செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: modi

போலீசார் மீதான தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும் – பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை!

போலீசார் மீதான தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும் – பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
போலீசார் மீதான தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும் - பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை! ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐ.பி.எஸ். பயிற்சி பெற்று வரும் 71 மற்றும் 72-வது பிரிவு இளம் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் இளம் அதிகாரிகளுக்கு அவர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அந்தவகையில் அவர் பேசும்போது கூறியதாவது:- ஒரு சிறந்த போலீஸ் துறை மற்றும் அதற்கான பயிற்சி கட்டமைப்புகளை கட்டியெழுப்ப கடந்த 75 ஆண்டுகளாக இந்தியா முயற்சித்து வருகிறது. இந்த பணிகள் சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த 1930 முதல் 1947 வரையிலான காலகட்டத்தில் நாட்டின் இளம் தலைமுறையினர் முன்னோக்கி வந்தனர். ஒட்டுமொத்த இளம் தலைமுறையினரும் ஒரே குறிக்கோளுக்காக ஒன்றிணைந்தனர். அதே உணர்வை தற்ப...
இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்! பிரதமர் மோடி  தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. ஆனால் இந்த 2 ஆண்டுகளில் ஒரு முறைகூட மத்திய மந்திரிசபையில் மாற்றமோ, விரிவாக்கமோ செய்யப்படவில்லை. இந்த நிலையில், மத்திய மந்திரிசபையில் மாற்றங்கள் செய்ய வசதியாக 12 மந்திரிகள் நேற்று ராஜினாமா செய்தனர். 12 மந்திரிகளின் ராஜினாமாக்களை  பிரதமர் மோடியின் பரிந்துரை பேரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து மத்திய மந்திரிசபையில் புதிய மந்திரிகளின் பதவி ஏற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடந்தது. இதில் புதிதாக 43 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி  தலைமையில் இன்...
நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடி அரசு – திருமாவளவன் எம்.பி கண்டனம்!

நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடி அரசு – திருமாவளவன் எம்.பி கண்டனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடி அரசு - திருமாவளவன் எம்.பி கண்டனம்! தகவல் தொழில்நுட்ப விதிகள் என்ற பெயரில் சமூக ஊடக நிறுவனங்களை மிரட்டி அவற்றைப் பயன்படுத்தும் குடிமக்களின் அந்தரங்கத் தரவுகளை கண்காணிக்க முயற்சிக்கும் பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்குக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனத்தை தெரிவித்துள்ளது இது தொடர்பாக  திருமாவளவன் எம்.பி வெளியிட்ட அறிக்கையில், பாஜக அரசு வகுத்துள்ள தகவல் தொழில்நுட்ப விதிகள் -2021, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தரவுகளை அளிக்குமாறு அரசாங்கம் கோரினால் அவற்றைத் தொடர்புடைய நிறுவனங்கள் உடனடியாக வழங்க வேண்டுமென்றும்; அரசாங்கம் சுட்டிக்காட்டுகிற பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டுமென்றும்; இவற்றைச் செய்வதற்கு பொறுப்புள்ள அலுவலர்களை நியமிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது. இதற்கு ஒப்புக் கொள்ளாத சமூக ஊடக நிறுவனங்களை இந்த...
யாஸ் புயலால் கடும் பாதிப்பு- ஒடிசா முதல்வருடன் பிரதமர் மோடி ஆய்வு!

யாஸ் புயலால் கடும் பாதிப்பு- ஒடிசா முதல்வருடன் பிரதமர் மோடி ஆய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
யாஸ் புயலால் கடும் பாதிப்பு- ஒடிசா முதல்வருடன் பிரதமர் மோடி ஆய்வு! வங்க கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசாவின் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே நேற்று முன்தினம் கரை கடந்தது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. 10-க்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களான கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. இதேபோல் ஒடிசாவில் பாலசோர் மற்றும் பத்ராக் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்ய உள்ளார...
பாஜக அரசின் திட்டமிடாத தடுப்பூசி கொள்கையால் நிச்சயம் மூன்றாம் அலை உருவாகும் : ராகுல் காந்தி

பாஜக அரசின் திட்டமிடாத தடுப்பூசி கொள்கையால் நிச்சயம் மூன்றாம் அலை உருவாகும் : ராகுல் காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பாஜக அரசின் திட்டமிடாத தடுப்பூசி கொள்கையால் நிச்சயம் கொரோனா மூன்றாம் அலை உருவாகும் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் அதிக அளவில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது.   இதைத் தடுக்க கொரோனா தடுப்பூசி சிறந்த வழி என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசு மூன்று கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை அறிவித்துள்ளது.  அதன்படி மே 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே முதல் இரண்டு கட்டங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் பலருக்கு இன்னும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படவில்லை.  இதற்கு கொரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு முக்கிய காரணம் ஆகும்.   பாஜக அரசு சரியான உற்பத்தி மற்றும் திட்டமிடல் இல்லாமல் வெளிநாடுகளுக்கு மருந்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதால் இந்த தட்டுப...
மே.,வங்கத்தில் பா.ஜ.,வெற்றி பெறும் என கணிக்க கடவுளா மோடி? மம்தா கேள்வி

மே.,வங்கத்தில் பா.ஜ.,வெற்றி பெறும் என கணிக்க கடவுளா மோடி? மம்தா கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வெற்றி பெறும் என கணிக்க கடவுளா மோடி? மம்தா கேள்வி மேற்கு வங்கத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதமிருக்கும் நிலையில், அங்கு பா.ஜனதா வெற்றி பெறும் என கணிப்பதற்கு நீங்கள் கடவுளா? என பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே தொடர்ந்து வார்த்தை மோதல்கள் வெளிப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்றுமுன்தினம் மேற்கு வங்கத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பிரதமர் மோடி, அங்கு தேர்தலுக்குப்பின் பா.ஜனதா அரசு அமையும் என கூறினார். புதிய அரசு பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்பேன் எனவும், மாநிலத்தில் பிரதமர் கிசான் நிதி திட்டத்தை வெகு விரைவில் அமல்படுத்துமாறு அப்போது வலியுறுத்துவேன் என்றும் கூறியிருந்தார்....
இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு  ஈழத் தமிழர்களுக்கு மோடி அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம் -மு.க ஸ்டாலின்

இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு ஈழத் தமிழர்களுக்கு மோடி அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம் -மு.க ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics
இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவி ஈழத் தமிழர்களுக்கு மோடி அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 'இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். ஆனால், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது இந்திய அரசு. ஈழத் தமிழர்களுக்கு விரோதமான பாஜக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சார்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இந்தியா, இலங்கை...
வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கவும், ஓட்டுகளை அள்ளவும் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்கும் பா.ஜ.க. தலைவர்கள் – மம்தா குற்றச்சாட்டு

வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கவும், ஓட்டுகளை அள்ளவும் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்கும் பா.ஜ.க. தலைவர்கள் – மம்தா குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics
வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கவும், ஓட்டுகளை அள்ளவும் பா.ஜ.க. தலைவர்கள் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்குகின்றனர் - மம்தா குற்றச்சாட்டு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளார். ஆனால் அவரிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியே தீருவது என்று பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளது. மம்தா கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்கள் முதல் மந்திரிகள் வரை பலரும் பா.ஜ.க.வுக்கு தாவுகின்றனர். இந்த தருணத்தில் பாசிம் மெதினிபூரில் நேற்று மம்தா பானர்ஜி பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதற்காகவும், ஓட்டுகளை அள்ளுவதற்காகவும் பா.ஜ.க. தலைவர்கள் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்குகின்ற...
அதெல்லாம் சரி… பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? 15 லட்சம் எங்கே? – மோடிக்கு சவால் விட்ட மேற்கு வங்க எம்பி

அதெல்லாம் சரி… பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? 15 லட்சம் எங்கே? – மோடிக்கு சவால் விட்ட மேற்கு வங்க எம்பி

HOME SLIDER, NEWS, politics
அதெல்லாம் சரி... பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? 15 லட்சம் எங்கே? - மோடிக்கு சவால் விட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மேற்கு வங்கத்தில் இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்று முதல்வர் பதவியில் இருக்கும் மம்தா பானர்ஜியை, இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பிரதமர் மோடி இன்று தனது பிரசாரத்தின்போது மம்தா பானர்ஜியை தாக்கி பேசினார். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுவதாகவும், மம்தா பானர்ஜி வெளியேற உள்ளதாகவும் அவர் பேசினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், பிரதமருக்கு சவால் விட்டிருக்கிறார். டெரிக் ஓ பிரையன் கூறியதாவது:- நீங்கள் அழிவுகரமான கட்சி. நான் பிரதமரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்க விரும்புகிறேன். உங்கள் முதலமைச்சர் வேட்பாளர் யார்? எங்களிடம் மம்தா பானர்ஜி இருக்கிறார். உங்களால் ஏன் ...
உலகின் மிக நீளமான அடல் சுரங்க நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

உலகின் மிக நீளமான அடல் சுரங்க நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
    உலகின் மிக நீளமான அடல் சுரங்க நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி மணாலி - லே இடையிலான சுரங்கப்பாதை இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு. உலகின் மிக நீளமான அடல் சுரங்கபாதையை இமாச்சல பிரதேசத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் இந்த சுரங்கப்பாதைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கபாதையின் சிறப்பம்சங்கள் என்ன? 9.02 கிலோ மீட்டர் நீளம். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 மீட்டர் உயரம். என உலகின் அதி நீள சுரங்க பாதையாக உருவாகி இருக்கிறது அடல் சுரங்க பாதை. மணாலியையும் லாஹாவ் - ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த சுரங்கபாதை உருவாக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டுதோறும் சுமார் 6 மாத காலத்துக்கு இந்த பள்ளத்தாக்குப் பகுதிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள...