வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

HOME SLIDER

மாஸ் லுக்கில் அரவிந்த் சாமி… வைரலாகும் போஸ்டர்!

மாஸ் லுக்கில் அரவிந்த் சாமி… வைரலாகும் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாஸ் லுக்கில் அரவிந்த் சாமி... வைரலாகும் போஸ்டர்! மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்'. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாகவும், ரெஜினா நாயகியாகவும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வாயில் சிகரெட்டுடன், கையில் பேண்ட் கட்டும் அரவிந்த்சாமியின் லுக் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
ஜி.வி.பிரகாஷுக்கு புது பட்டம் கொடுத்த சீனு ராமசாமி!

ஜி.வி.பிரகாஷுக்கு புது பட்டம் கொடுத்த சீனு ராமசாமி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜி.வி.பிரகாஷுக்கு புது பட்டம் கொடுத்த சீனு ராமசாமி! தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘இடிமுழக்கம்’. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்‌ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், “இடிமுழக்கம் படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது, திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனை போல சென்னை வருகிறேன். இந்த அழகான நாட்களை நினைவுகளாக எனக்கு தந்த சீனு ராமசாமிக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷின் பதிவுக்கு பதிலளித்து டுவிட் செ...
சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா!

சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா! ரஜினியின் ‘சந்திரமுகி’ படம் 2005-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோரும் நடித்து இருந்தனர். பி.வாசு இயக்கினார். மீண்டும் இவரது இயக்கத்திலேயே ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர். ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. நகைச்சுவை வேடத்தில் நடிக்க தன்னை படக்குழுவினர் அணுகி இருப்பதாக வடிவேலு அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனுஷ்கா ஏற்கனவே ‘சந்திரமுகி’ போன்ற திகில் கதையம்சம் உள்ள ‘அருந்ததி’, ‘பாகமதி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆதலால் ‘சந்திரமுகி...
ஹிப்ஹாப் ஆதி இயக்கியுள்ள ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹிப்ஹாப் ஆதி இயக்கியுள்ள ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஹிப்ஹாப் ஆதி இயக்கியுள்ள ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் இயக்குனராக அறிமுகமான படம் ‘மீசைய முறுக்கு’. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் ஹிப்ஹாப் ஆதி இயக்கியுள்ள புதிய படம் ‘சிவக்குமாரின் சபதம்’. இப்படத்தில் அவரே ஹீரோவாக நடித்துள்ளதோடு இசையமைத்தும் உள்ளார். இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக மாதுரி ஜெயின் நடித்துள்ளார். அருண்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தீபக் எஸ்.துவாரகநாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், சிவக்குமாரின் சபதம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்பட...
தமிழகம் முழுவதும் இன்று சமூக நீதிநாள் கடைபிடிப்பு- மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!

தமிழகம் முழுவதும் இன்று சமூக நீதிநாள் கடைபிடிப்பு- மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழகம் முழுவதும் இன்று சமூக நீதிநாள் கடைபிடிப்பு- மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு! பெரியார் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 17-ந் தேதி) சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தலைமை செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கூறி இருந்தார். அரசு அலுவலகங்களில் இதை செயல்படுத்தும் விதமாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி இன்று சென்னை தலைமை செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சமூக நீதி நாள் உறுதிமொழியை மு.க.ஸ்டாலின் வாசிக்க அதை அங்கிருந்த அனை...
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து  உரிய உத்தரவுகளை  பிறப்பித்து வருகிறது. அவ்வகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ...
முதன்முறையாக வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் சினேகா!

முதன்முறையாக வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் சினேகா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
முதன்முறையாக வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் சினேகா! தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் அருண் வைத்யநாதன். இவர் கல்யாண சமையல் சாதம் என்ற படத்தை தயாரித்து இருக்கிறார். தற்போது அருணாச்சலம் வைத்யநாதன் என பெயரை மாற்றியுள்ள இவர், குழந்தைகளை மையமாக வைத்து உருவாகவிருக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ஷாட் பூட் 3’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் மூலம் வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் நடிகை சினேகாவும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் ஜோடியாக நடிக்க உள்ளனர். இதற்கு முன்னர் வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்தில் நடிகை சினேகா நடித்திருந்தாலும், இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை. மேலும் இப்படத்தில் நடிகர் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்....
பிரபல நடிகையிடம் துப்பாக்கி முனையில் பணம் பறித்த கொள்ளையர்கள்!

பிரபல நடிகையிடம் துப்பாக்கி முனையில் பணம் பறித்த கொள்ளையர்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிரபல நடிகையிடம் துப்பாக்கி முனையில் பணம் பறித்த கொள்ளையர்கள்! பிரபல பாலிவுட் நடிகை நிகிதா ராவலிடம் துப்பாக்கி முனையில் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை நிகிதா ராவல், டெல்லி சாஸ்திரி நகரில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியபோது காரில் வந்த முகமூடி கொள்ளையர்கள் அவரை வழிமறித்துள்ளனர். இதையடுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், நடிகை நிகிதாவிடம் இருந்து ரூ.7 லட்சம் மற்றும் நகைகளை பறித்து சென்றுள்ளனர். பணத்தை இழந்த நடிகை நிகிதா ராவல், பயந்து வீட்டுக்குள் ஓடிச்சென்று பீரோவில் ஒளிந்துகொண்டாராம். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து நடிகை நிகிதா ராவல் கூறும்போது, “இந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை. நான் உயிரோடு இருப்பதையு...
ஷங்கர், லிங்குசாமியை தொடர்ந்து டோலிவுட் பக்கம் செல்லும் பிரபல கோலிவுட் இயக்குனர்!

ஷங்கர், லிங்குசாமியை தொடர்ந்து டோலிவுட் பக்கம் செல்லும் பிரபல கோலிவுட் இயக்குனர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஷங்கர், லிங்குசாமியை தொடர்ந்து டோலிவுட் பக்கம் செல்லும் பிரபல கோலிவுட் இயக்குனர்! `குறும்பு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து, `அறிந்தும் அறியாமலும்', `பட்டியல்', `சர்வம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், அஜித்தின் `பில்லா', `ஆரம்பம்' படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘ஷேர்ஷா’ என்கிற பாலிவுட் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவர் அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இப்படத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் ஷங்கர், லிங்குசாமி, மோகன்ராஜா ஆகியோர் தெலுங்கு படங்களை இயக்கி வரும் நிலையில், தற்போது விஷ்ணுவர்தனும் அந்...
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை! கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாலை 3 மணியில் இருந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 8 அதிகாரிகள் தலைமையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஏலகிரி மலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது....