திங்கட்கிழமை, மே 13
Shadow

CINI NEWS

ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா!

ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா! இசைஞானி இளையராஜா இசையமைத்த "மதுரை மணிக்குறவன்" படத்தின் பாடல்களை அவரது புது ஸ்டூடியோவான இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் வெளியிட்டார். காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி.காளையப்பன் தயாரிக்க ராஜரிஷி.கே இயக்கியுள்ளார். தூத்துக்குடி, மதுர சம்பவம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹரிக்குமார் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். படத்தில் இடம் பெற்றுள்ள 6 பாடல்களையும் கவிஞர் முத்துலிங்கம் எழுதியுள்ளார். மனசில பெரியவன் தான் மதுரக்காரன்... என்ற பாடலை இளையராஜாவே பாடியுள்ளார். படத்தின் அனைத்து பாடல்களும் ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்துள்ளார். மதுரை மணிக்குறவன் படத்தின் பின்னணி இசை முதல் படமாக இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது. மதுரையில் நடந்த உண்மை சம்பவமும் பல கொலைக் குற்றங்களில் நிகழும் பின்னணி பற்றியும் உருவாக்கப்பட்ட க...
‘அண்ணாத்த’ ரஜினி பற்றி சூரி கொடுத்த அசத்தல் அப்டேட்!

‘அண்ணாத்த’ ரஜினி பற்றி சூரி கொடுத்த அசத்தல் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘அண்ணாத்த’ ரஜினி பற்றி சூரி கொடுத்த அசத்தல் அப்டேட்! ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. இப்படத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினி, சூரி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நடிகர் சூரி, ரஜினியுடன் நடிப்பது இதுவே முதன்முறை, அது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: “தலைவர் ஷுட்டிங் ஸ்பாட்டில் கலக்குறாரு, வேற லெவல் எனர்ஜி. அவருடன் நடிப்பது மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார். அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கும் இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....
புது கார் வாங்கிய குட்டி ‘பவானி’…. நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி!

புது கார் வாங்கிய குட்டி ‘பவானி’…. நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
புது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி! ‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். பொங்கலுக்கு விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில், மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளம் வயது விஜய் சேதுபதியாக ‘பவானி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து எல்லோராலும் பாராட்டப்பட்டார் மகேந்திரன். சமீபத்தில் அவர் புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். தற்போது அந்த காருடன் நடிகர் விஜய் சேதுபதியை, அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் மகேந்திரன். அந்த காரை ஓட்டிப் பார்த்த வ...
பாடல்களே இல்லாமல் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாணி போஜன்!

பாடல்களே இல்லாமல் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாணி போஜன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பாடல்களே இல்லாமல் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாணி போஜன்! தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அந்த படத்தில் வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், விக்ரம் பிரபு ஜோடியாக ‘பாயும் ஒளி நீ எனக்கு’, சசிகுமாருக்கு ஜோடியாக ‘பகைவனுக்கு அருள்வாய்’, விக்ரமின் ‘சியான் 60’, சூர்யா தயாரிக்கும் 2 படங்கள், ராதாமோகன் இயக்கும் படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார் வாணி போஜன். இந்நிலையில், அவர் அடுத்ததாக பரத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை அறிமுக இயக்குனர் சக்திவேல் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார், துளசி, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பாடல்க...
நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் – ஏ.ஆர்.ரகுமான்!

நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் – ஏ.ஆர்.ரகுமான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் - ஏ.ஆர்.ரகுமான்! இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்க்ஸ்' என்ற படத்துக்கு கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். அடுத்து படம் இயக்கவும் சினிமாவில் நடிக்கவும் முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது. இதற்கு பதில் அளித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, ''இயக்குனராக மாறுவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். அதற்கு இப்போது எனக்கு நேரமும் இல்லை. ஆனால் படம் தயாரிப்பதும், கதை எழுதுவதும் எளிமையாக உள்ளது. நான் நிறைய கதைகள் எழுதி வைத்து இருக்கிறேன். தற்போது எனது கதையில் தயாராகி உள்ள 99 சாங்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது பற்றிய முடிவை எடுப்பேன். சினிமாவில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். எனக்கென்று சொந்த உலகம் இருக்கிறது. அதில் இரு...
எனிமி படத்தின் டீஸர் ரிலீஸ் அப்டேட்!

எனிமி படத்தின் டீஸர் ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எனிமி படத்தின் டீஸர் ரிலீஸ் அப்டேட்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், எஞ்சியுள்ள 10 சதவீத படப்பிடிப்பை சென்னையில் நடத்த உள்ளதாகவும் இப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் தெரிவித்துள்ளார். மேலும் எனிமி படத்தின் டீசரை இரண்டு வாரத்திற்குள் வெளியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்....
மாநாடு படம் சிம்புவுக்கு ஒரு மைல்கல்லாக அமையும் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

மாநாடு படம் சிம்புவுக்கு ஒரு மைல்கல்லாக அமையும் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படம் சிம்புவுக்கு ஒரு மைல்கல்லாக அமையும் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி! வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநாடு படப்பிடிப்பு தளத்தில் சிம்பு, வெங்கட் பிரபுவோடு கலந்துரையாடும் போது எடுத்த ப...
இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்!

இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்! நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது. இந்நிலையில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார். இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்ட்டிகில் 15’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா! இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்  மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தனுஷ் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அதன்படி தனுஷை வைத்து இவர் இயக்கி உள்ள கர்ணன் படம், அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ், அடுத்ததாக விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். பா.இரஞ்சித் தயாரிக்க உள்ள இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ், சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து இருவர் தரப்பில் இருந்தும் எந்தவித தகவலும் வெளியாகவில்லை. அவ்வாறு வெளியானால் தான் இது உண்மையா? இல்லை வதந்தி...
ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைத்த பார்த்திபன்!

ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைத்த பார்த்திபன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைத்த பார்த்திபன்! வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் பார்த்திபன். புதிய பாதை, பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ்புல், வெற்றிக்கொடி கட்டு, இவன், அழகி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு என பார்த்திபனின் அனைத்து படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தன. குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு படம், தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தியது என்றே சொல்லலாம். ஏனெனில் இப்படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார். இப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. இவ்வாறு சினிமாவில் பல்வேறு புதுமைகளை செய்யும் பார்த்திபன், அடுத்ததாக இரவின் நிழல் என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை ஒரே ஷாட்டில் எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். அவரும் இப்படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இ...