விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி 4-வது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, மீண்டும் இயக்குனர் சீனு ராமசாமியுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இவர்கள் இருவரும் 5-வது முறையாக இணையும் ...
விஜய் சேதுபதி கே.ஜி.எப். இயக்குனருடன் கூட்டணி!

விஜய் சேதுபதி கே.ஜி.எப். இயக்குனருடன் கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சேதுபதி கே.ஜி.எப். இயக்குனருடன் கூட்டணி! கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக சலார் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சலார் படத்தை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே சைரா நரசிம்மா ரெட்டி, உப்பென்...