Saturday, July 4
Shadow

Tag: சாத்தான்குளம் அப்பா மகன் இரட்டைக்கொலை

தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட சாத்தான்குளம் போலீஸ் !

தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட சாத்தான்குளம் போலீஸ் !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட சாத்தான்குளம் போலீஸ் ! சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு. தப்பி ஓடிய முத்துராஜை தேடி வருகிறோம். விரைவில் பிடிபடுவார். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட யாரும் அப்ரூவராக மாறவில்லை. சிபிசிஐடி போலீஸ் அறிவிப்பு...
சாத்தான்குளம் கொலைக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் – ஸ்டாலின்

சாத்தான்குளம் கொலைக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் – ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சாத்தான்குளம் கொலையில் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க முயன்ற அ.தி.மு.க அரசின் அனைத்து முயற்சிகளும் தவிடுபொடியாக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் தலையீட்டினால் சட்டத்தின் முன் வளைக்கப்பட்டதை வரவேற்கிறேன். குடும்பத்தின் கண்ணீர், மக்கள் போராட்டம், கடையடைப்பு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள், நீதிமன்றம், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரால் சுற்றி வளைக்கப்பட்டு அதிமுக அரசு சிக்கிக்கொண்டது. இந்த வழக்கில் சிலரைக் கைது செய்துவிட்டு, அனைவரது வாயையும் மூடிவிடலாம் என்று அரசு தப்புக்கணக்கு போட்டுவிடக் கூடாது. அனைத்து தரப்பினரும் கண்காணித்துக்கொண்டு தான் இருப்பார்கள். கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்ட வேண்டும். மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சாட்சியம் அளித்த தலைமைக் காவலர் ரேவதி ஆகியோருக்கு பாதுகாப்பு...
அப்பா-மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் சாட்சி சொன்ன பெண் போலீசுக்கு போலீஸ் பாதுகாப்பு!

அப்பா-மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் சாட்சி சொன்ன பெண் போலீசுக்கு போலீஸ் பாதுகாப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அப்பா-மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் சாட்சி சொன்ன பெண் போலீசுக்கு போலீஸ் பாதுகாப்பு! சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து நீதிமன்றத்தில் 5 காவலர்களை கைது செய்தது எப்படி என்று சிபிசிஐடி போலீசார் விளக்கம் அளித்தனர். முன்னதாக வியாபாரி-மகன் பரிதாபமாக அடித்து கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியம் அளித்த பெண் போலீஸ் ஏட்டு ரேவதி, “எனக்கும் - குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   இன்று சாத்தான்குளம் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிள...
ஊர் ஊராக காரில் தப்பிய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது கொலைவழக்கு பதிவு!

ஊர் ஊராக காரில் தப்பிய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது கொலைவழக்கு பதிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஊர் ஊராக காரில் தப்பி ஓடிய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை சினிமா பாணியில் CBCID போலீசார் சேசிங் செய்து பிடித்து இருக்கிறார்கள். அப்பா,மகன் இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். ஏற்கனவே இவர் மீது உறவுக்கார பெண்ணை கொல்ல முயன்ற கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சாத்தான்குளம் அப்பா, மகன் இரட்டை படு கொலை வழக்கு சூடு பிடித்து உள்ளது. - கோடங்கி...
சாத்தான்குளம் இரட்டை கொலை… ஒரு எஸ்.ஐ கைது ஒரு எஸ்.ஐ தலைமறைவு!

சாத்தான்குளம் இரட்டை கொலை… ஒரு எஸ்.ஐ கைது ஒரு எஸ்.ஐ தலைமறைவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      சாத்தான்குளம் இரட்டை கொலையில் 6 பேர் மீது வழக்கு ஒரு எஸ்.ஐ கைது ஒரு எஸ்.ஐ தலைமறைவு.. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்து சிபிசிஐடி உடனடியாக விசாரணை தொடங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று சிபிசிஐடி பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். காவலில் உயிரிழப்பு என்றிருந்ததை பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக பதிவு செய்தது சிபிசிஐடி. சம்பவம் தொடர்பான 2 முதல் தகவல் அறிக்கைகளிலும் கொலை வழக்காக பதிவு செய்து சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் போலீசார் மகாராஜன், முருகன் உட்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உடனடியாக எஸ்.ஐ.  ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார். இன்னொரு எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தப...
சிபிஐ விசாரணையை கையில் எடுப்பதற்குள் ஆதாரங்களை அழிக்க அதிக வாய்ப்பு உள்ளது – கோர்ட் சந்தேகம்

சிபிஐ விசாரணையை கையில் எடுப்பதற்குள் ஆதாரங்களை அழிக்க அதிக வாய்ப்பு உள்ளது – கோர்ட் சந்தேகம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் நேற்று முன் தினம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களை தர மறுத்ததாகவும் கூறி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் அளித்திருந்தார். காவல் அதிகாரிகளை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என காவலர் மகாராஜன் அவதூறாக பேசியதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மூன்று காவலர்களையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில், கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்ப...
நீதிபதியை மிரட்டும் சாத்தான்குளம் போலீஸ்… கடுப்பான கோர்ட்!

நீதிபதியை மிரட்டும் சாத்தான்குளம் போலீஸ்… கடுப்பான கோர்ட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நீதிபதியை மிரட்டும் சாத்தான்குளம் போலீஸ்... கடுப்பான கோர்ட்! சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாகவே முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. சாத்தான்குளம் காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், வருவாய்த்துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மேலும் தடயவியல் துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சென்று அங்குள்ள தடயங்களை சேகரிக்க வேண்டும் எனவும்...
நீதிமன்ற நடுவரின் விசாரணைக்கு சாத்தான்குளம் போலீஸ் ஒத்துழைப்பு இல்லை – நீதிபதிகள் அதிருப்தி

நீதிமன்ற நடுவரின் விசாரணைக்கு சாத்தான்குளம் போலீஸ் ஒத்துழைப்பு இல்லை – நீதிபதிகள் அதிருப்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு இல்லை என்பதால் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தை கலெக்டர் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து மரணம் அடைந்தது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தந்தை, மகன் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு போலீசார் போதிய ஒத்துழைப்பு தரவில்லையென தெரிகிறது என்று நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனஎ. அத்துடன், தடயவியல் துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்...
CBI விசாரணையால் சாத்தான்குளம் அப்பா,மகன் கொலையில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன் – ப.சிதம்பரம் கருத்து

CBI விசாரணையால் சாத்தான்குளம் அப்பா,மகன் கொலையில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன் – ப.சிதம்பரம் கருத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்ட தந்தை, மகன் மரணம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாக குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தமிழக முதல்வர் கூறி உள்ளார். தமிழக முதல்வரின் இந்த முடிவை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடியில் காவல் துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு (தந்தை, மகன்) நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது. 1996 ஆம் ஆண்டில் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்...