வியாழக்கிழமை, மே 16
Shadow

பாஜக அரசின் திட்டமிடாத தடுப்பூசி கொள்கையால் நிச்சயம் மூன்றாம் அலை உருவாகும் : ராகுல் காந்தி

 

பாஜக அரசின் திட்டமிடாத தடுப்பூசி கொள்கையால் நிச்சயம் கொரோனா மூன்றாம் அலை உருவாகும் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் அதிக அளவில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது.   இதைத் தடுக்க கொரோனா தடுப்பூசி சிறந்த வழி என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசு மூன்று கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை அறிவித்துள்ளது.  அதன்படி மே 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏற்கனவே முதல் இரண்டு கட்டங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் பலருக்கு இன்னும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படவில்லை.  இதற்கு கொரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு முக்கிய காரணம் ஆகும்.   பாஜக அரசு சரியான உற்பத்தி மற்றும் திட்டமிடல் இல்லாமல் வெளிநாடுகளுக்கு மருந்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து டிவிட்டரில்,

“பாஜக அரசின் முறையற்ற கொரோனா தடுப்பூசி கொள்கையால் நாட்டில் பேரழிவு உருவாகும்.  இது நிச்சயம் கொரோனா மூன்றாம் அலையை உருவாக்கும்.  இது போல் தவறுகள் நடக்காமல் தடுக்க முறையான கொரோனா தடுப்பூசி செயல் திட்டம் தேவை”

 

296 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன