புதன்கிழமை, மே 15
Shadow

HOME SLIDER

தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின: விஜய் வேதனை!

தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின: விஜய் வேதனை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின: விஜய் வேதனை! நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதன்பின் கட்ட வேண்டிய வரி பாக்கியை செலுத்திவிட்டார். என்றாலும், தனி நீதிபதியின் கருத்துகளை நீக்க வேண்டும் என விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மேல்முறையீடு மனு விசாரணையின்போது, பொதுப்படையாக நடிகர்களுக்கு எதிராக தெரிவிக்கும் கருத்து தேவையற்றது. உயர்நீதிமன்ற தனி நீதிபதி கருத்து தனிப்பட்ட முறையில் தன்னை புண்படுத்தியுள்ளது. 32.30 லட்சம் ரூபாய் கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்தப்பட்டு விட்டது. கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில், அத...
தேசிய விருது பெற்ற தமிழ் கலைஞர்கள் – புகைப்பட தொகுப்பு!

தேசிய விருது பெற்ற தமிழ் கலைஞர்கள் – புகைப்பட தொகுப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தேசிய விருது பெற்ற தமிழ் கலைஞர்கள் - புகைப்பட தொகுப்பு! 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. சிறந்த படம் அசுரன் தேர்வு செய்யப்பட்டு படத்தை தயாரித்த கலைப்புலி தாணுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகர் - தனுஷ், சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி, சிறந்த ஒலி அமைப்பு - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு), சிறந்த இசையமைப்பாளர் - டி.இமான் (விஸ்வாசம்), சிறப்பு ஜூரி விருது - பார்த்திபன் (ஒத்த செருப்பு) வழங்கப்பட்டது. தாதாசாகேப் பால்கே விருது பெறும் ரஜினிகாந்த்!   அசுரன் படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெறும் தனுஷ்!   சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக துணை நடிகர் விருது பெறும் விஜய் சேதுபதி!   சிறந்த ஒலி அமைப்பு - ரசூல் பூக்க...
பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் அடுத்த படம்!

பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் அடுத்த படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் அடுத்த படம்! ’சார்பட்டா பரம்பரை’, ‘அரண்மனை 3’ படங்களுக்குப் பிறகு, ஆர்யா நடித்துள்ள ‘எனிமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்யாவின் அடுத்தபடம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கின்றனர். இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தில் கதாநாயகியாக ’ஜகமே தந்திரம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். மேலும் சிம்ரன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்க மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார்....
திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்!

திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்! திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை இந்தி திரையுல உலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் அமிதாப்பச்சன் ஏற்கனவே பெற்றுள்ளார். மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும், இயக்குனர் பாலச்சந்தருக்கும் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. இன்று டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வ...
நண்பன் மறைந்தாலும் நட்பு மறையாது…. ‘பால் வாக்கர்’ மகளின் திருமணத்தை நடத்தி வைத்த ‘வின் டீஸல்’!

நண்பன் மறைந்தாலும் நட்பு மறையாது…. ‘பால் வாக்கர்’ மகளின் திருமணத்தை நடத்தி வைத்த ‘வின் டீஸல்’!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நண்பன் மறைந்தாலும் நட்பு மறையாது.... ‘பால் வாக்கர்’ மகளின் திருமணத்தை நடத்தி வைத்த ‘வின் டீஸல்’! மறைந்த ஹாலிவுட் நடிகர் பால்வாக்கர் மகள் திருமண விழாவில், மணமகளுடன் பிரபல நடிகர் வின் டீஸல் நடந்து வந்த தருணத்தை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படம் மூலம் இந்திய ரசிகர்களின் மனம்கவர்ந்தவர்கள் நடிகர்கள் பால் வாக்கர் மற்றும் வின் டீஸல். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பால் வாக்கர் கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். இந்நிலையில், அவரது மகள் மிடோ வாக்கருக்கு நடைபெற்ற திருமணத்தில் தந்தை இடத்தில் நடிகர் வின் டீஸல், மணமகளுடன் மணமேடைக்கு வந்தது ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தின் முதல் ஆறு பாகங்களில் நடித்தவர் பிரபல நடிகர் பால் வாக்கர். இவர் கடந்த 2013-ம் ஆண்டில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...
குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
குவியும் பட வாய்ப்பு... சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்! தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார். தற்போது தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக்காயிதம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதுதவிர மலையாளத்தில் மோகன்லால் உடன் ‘அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் மகேஷ்பாபு உடன் ‘சர்காரு வாரி பாட்டா’, சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’, நானிக்கு ஜோடியாக ‘தசரா’ போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால், நடிகை கீர்த்தி சுரேஷ், சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. நானி ஜோடியாக தசரா படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் அதிக சம்பளம் கேட்டதாகவும்...
‘பிக்பாஸ் 5’ அப்டேட் – இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தான்!

‘பிக்பாஸ் 5’ அப்டேட் – இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘பிக்பாஸ் 5’ அப்டேட் - இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தான்! பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 3-ந் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 10 பெண்கள், 7 ஆண்கள், 1 திருநங்கை என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நமீதா மாரிமுத்து, முதல் வார இறுதியில் மருத்துவ காரணங்களுக்காக வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும். அதன்படி கடந்த வாரம் நதியா சங் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அபிஷேக் ராஜா, குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக வெளியேற்றப்...
‘ஜெயில்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!

‘ஜெயில்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘ஜெயில்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்! ஆல்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்த பாலன். இதையடுத்து இவர் இயக்கிய ‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’, ‘காவியத் தலைவன்’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இவர் இயக்கிய வெயில் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து இவர் இயக்கத்தில் உருவான படம் ஜெயில், ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். மேலும் நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒருசில காரணங்களால் இப்படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் முடங்கி உள்ளது. இந்நிலையில், ஜெயில் படத்தின் முக்கிய அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டு உள்ளார். அதன்படி இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர். வ...
ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்!

ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்! 94-வது ஆஸ்கார் விருது அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’  மற்றும் தமிழில் 14 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன. இதில் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’  திரைப்படம் இடம் பெற்றிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘கூழாங்கல்’ திரைப்படம் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கூழாங்கல் படத்தை பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். ஏற்கனவே இப்படம், இந்த ஆண்டு ரோட்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் “டைகர் விருது” பெற்றது என்...
தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி!

தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி! தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் தளர்வுகளையும் அறிவித்துள்ளார். அதன்படி, நவம்பர் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது....