செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4
Shadow

Tag: சாத்தான்குளம் அப்பா மகன் இரட்டைக்கொலை

நீதிமன்ற நடுவரின் விசாரணைக்கு சாத்தான்குளம் போலீஸ் ஒத்துழைப்பு இல்லை – நீதிபதிகள் அதிருப்தி

நீதிமன்ற நடுவரின் விசாரணைக்கு சாத்தான்குளம் போலீஸ் ஒத்துழைப்பு இல்லை – நீதிபதிகள் அதிருப்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு இல்லை என்பதால் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தை கலெக்டர் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து மரணம் அடைந்தது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தந்தை, மகன் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு போலீசார் போதிய ஒத்துழைப்பு தரவில்லையென தெரிகிறது என்று நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனஎ. அத்துடன், தடயவியல் துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலை...
CBI விசாரணையால் சாத்தான்குளம் அப்பா,மகன் கொலையில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன் – ப.சிதம்பரம் கருத்து

CBI விசாரணையால் சாத்தான்குளம் அப்பா,மகன் கொலையில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன் – ப.சிதம்பரம் கருத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்ட தந்தை, மகன் மரணம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாக குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தமிழக முதல்வர் கூறி உள்ளார். தமிழக முதல்வரின் இந்த முடிவை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடியில் காவல் துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு (தந்தை, மகன்) நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது. 1996 ஆம் ஆண்டில் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்...