வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

உலக செய்திகள்

தீங்கு செய்தால் வலுவான பதிலடி… ரஷியாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை!

தீங்கு செய்தால் வலுவான பதிலடி… ரஷியாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
தீங்கு செய்தால் வலுவான பதிலடி... ரஷியாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை! அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்றார். அப்போது அந்த நாட்டை கொரோனா தொற்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. இப்போது அந்த தொற்றில் இருந்து அமெரிக்கா மீண்டுவந்து விட்டது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது முதல் வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். 8 நாள் ஐரோப்பிய பயணத்தில் முதல் கட்டமாக அவர் நேற்று இங்கிலாந்து சென்றார். மனைவி ஜில் பைடனுடன் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் அவர் சபோல்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமான மில்டன்ஹாலில் வந்து தரை இறங்கினார்.அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐரோப்பிய பயணத்தின் இறுதிகட்டமாக சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகருக்கு செல்லும் ஜோ பைடன், அங்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசுகிறார். பருவநிலை மாற்றம், உக்ரைனில் ரஷிய ராணுவ...
50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் – ஜோ பைடன்!

50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் – ஜோ பைடன்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் - ஜோ பைடன்! 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக, வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: அமெரிக்கா 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி அதை குறைந்த மற்றும் நடுத்தரத்துக்கும் குறைவான வருவாய் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் என 92 நாடுகளுக்கு வழங்க உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மூலம் பல மில்லியன் நபர்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளார்....
மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதித்த சீனா!

மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதித்த சீனா!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள சீனா அனுமதித்துள்ளது. சீனாவில், கடந்த 1979 ஆம் ஆண்டு முதல், தம்பதிகள், ஒரு குழந்தையை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும் என்ற கொள்கை நடைமுறையானது. இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டில் அந்தக் கொள்கையில் திருத்தம் கொண்டுவந்த சீன அரசாங்கம், தம்பதிகள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளித்தது. எவ்வாறிருப்பினும், சீனாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளில், பிறப்பு வீதம் செங்குததான சரிவைக் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வருடாந்த பிறப்புகள் 2020 ஆம் ஆண்டில், தொடர்ந்து 12 மில்லியனாக குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர பணியகம் கடந்த மாதம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதித்து சீன அரசாங்கம் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன....
டுவிட்டருக்கு தடை..!

டுவிட்டருக்கு தடை..!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நாட்டு ஜனாதிபதி மொஹமட் புஹாரி அண்மையில் டுவிட்டரில் பதிவிட்ட கருத்து நீக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொஹமட் புஹாரிக்கு எதிராக நைஜீரியாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இந்நிலையில் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தூண்டுவது போன்று அவர் பதிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்களது விதிகளை மீறும் வகையில் அவர் கருத்து வெளியிட்டதாக அறிவித்த டுவிட்டர் அவரது பதிவையும் நீக்கியது. இந்நிலையில் காலவரையன்றி அந்நாட்டில் டுவிட்டர் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது...
மீண்டும் வருகிறது சூப்பர்சோனிக் விமானம்!

மீண்டும் வருகிறது சூப்பர்சோனிக் விமானம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
மீண்டும் வருகிறது சூப்பர்சோனிக் விமானம் ஒலியைவிட வேகமாக செல்லக்கூடிய சூப்பர்சோனிக் விமானங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இறங்கி உள்ளது. இதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த பூம் நிறுவனத்திடம் இருந்து முதற்கட்டமாக 15 புதிய சூப்பர்சோனிக் பயணிகள் விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ், 2029ம் ஆண்டு விமானம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் அட்லாண்டிக் வழித்தடத்தில் பயணித்தால் பயண நேரம் பாதியாக குறையும். உதாரணமாக, லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு 3.5 மணி நேரத்தில் செல்ல முடியும். யுனைடெட் நிறுவனத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி விமானங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் விமான சேவையில் 1976ம் ஆண்டு நுழைந்...
கம்போடியாவில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ராட்சத எலி!

கம்போடியாவில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ராட்சத எலி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  கம்போடியாவில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ராட்சத எலி கம்போடியாவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க 7 வயதான ஆப்பிரிக்க எலி பயிற்சி பெற்று இருந்தது. இதன் மூலம் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வெடிகுண்டுகளை நுகர்ந்து கண்டுபிடிக்கும் திறன்கொண்டது. தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட இந்த எலியானது, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப்போல, உருவத்தில் சிறியதாக இருந்தாலும், இதுவரை 71 கண்ணி வெடிகளைக் கண்டு பிடித்து பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. இதனால், மகவாவிற்கு கடந்த வருடம் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏராளமான கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து பலரின் உயிரைக் காப்பாற்றி, கம்போடியாவின் நாயகனாக வலம் வந்த ஆப்பிரிக்க ராட்சத எலி "மகவா" தன் பணியிலிருந்து ஓய்வுபெற்றது. ...
மெகுல் சோக்சியை எங்களிடம் ஒப்படையுங்கள் -டொமினிகாவிடம் இந்தியா வேண்டுகோள்!

மெகுல் சோக்சியை எங்களிடம் ஒப்படையுங்கள் -டொமினிகாவிடம் இந்தியா வேண்டுகோள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
மெகுல் சோக்சியை எங்களிடம் ஒப்படையுங்கள் -டொமினிகாவிடம் இந்தியா வேண்டுகோள்! பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதனால், சி.பி.ஐ. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில் ஆன்டிகுவாவில் தஞ்சம் அடைந்திருந்த மெகுல் சோக்சியை (வயது 62) இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆன்டிகுவா குடியுரிமை பெற்ற அவரை நாடு கடத்துவது தொடர்பான சட்ட நகர்வுகளை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென மெகுல் சோக்சி காணாமல் போனார். ஆன்டிகுவாவை விட்டு வெளியேறிய மெகுல் சோக்சி, படகு மூலம் அருகில் உள்ள சிறிய தீவு நாடான டொமினிகாவுக்கு சென்றபோது போலீசில் சிக்கினார். சட்டவிரோதமா...
பிரபாஸ் ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தில்  நடிக்கிறாரா? – ஹாலிவுட் இயக்குனர் விளக்கம்!

பிரபாஸ் ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தில் நடிக்கிறாரா? – ஹாலிவுட் இயக்குனர் விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபாஸ் ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தில் நடிக்கிறாரா? - ஹாலிவுட் இயக்குனர் விளக்கம்! ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்கள் பிரபாசுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகப் பெரிய அளவில் மார்க்கெட்டை ஏற்படுத்தி கொடுத்தன. தற்போது இந்திய அளவில் பிசியான நடிகராக வலம்வரும் பிரபாஸ், டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வந்தது. நடிகர் பிரபாஸ் ராதே ஷ்யாம் படப்பிடிப்பிற்காக இத்தாலி சென்றபோது, ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரே அவரை சந்தித்து கதை சொன்னதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரேயிடம் ரசிகர் ஒருவர் டுவிட்டர் வாயிலாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரே, “பிரபாஸ் மிக திறமையான மனிதர் தான்...
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது துபாய் அரசு!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது துபாய் அரசு!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது துபாய் அரசு! அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும். இந்த விசாவை பெற பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விண்ணப்பித்தார். இதனை பரிசீலனை செய்த துபாய் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்கள் துறையின் பொது இயக்குனர் முகம்மது அகமது அல் மர்ரி, சஞ்சய் தத்துக்கு கோல்டன் விசா வழங்கினார். நடிகர் சஞ்சய் தத் அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றுள்ள தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்க...
தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள்- ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்!

தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள்- ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள்- ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்! தேசிய கல்விக்கொள்கையில் 2019-ம் ஆண்டு பல்வேறு திருத்தங்களும், மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு, கஸ்தூரி ரங்கன் தலைமையில் பரிந்துரைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதில் உள்ள மும்மொழிக்கொள்கை, நுழைவுத் தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் கடுமையாக எதிர்க்கப்பட்டன. அதேநேரம், தாய்மொழியில் கல்வி கற்கவேண்டும் என கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தாய்மொழியில் கல்வி பயில்வதை ஊக்குவிக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஆங்கிலத்தில் உள்ள பொறியியல் பாடப் புத்தகங்களை தமிழ், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி ஆகிய 8 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ந...