செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: Thalapathy

விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்!

விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை மோகன் உறுதி செய்தார். இதனை அடுத்து தற்போது 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகராக வலம் வந்த ஷாம் இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஷாம், 12 பி, இயற்கை, தில்லாலங்கடி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் நடித்த ‘குஷி’ படத்தில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக ஷாம் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
தெறிக்க விடும் பீஸ்ட் பர்ஸ்ட் சிங்கிள்!

தெறிக்க விடும் பீஸ்ட் பர்ஸ்ட் சிங்கிள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் புரமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முழு பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. https://youtu.be/-aVdxDDrcTc...
3வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை!

3வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
3வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை! ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் விஜய் – எத்தனை கோடி தெரியுமா?!

தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் விஜய் – எத்தனை கோடி தெரியுமா?!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் விஜய் - எத்தனை கோடி தெரியுமா?! நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள். இந்தநிலையில் விஜய்யின் அடுத்த படம் பற்றிய பரபரப்பான தகவல் தெரியவந்திருக்கிறது. விஜய் அடுத்து நடிக்க இருக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு பட அதிபர் தில்ராஜூ தயாரிக்கிறார். தெலுங்கில் ஏராளமான வெற்றி படங்களை இயக்கிய வம்ஷி இயக்க இருக்கிறார். இந்த படத்துக்கு விஜய்யின் சம்பளம் ரூ.120 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என்ற அந்தஸ்தை விஜய் பெறுகிறார்....
சைக்கிளில் வந்த விஜய்!

சைக்கிளில் வந்த விஜய்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சைக்கிளில் வந்த விஜய்! தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி ஆகியோர் வாக்குகளை செலுத்தினர். இதையடுத்து நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சைக்கிளில் வந்தார். விஜய் சைக்கிளில் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உற்சாக குரல் எழுப்பினர். விஜய் வாக்களிக்க வந்து சென்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியிருக்கிறது. பெட்ரோல் விலை உயர்வை இப்படி குறியீடாக சொல்லியிருக்கிறார் என்று சமூகவலைத்தளத்தில் பேசப்பட்டது. இதனால், சைக்கிளில் வந்த நடிகர் விஜய் ஸ்கூட்டரில் திரும்பிச் சென்றார்....