வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: Thalapathy

“நா ரெடி” பாடல் படைத்த புதிய சாதனை!

“நா ரெடி” பாடல் படைத்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'லியோ' படத்தின் "நா ரெடி" பாடல் யூடியூபில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் யூடியூபில் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்து டிரெண்டிங்கில் உள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருக...
நம்ம நண்பர் படம்தானே – ‘துணிவு’ குறித்து விஜய் சொன்ன பதில்!

நம்ம நண்பர் படம்தானே – ‘துணிவு’ குறித்து விஜய் சொன்ன பதில்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன. இரண்டும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது. மேலும், இப்படங்களின் தொடர் அப்டேட்கள் இணையத்தை ஆக்கிரமித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், 'வாரிசு' படத்தில் நடித்துள்ள நடிகர் ஷியாம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில், "துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்று விஜய்யிடம் சொன்ன போது வரட்டும் பா. நம்ம நண்பர் படம்தானே.. அதுவும் நல்லா போகட்டும்.. நம்ம படமும் நல்லா போகட்டும்" என்று விஜய் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் இந்த கருத்தால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளன...
விஜய்-அஜித் படங்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் !

விஜய்-அஜித் படங்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன. வாரிசு படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். தெலுங்கு பட அதிபர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கில் விஜய் படங்களுக்கு வரவேற்பு உள்ளதால் இந்த படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுபோல் துணிவு படத்தையும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து ஆந்திரா, தெலுங்கானாவில் கணிசமான தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுர...
தீபாவளி ஸ்பெஷல்.. ரசிகர்களை உற்சாகப்படுத்திய வாரிசு படக்குழு !

தீபாவளி ஸ்பெஷல்.. ரசிகர்களை உற்சாகப்படுத்திய வாரிசு படக்குழு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 'வாரிசு' படத்தின் முதல் பாடல் தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், உற்சாகமடைந்த ரசிகர்கள் தீபாவளி ஸ்பெஷல் ட்ரீட் என்று கமெண்ட் செய்து பதிவை வைரலாக்கி வருகின்றனர். 'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது....
விஜய்யுடன் மீண்டும் இணையும் கீர்த்தி சுரேஷ்!

விஜய்யுடன் மீண்டும் இணையும் கீர்த்தி சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தி நடிகர் ச...
தொடர்ந்து லீக் ஆகும் வாரிசு பட காட்சிகள்!

தொடர்ந்து லீக் ஆகும் வாரிசு பட காட்சிகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வாரிசு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையதளத்தில் தொடர்ந்து வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பை நடத்தியபோது, சிலர் அதை திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளத்தில் பகிர்ந்தனர். சில தினங்களுக்கு முன்பு வாரிசு படப்பிடிப்பில் விஜய் கோட் சூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற புகைப்படம் கசிந்தது. மருத்துவமனை...
தளபதிக்கு எதிரியாகும் சமந்தா!

தளபதிக்கு எதிரியாகும் சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2023 பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து லோகேஷ் இயக்கவிருக்கும் விஜய் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்த்து எழுந்திருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு எதிராக ஒரு வில்லி கதாப்பாத்திரம் இடம் பெற்றிருப்பதாகவும், இதற்கான தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் முன்னணி நடிகை ஒருவர் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அ...
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ்யை சந்தித்த விஜய்!

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ்யை சந்தித்த விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபல தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தளபதி 66 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 6ம் தேதி இதன் படப்பிடிப்பு துவங்கியது. இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன் இசை அமைக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது. இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவை, நடிகர் விஜய் நேற்று நேரில் சந்தித்தார். ஐதராபாத்தில் தளபதி 66 படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது....
விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்!

விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை மோகன் உறுதி செய்தார். இதனை அடுத்து தற்போது 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகராக வலம் வந்த ஷாம் இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஷாம், 12 பி, இயற்கை, தில்லாலங்கடி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் நடித்த ‘குஷி’ படத்தில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக ஷாம் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ...