வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

helth tips

படக்குழுவினருடன் இணைந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட மாளவிகா மோகனன்!

படக்குழுவினருடன் இணைந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட மாளவிகா மோகனன்!

CINI NEWS, helth tips, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
படக்குழுவினருடன் இணைந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட மாளவிகா மோகனன்! நடிகை மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் அறிமுகமான அவர், இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இதையடுத்து ‘யுத்ரா’ எனும் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் மாளவிகா மோகனன், இப்படத்தின் படப்பிடிப்பை ஜூலை மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். அதற்குமுன் படக்குழுவினர் அனைவருக்கும் தடுப்பூசி போட திட்டமிட்ட படக்குழு, இன்று மும்பையில் படக்குழுவினருக்காக தடுப்பூசி முகாம் நடத்தியது. இதில் மாளவிகா மோகனன் உள்ளிட்ட படக்குழுவினர்...
கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ‘சென்னை 28’ நண்பர்கள்!

கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ‘சென்னை 28’ நண்பர்கள்!

CINI NEWS, helth tips, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ‘சென்னை 28’ நண்பர்கள்! வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் சென்னை 28. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இதன் 2 ஆம் பாகமும் வெளியானது. இதில் சிவா, பிரேம்ஜி, நிதின் சத்யா, அரவிந்த், ஜெய், வைபவ் உள்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். தற்போது கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘சென்னை 28’ கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர்கள் பிரேம்ஜி, நிதின் சத்யா, அரவிந்த் ஆகியோர் இணைந்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோவில், மாஸ்க் அணியவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் ரசிகர்களுக்கு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்....
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் எச்சரிக்கையாக இருங்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ்!

குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் எச்சரிக்கையாக இருங்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ்!

CINI NEWS, helth tips, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் எச்சரிக்கையாக இருங்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ்! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளது. ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் தான் இந்த குறைவுக்கு காரணம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாம் எல்லோருக்கும் தெரியும் தற்போது கொரோனா இரண்டாவது அலையில் நாம் இருக்கின்றோம். முதல் அலையை விட இரண்டாவது அலை மிக அதிக நபர்களை பாதித்துள்ளது. குறிப்பாக ஆஸ்துமா உள்பட ஒருசில நோய்கள் உள்ளவர்களை அதிகமாக பாதித்து வருகிறது. எனவே தயவுசெய்து வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம். ஒருவேளை அவசர காரியமாக வெளி...
தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் – நடிகர் சத்யராஜ் வேண்டுகோள்!

தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் – நடிகர் சத்யராஜ் வேண்டுகோள்!

CINI NEWS, helth tips, HOME SLIDER, செய்திகள், நடிகர்கள்
தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் - நடிகர் சத்யராஜ் வேண்டுகோள்! தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பொதுமக்கள் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அலட்சியம் காட்டுகிறார்கள். இதனால் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தடுப்பூசி தொடர்பாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: “சமீப காலமாக சில வேதனையான விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். யாருமே சரியாக தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை. செல்போன் வந்த பிறகு, நமக்கு நாமே மருத்துவர் ஆகிவிட்டோம். அக்கம்பக்கத...
பூசக்காயை கிருமி நாசினியாக பயன்படுத்தும் பழங்குடியின மக்கள்!

பூசக்காயை கிருமி நாசினியாக பயன்படுத்தும் பழங்குடியின மக்கள்!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
பூசக்காயை கிருமி நாசினியாக பயன்படுத்தும் பழங்குடியின மக்கள்! கொரோனா தொற்று பரவலை அடுத்து மக்கள் அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்புகளை கொண்டு கைகளை சுத்தம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியின கிராம மக்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள கைகளை கழுவுவதற்கு சோப்பு, கிருமி நாசினிக்கு பதிலாக பூசக்காய் என்ற பொருளை பயன்படுத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ளது புதுக்காடு கிராமம். இந்த கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார். தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கிருமி நாசினிக்கு பதிலாக வனப்பகுதியில் கிடைக்கும் அரிய வகை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த மக்கள் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரத்தில் கிடைக்கும் பூசக்காய்களை சேகரித்து, அவற்றை வெயிலில் உலர்த்தி பயன்படுத்தி வ...
ஆயுர்வேத மருந்து வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்!

ஆயுர்வேத மருந்து வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
 ஆயுர்வேத மருந்து வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்! ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டினம் என்ற கிராமத்தைச் சேர்ந்த போரிகி ஆனந்தயா என்ற ஆயுர்வேத மருத்துவர் கொரோனாவுக்கு மருந்து வழங்கி வருகிறார். அந்த மருந்து கொரோனா வராமல் தடுப்பது மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மருந்து இலவசம் என்றும் அறிவிப்பு வெளியிட்டதால் அதனை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். அந்த கிராமத்திற்கு செல்லும் சாலைகள் கார்கள், ஆம்புலன்சுகளால் நிரம்பி வழிகின்றன. பெருமளவிலான கூட்டத்தால், சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவமனைகளில் இருந்த கொரோனா நோயாளிகளை அழைத்துக்கொண்டு அவர்களின் உறவினர்களும் அங்கு ...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா!

CINI NEWS, helth tips, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா! தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில், நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம்! – சமந்தா

இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம்! – சமந்தா

CINI NEWS, helth tips, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம்! - சமந்தா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் சமீபத்திய பேட்டியில் கொரோனா குறித்து கூறியதாவது: “நம்பிக்கை, நேர்மறை சிந்தனைகள் இரண்டும் எந்த மாதிரி கஷ்டமான நிலைமை வந்தாலும் நம்மை காப்பாற்றும். கொரோனா நம்மை சுற்றி முற்றுகையிட்டு இருக்கிறது. எல்லோருக்கும் மூச்சுத்திணறுவது மாதிரி எங்கு பார்த்தாலும் கொரோனா பயத்தில்தான் இருக்கிறார்கள். அந்த வைரஸை எதிர்த்து போராட முடியும் என்ற தைரியம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். கஷ்டம் வந்து விட்டது என்று உயிரை மாய்த்துக்கொள்வது, கொரோனா வந்து விட்டது என்று தற்கொலை செய்து கொள்வது என்றெல்லாம் செய்யக்கூடாது. தைரியத்தை மட்டும் இழக்கவே கூடாது. கொரோனா தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்கும். கொரோனா தடுப்பு ஊசி எல்லோரும் போட்டு முடிக்கிற காலமும் விரைவில் வரும். முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடை...
மளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் – புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

மளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் – புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
மளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்! மளிகை, காய்கறி, டீ கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் என்ற அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகிறது. தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை உருவெடுத்து, கொடூரமாக தாக்கி வருகிறது. நோய்த் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதுதவிர ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் சனிக்கிழமைகளில் மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் கொரோனாவின் நோய...
கொரோனாவை விரட்ட சுய ஊரடங்கே தீர்வு – நடிகை அனுஷ்கா சொல்கிறார்!

கொரோனாவை விரட்ட சுய ஊரடங்கே தீர்வு – நடிகை அனுஷ்கா சொல்கிறார்!

CINI NEWS, helth tips, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கொரோனாவை விரட்ட சுய ஊரடங்கே தீர்வு - நடிகை அனுஷ்கா சொல்கிறார்! கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளம் மூலமாக கொரோனா தொடர்பான உதவிகளைப் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகை அனுஷ்கா, கொரோனாவை எதிர்கொள்ள சில அறிவுரைகளை கூறியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது: “இந்த இக்கட்டான சமயத்தில் ஒருவருக்கு ஒருவர் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். வழிகாட்டு முறைகளை தயவு செய்து கடைபிடியுங்கள். வீட்டிலேயே இருங்கள். சுய ஊரடங்கை கடைபிடிப்போம். சில மூச்சு பயிற்சிகளை செய்யுங்கள். ஒவ்வொரு நாளையும் நேர்மறை எண்ணத்துடன் அணுகுங்கள். எந்த நிலையிலும் சோர்ந்து விடாதீர்கள். எதிர்மறை எண்ணங்களை வர விடாதீர்கள். நாம் ஒன்றாக இணைந்து மனிதகுலத்தின் பலத்தை கா...