செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: curfew

7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்!

7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்! கொரோனா பரவாமல் இருப்பதற்காக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை வருகிற 7-ந்தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த நிலையில் பொது மக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடை வியாபாரிகள் தங்களது வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் நாளை (திங்கட்கிழமை) முதல் தெருத்தெருவாக சென்று விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள கடைகளுக்கு சென்று சீட்டு எழுதி கொடுத்து விட்டு வந்து விடலாம் அல்லது செல்போன் மூலமும் மளிகைப் பொருட்களை வாங்க தகவல் கொடுக்கலாம். கடைக்காரர்கள் இந்த பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கும் அரசு அனுமதி கொடுத்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகைப் பொருட்களை விநியோகிக்க நேரம் ஒதுக்கி உள்ளது. இ...
முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்! காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- ஊரகப்பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளன. கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா குறித்த விழிப்புணர்வு முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு. எவ்வித தளர்வும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதன் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரிய ஆரம்பிக்கும். தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்.  கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கைகளும் தற்போது போதுமான அளவில் உள்ளன. 18 முதல் ...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை! கொரோனா 2-வது அலை பரவல் தமிழகத்தையே ஆட்டிவைத்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி போடும் பணிகளும், தடுப்பு நடவடிக்கைகளும் என அரசு ஒருபுறம் நடவடிக்கைகளை கையாண்டாலும், கொரோனா பரவல் தீவிரம் குறைந்தபாடில்லை. இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு என பல கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் கொரோனா வீரியத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையே இருக்கிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ஒருவார காலம் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்தார். ஊரடங்கையொட்டி பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள ஏதுவாக 2 நாட்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டன. மக்களும் தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர். அந்தவகையில் தமிழகம் முழுவதும் ஒருவார கால தள...
தமிழகம் முழுவதும் 4,380 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை- தமிழக அரசு ஏற்பாடு!

தமிழகம் முழுவதும் 4,380 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை- தமிழக அரசு ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் முழுவதும் 4,380 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை- தமிழக அரசு ஏற்பாடு! இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையொட்டி கடந்த 2 நாட்களாக அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டது. மக்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இந்த தளர்வு வழங்கப்பட்டது. ஏராளமானோர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். என்றாலும் காய்கறி, பழம் ஆகியவை மக்களின் அன்றாட தேவைக்கு மிகவும் அவசியமாகும். எனவே அவற்றை அரசு மூலம் வாகனங்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வார காலம் நடமாடும் வாகனங்கள் மூலம் நாள்தோறும் வீதி வீதியாக வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. வீதி, வீதியாக சென்று வீடுகளிலேயே இவை விற்பனை செய்யப்படுகின்றன. வேளாண் துறை சார்பில் தோட்டக்கலையினர் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவர...
தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது!

தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது! தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், சட்டமன்ற குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை கலந்து பேசி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் நடமாட்டத்தை குறைக்க தமிழகத்தில் படிப்படியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆரம்பத்தில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை...
ஊரடங்கு நீட்டிப்பா?-முதலமைச்சர் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பா?-முதலமைச்சர் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பா?-முதலமைச்சர் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை! தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 24-ந்தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை காலை 10 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடனும், பின்னர் எம்.எல்.ஏ.க்கள் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது....
ஆதரவற்றோர் இல்லத்துக்கு 1 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கிய போலீஸ் தம்பதி!

ஆதரவற்றோர் இல்லத்துக்கு 1 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கிய போலீஸ் தம்பதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆதரவற்றோர் இல்லத்துக்கு 1 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கிய போலீஸ் தம்பதி! தமிழகத்தில் கொரோனா 2ம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோர் உணவுக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்காக பல்வேறு தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். பல இடங்களில் தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த போலீஸ் தம்பதி தங்களது ஒரு மாத சம்பளத்தில் ஆதரவற்றோர் இல்லத்துக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளனர். https://www.youtube.com/watch?v=VeXk-fRr0tM திண்டுக்கல் அருகே உள்ள கல்லடிப்பட்டியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திலும், இவரது மனைவி செல்வரத்தினம் விளா...
இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணமும் சேர்ப்பு!

இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணமும் சேர்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணமும் சேர்ப்பு! தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் அவசர பயணத்துக்காக இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இ-பதிவு முறை நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் இ-பதிவு பெறாமல் யாராவது வாகனங்களில் வெளியில் சுற்றினால் அவர்களது வாகனங்கள் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இ-பதிவு முறையில் ஏராளமானோர் திருமணத்திற்காக பயணிப்பதால் அந்த காரணம் நீக்கப்பட்டிருந்தது. தற்போது உரிய ஆவணங்களுடன் இ-பதிவு முறையில் திருமணத்திற்காக பயணிக்க...
தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை தீவிரம்!

தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை தீவிரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை தீவிரம்! கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 10-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வருகிற 24-ந்தேதி வரையில் அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகை கடைகள் மட் டும் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை திறந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டு இருந்தது. அதே நேரத்தில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி வெளியிட்ட அறிக்கையில், “ஊரடங்கை மீறி வெளியில் வரும் மக்களிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது” என்று தெரிவித்தார். இதன் காரணமாக சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் ஊரடங்கை மீறி வெளியில் வந்தவர்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் தேவையின்...
கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் 8 வாரங்களுக்கு ஊரடங்கு தேவை- ஐசிஎம்ஆர் சிபாரிசு!

கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் 8 வாரங்களுக்கு ஊரடங்கு தேவை- ஐசிஎம்ஆர் சிபாரிசு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் 8 வாரங்களுக்கு ஊரடங்கு தேவை- ஐசிஎம்ஆர் சிபாரிசு! இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வருவதால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் திணறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இருந்து வருகிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதிநேர ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் வைரஸ் பாதிப்பு சற்றுதான் குறைந்து இருக்கிறது. கொரோனாவை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவர மேலும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 10 சதவீதம் ம...