என்னை தளபதியாக்கியது ரசிகர்கள்தான். நான் தளபதியாக இருக்க வேண்டுமா அல்லது தலைவனாக மாற வேண்டுமா என்பதை ரசிகர்களும்,
காலமும்தான் முடிவு செய்யவேண்டும்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படம் வரும் 13-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
வழக்கமாக விஜய் படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும். அந்த நிகழ்ச்சியின்போது விஜய் பேசும் விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாவது வழக்கம்.
இந்தமுறை ஆடியோ வெளியீட்டு விழா வைக்காத விஜய்யின் ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகியது.
அதன் காரணமாக விஜய் சன் டிவியில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்சன் நெறியாளராக இருந்து கேள்விகளை கேட்டார்.
சன் தொலைக்காட்சி இன்று 9 மணிக்கு வெள...
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடிகர் விஜய் எளிமையாக வந்து தனது வாக்கை செலுத்தினார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் சுமார் 2 கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை நீலாங்கரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் நடிகர் விஜய் காலையிலேயே வந்து வாக்கினை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, சைக்கிளில் வந்து நடிகர் விஜய் வாக்கு செலுத்தியிருந்தார்.
பெட்ரோல் - டீசல் விலை உயர்வை குறிப்பிட்டு நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்ததாக அப்போது பேசப்பட்டது. சமூக ஊடகத்திலும் அவர் சைக்கிளில் வந்து வாக்களித்த வீட...