சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: pa.ranjith

‘துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்!

‘துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்! விக்ரமின் மகன் துருவ், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான இப்படத்தில், துருவ் விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து தற்போது, தனது தந்தையுடன் இணைந்து ‘சியான் 60’ படத்தில் நடித்து வருகிறார் துருவ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து நடிகர் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
இயக்குனர் பா.இரஞ்சித்தின் ‘மார்கழியில் மக்களிசை 2020’

இயக்குனர் பா.இரஞ்சித்தின் ‘மார்கழியில் மக்களிசை 2020’

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  வானம் கலைவிழாவை தொடர்ந்து இயக்குனர் பா.இரஞ்சித்தின் அடுத்த அறிவிப்பு : மார்கழியில் மக்களிசை, நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னையில் பல்வேறு அரங்கங்களில் 8 நாட்கள் நடைபெறவுள்ளதாக இயக்குனர் பா.இரஞ்சித் அறிவித்துள்ளார். திரைப்படங்கள் இயக்குவதைக் கடந்து பல்வேறு சமூக, கலைப் பணிகளையும் மேற்கொண்டு வருபவர் இயக்குனர் பா.இரஞ்சித். இவர் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் ஆவணப்படங்களை தயாரித்தல், நாடகங்களை அரங்கேற்றுதல் என சினிமாவை தாண்டிய பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். மேலும் இசை வரலாற்றில் முதல் முறையாக பாப், ராப், கானா, கிராமியம், கர்நாடக இசை என அனைத்து வகையான இசைகளையும், இசைக் கலைஞர்களையும் இணைத்து ‘Casteless Collective’ எனும் இசைக்குழுவையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். ‘Casteless Collective’ இசைக்குழு இதுவரை இ...
எத்தனை பேரிடர் வந்தாலும் தலித் மக்கள் மீதான சாதி கொடுமைகள் ஒழியாது – ரஞ்சித் வேதனை

எத்தனை பேரிடர் வந்தாலும் தலித் மக்கள் மீதான சாதி கொடுமைகள் ஒழியாது – ரஞ்சித் வேதனை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    எல்லா பேரிடரிலும் ஒன்றாய் நிற்கிறோம்.. சாதிப் பேரிடரில் மட்டும் தனித்தனியாய் நிற்கிறோம். - பா.இரஞ்சித் அறிக்கை! உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும், தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த பொது ஊரடங்கிற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோய் பற்றிய பீதிக்குள் நாம் நுழைந்தோம். அந்த பீதி இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. பல்வேறு இடர்பாடுகளை தாங்கி நாம் அனைவருமே கொரோனாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நோய்தொற்றினால் நாம் இறந்துவிடுவோமோ என்கிற அச்சத்தை போக்குவதற்காக நமக்கு, "நோயுடனே வாழ பழகிக்கொள்வோம்" என்று அரசு தரப்பு இப்போது ந...
+2 மாணவர்களுக்கு பாடமாகி தமிழ் திரையுலகை பெருமைபடுத்திய பரியேறும் பெருமாள் படக்கதை..!

+2 மாணவர்களுக்கு பாடமாகி தமிழ் திரையுலகை பெருமைபடுத்திய பரியேறும் பெருமாள் படக்கதை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவில் எப்போதாவது அத்தி பூத்தார் போல வரும் சில படங்கள் காலம் காலமாக மக்களை பேச வைக்கும். இதற்கு பல படங்களை உதாரணமாக சொல்லலாம். சமீபத்திய மெகா உதாரணம் இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த பரியேறும் பெருமாள். கதிர் , ஆனந்தி, லிஜீஸ் மாரிமுத்து உட்பட பலர் நடித்த இந்த படம் எந்த ஜாதி அடையாளமும் இல்லாமல் ஜாதி துவேஷங்களை தோலுரித்தது. அதோடு திரைக்கதை அத்தனை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு படம் பார்த்த அனைவராலும் பாராட்டப்பட்டது. அதோடு பல நாடுகளில் விருது விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றது. இந்த வெற்றியின் மகுடமாக 12ம் வகுப்பு பாட புத்தகத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் கதையமைப்பு, திரைக்கதை வடிவம் ஒரு பாடமாக இடம் பிடித்து படம் இயக்கிய, தயாரித்த அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது. பாட புத்தகத்தில் ஒரு சினி...
பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா?-இயக்குனர் ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி

பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா?-இயக்குனர் ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா?-இயக்குனர் ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி சினிமா டைரக்டர் பா.ரஞ்சித், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- ஜூன் 5-ந் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பில், அதன் நிறுவனர் டிஎம் மணி என்ற உமர் பாரூக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது. அதற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன். சாதியத்தை எவ்வாறு நீக்குவது? சாதி இல்லாத சமூகத்தை உருவாக்குவது எப்படி? போன்றவை குறித்தும், நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் “செந்தமிழ் நாட்டு சேரிகள்” எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன். நான் ஒரு இந்திய குடிமகன். இந்திய ...
இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு விருந்தளித்து கவுரவப்படுத்திய இந்தி பிரபலம்..!

இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு விருந்தளித்து கவுரவப்படுத்திய இந்தி பிரபலம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  பாலிவுட் திரைப்பட உலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் அநுராக் காஷ்யப். பல புதிய முயற்சிகளின் மூலம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிற முனைப்பில் இருக்கும் அவர், பாலிவுட்டில் அறிமுகம் ஆக இருக்கிற தமிழ் இயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்து பேசியிருப்பது இந்தி சினிமாவில் ஹாட் டாபிக் இருக்கிறது. சமீபத்தில் 'காலா' 'பரியேறும் பெருமாள்' படங்களை பார்த்த இயக்குனர் அனுராக். இயக்குனர் இரஞ்சித்தை சந்திக்க வரச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார். இதனையடுத்து மும்பையில் இரஞ்சித்துக்கு அனுராக் விருந்தளித்திருக்கிறார். இந்த சந்திப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "காலா" திரைப்படம் குறித்து சிலாகித்துப் பேசியிருக்கிறார். அந்த படத்தின் அரசியல், தொழில்நுட்ப நேர்த்தி ஆகியவை குறித்தும் விரிவாக பேசியிருக்கிற...
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் புதுப்படம்..!

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் புதுப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்தபடம் . இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரடக்சன்ஸ் , மற்றும் பத்ரி கஸ்தூரியின் ஷர்தா எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் இன்று துவங்கப்பட்டது. பா. இரஞ்சித்திடம் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் மாரி இந்த படத்தை இயக்குகிறார். கலையரசன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. படத்தின் முதல்கட்டபணிகள் இன்று துவங்கியிருக்கிறார்கள்....
பா.ரஞ்சித் தயாரிப்பில்  ‘குண்டு’ படத்தில் பிக்பாஸ் ரித்விகா..!

பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘குண்டு’ படத்தில் பிக்பாஸ் ரித்விகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘குண்டு’ படத்தில் நடிகையாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா ஒப்பந்தமாகியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், அதன் சமூக கருத்தினாலும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. சாதிய படுகொலையை மையமாக வைத்து உருவான பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிக்கும் அடுத்தப்படும் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது இயக்குநர் பா.ரஞ்சித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அறிவிப்பு, அறிமுக இயக்குநர் ஆதிரை ஆதித்யா இயக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பா.ரஞ்சித்தின் அறிமுக நடிகரான ‘அட்டக்கத்தி’ தினேஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார்.அவரைத் தொடர்ந்து தற்போது, ‘பிக் பாஸ்’ டைட்டிலை வென்ற ந...