Saturday, June 6
Shadow

HOME SLIDER

தென் ஆப்பிரிக்க அழகி 2017 மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார்

தென் ஆப்பிரிக்க அழகி 2017 மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார்

HOME SLIDER, NEWS, செய்திகள்
சமீபத்தில் 2017 மிஸ் உலக அழகியா இந்தியாவின் அரியானவை சேர்ந்த மனுஷி சில்லர் தேர்ந்து எடுக்கபட்டார். உலகின் இரண்டாவது போட்டியான்   66 வது மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டி  அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாசில் நடைபெற்றது. இதில் மொத்தம் 92 நாட்டு அழகிகள் கலந்து கொண்டனர். இந்தியாவை சேர்ந்த மிஸ் திவா சாந்தா சசிதர், இந்தியா சார்பில் கலந்து கொண்டார். இவர் இறுதி போட்டிக்கு தேர்வான முதல்15 அழகிகள் பட்டியலில் கூட இடம்பெற முடியவில்லை. மிஸ் யூனிவர்சாக தேர்ந்து எடுகப்பட்ட டெமிக்கு பிரான்சின் ஐரிஸ் மிடேனெரெரால்,  கிரீடம் சூட்டினார். அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஸ்டீவ் ஹார்வி மற்றும் சூப்பர் மாடல் ஆஷ்லே கிரஹாம் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து  வழங்கினர். இந்த போட்டியில் ஜமைக்கா, வெனிசுலா, தாய்லாந்து, மற்றூம் கொலம்பியா ஆகிய நாடு அழகிகள் முதல் 5 இடத்திற்கு வந்தனர்.  ஜமைக்கன் அழகு டேவினா பென்னட் இரண்டாவது ரன
கோடி கொடுத்தாலும் அந்த காமெடி நடிகருடன் நடிக்க முடியாது என கைவிரித்த நடிகை..!

கோடி கொடுத்தாலும் அந்த காமெடி நடிகருடன் நடிக்க முடியாது என கைவிரித்த நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  கோடி ரூவா கொடுத்தாலும் அவருடன் நடிக்க முடியாது – ஓவிய நடிகை தடாலடி பெரிய பாஸ் மூலம் திடீர் புகழ் அடைந்தவர் அந்த ஓவிய நடிகை. பெரிய பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு அரசியலில் இருக்கும் கருணையான காமெடி நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அட்வான்சும் வாங்கியிருந்தாராம். இப்போது திடீர் புகழ் காரணமாக அந்த காமெடி நடிகருடன் நடிக்க முடியாது என்று கைவிரித்து விட்டாராம்.நீங்க கோடி ரூபா கொடுத்தாலும் இனி அவருடன் நடிக்க மாட்டேன் என்று சொல்லிட்டாங்களாம் .விஷயம் படம் தயாரிக்கிறவங்க சங்கத்துக்கு போச்சுது. அவுங்க நடிகைகிட்ட விளக்கம் கேட்டாங்க. சொன்ன தேதியில அவுங்க படம் ஆரம்பிக்கலன்னு பதில் சொல்லி வாங்கி அட்வான்சை வட்டியோடு திருப்பிக் கொடுத்திட்டாராம் நடிகை. ஆனால் வேற ஏதோ காரணம் இருக்கிறது என்று கிசு கிசுக்க படுகிறது இதனால் காமெடி நடிகர் கடுப்புல இருக்காராம்.  
“அன்பு செழியனை தண்டிக்க வேண்டும்” நடிகை பூர்ணா

“அன்பு செழியனை தண்டிக்க வேண்டும்” நடிகை பூர்ணா

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் கடன் தொல்லையால் தற்கொலை செய்த சம்பவம் பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பைனான்சியர் அன்பு செழியன் வட்டிக்கு மேல் வட்டி கேட்டு மிரட்டியதாக அவர் கடிதம் எழுதி வைத்துள்ளதால் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பு செழியனை தேடி வருகிறார்கள். இந்த நிலையில், அன்பு செழியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும், நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நடிகை பூர்ணா டுவிட்டரில் அன்பு செழியனை கண்டித்து கருத்து பதிவிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:- “அசோக்குமார் சிறந்தவர்களில் எப்போதும் சிறந்தவராக இருக்கிறார். நல்ல மனம் படைத்தவர். நீங்கள் எங்களை விட்டு போக முடியாது. எப்போதும் எங்களுடனேயே இருக்கிறீர்கள். அன்பு செழியன் போன்றவர்கள் சினிமாவில் இருக்கக்கூடாது. இந்த உலகத்தை விட்டு அசோக்குமார்
வைரமுத்து – ஏ.ஆர்.ரகுமான் இருவரையும்  மலை உச்சியில் 5 நாட்கள் ஆனந்த சிறை வைத்த மணிரத்னம்

வைரமுத்து – ஏ.ஆர்.ரகுமான் இருவரையும் மலை உச்சியில் 5 நாட்கள் ஆனந்த சிறை வைத்த மணிரத்னம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  ஏ.ஆர்.ரகுமான்-வைரமுத்து கூட்டணியுடன் மணிரத்னம் தனது புதிய பட வேலையை தொடங்கி இருக்கிறார். கோவா அருகில் உள்ள மலை உச்சியில் பாடல் ‘கம்போசிங்’ நடந்தது. ‘காற்று வெளியிடை’ படத்தையடுத்து மணிரத்னம், ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, பகத்பாசில், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தனது படத்தில் பாட்டுக்கு தனிக்கவனம் செலுத்தும் மணிரத்னம், தனது வெற்றிக்கூட்டணியான கவிஞர் வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரையும் பாடல் ‘கம்போசிங்’குக்காக ஒரு மலை உச்சிக்கு அழைத்து சென்று 5 நாட்கள் ஆனந்த சிறை வைத்துவிட்டார். கோவாவில் இருந்து 4 மணி நேரம் சாலை வழியே பயணித்தால், மராட்டிய மாநிலத்தின் மலைக்குன்றில் சென்று முடிகிறது. அதுதான் இந்தியாவின் மேற்கு எல்லை
என் மகள்களால் எனக்கு பெருமை கிடைத்திருக்கிறது – பிரபல இந்திப் பட டைரக்டர் மகேஷ் பட்

என் மகள்களால் எனக்கு பெருமை கிடைத்திருக்கிறது – பிரபல இந்திப் பட டைரக்டர் மகேஷ் பட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  பிரபல இந்திப் பட டைரக்டர் மகேஷ் பட், தனது வாரிசுகளான இரண்டு இளம் நடிகைகளை களத்தில் இறக்கி விட்டிருக்கிறார். மூத்தவரான ஆலியா பட் ஏற்கனவே முன்னணி இடத்தை பிடித்திருக்க, சகோதரி ஷஹீன் பட் திரை உலகில் முன்னுக்கு வர அதிவேகம் காட்டிக்கொண்டிருக்கிறார். பிசியாக இருக்கும் இவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் சந்திக்கவைத்தபோது குடும்பத்தை பற்றிய ருசிகரமான பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள். ஆலியா பட்: நாங்கள் மூவரும் சேர்ந்து இருப்பது போன்ற போட்டோ உள்ளபடியே ரொம்ப அழகானது. நாங்கள் மூவரும் ஒரே துறையிலிருந்தாலும் இதுவரை நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டதில்லை. இந்த போட்டோ எங்களை இணைத்திருக்கிறது. மகேஷ் பட்: என் மகள்களால் எனக்கு பெருமை கிடைத்திருக்கிறது. தன்னைவிட தன் குழந்தைகள் புகழ் பெறவேண்டும் என்று தான் எல்லா அப்பாக்களும் விரும்புவார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். என் ஆசை நிறைவேறிவிட்
கேபிள் டி.வி உரிமையாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நேரடியாக இணைக்கப்பட உள்ளனர்- விஷால்

கேபிள் டி.வி உரிமையாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நேரடியாக இணைக்கப்பட உள்ளனர்- விஷால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  நெல்லை மாவட்டம் அம்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விஷால் நடிக்கும் இரும்புத்திரை என்ற புதிய சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. அம்பை ஆற்றுச்சாலை, தாமிரபரணி ஆறு, அம்பை தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக நடிகர் விஷால் நடித்து வருகிறார். இதற்காக அம்பை தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதி, ராணுவ பயிற்சி மையம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. நேற்று ராணுவ மையத்தில் இருந்து விஷால் வெளியே நடந்து வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்கிடையே அம்பை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையில் விஷால் கலந்துரையாடல் நடத்தினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– புதுப்படங்களி
நான் தான் ஜெயலலிதாவின் மகள்: உரிமை கோரி பெங்களூர் பெண் அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

நான் தான் ஜெயலலிதாவின் மகள்: உரிமை கோரி பெங்களூர் பெண் அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது எப்படி பரபரப்புடன் அவரது செய்கைகள் இருந்ததோ அதே போல அவர் மரணத்திற்கு பிறகும் அவர் குறித்த செய்திகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை என்கிற அளவுக்கு பரபரப்புகள் வந்து கொண்டேதான் இருக்கிறது. மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் ஜெ தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோரி உரிமை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதாவும் (வயது 38) ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரியுள்ளார். ஜெயலலிதா தன் சொந்த தாய் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய அம்ருதா, இதுகுறித்து  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், ஜெயலிதாவின் மகள் என உரிமை கோரி அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில்,
பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை

பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இயக்குனர் சசிக்குமாரின் மைத்துனர் அசோக்குமார், பைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் நெருக்கடி அதிகரித்த நிலையில், அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டார். கந்துவட்டி கொடுமை காரணமாக அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அசோக்குமாரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது போலீசார் தேடுவதை அறிந்த அன்புச்செழியன் குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அன்புச்செழியனுக்கு எதிராக காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்  அனுப்பி உள்ளது. வெளிநாடுகளுக்கு அவர் தப்பிச் செல்வவதை  தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  
ஜீவாவின் கீ பட சிங்கிள் டிராக்கை  இயக்குனர் கவுதம் மேனன் 28ம் தேதி மாலை வெளியிடுகிறார்…!

ஜீவாவின் கீ பட சிங்கிள் டிராக்கை இயக்குனர் கவுதம் மேனன் 28ம் தேதி மாலை வெளியிடுகிறார்…!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், திரைப்படங்கள்
  ஜீவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கீ’. புதுமுக இயக்குநர் காலீஸ் இயக்கியுள்ள இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் ஜீவாவுடன் நிக்கி கல்ரானி, அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு வெளியிட்டார். தற்போது இப்படத்தில் இடம் பெறும் சிங்கிள் பாடல் ஒன்றை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட இருக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் ‘ராஜா பாட்டு...’ என்ற பாடலை இயக்குனர் கவுதம் மேனன் வரும் நவம்பர் 28ம் தேதி இரவு 7.45 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். விரைவில் இப்படம் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்திரஜித் விமர்சனம்

இந்திரஜித் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  1400 வருடம் முன் சூரியனில் இருந்து விழுந்த மருத்துவ குணம் வாய்ந்த ஒரு அபூர்வ பொருளைத் தேடும் இந்திய தொல்லியல் துறையின் வீர தீரம் தான் கரு! பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனிலிருந்து தெறித்துவரும் ஒரு சிறியதுகள் பூமியில் வந்து விழுகிறது.மனிதனுக்கு ஏற்படும், எப்பேர்பட்ட காயங்களையும், தீராத நோய்களையும் குணப்படுத்தும் சக்தி அந்த துகளுக்கு இருப்பதால் சித்தர்கள்அதை ஒரு ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். அவர்கள்காலத்திற்குப் பிறகு அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது.இதை தொல்பொருள்ஆராய்ச்சியின்பேராசிரியராக இருக்கும் சச்சின்கேதகர் தேட ஆரம்பிக்கிறார். இவரிடம் உதவியாளராக வந்துசேருகிறார் இந்திரஜித். -கௌதம் கார்த்திக், அதேநேரத்தில் ,இந்திய தொல்லியல்துறையைச் சேர்ந்த அதிகாரிஒருவரும் அந்தப்பொருளைத்தேடுகிறார். இறுதியில் அந்த சக்தி வாய்ந்தசிறு துகள் யாரிடம் கிடைத