ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Tag: காங்கிரஸ்

மோடி,அமீத்ஷாவை பாதுகாக்க தேர்தல் கமிஷனில் விதிமுறைகள் காலில் மிதிபடுகிறது – காங்கிரஸ் கண்டனம்

மோடி,அமீத்ஷாவை பாதுகாக்க தேர்தல் கமிஷனில் விதிமுறைகள் காலில் மிதிபடுகிறது – காங்கிரஸ் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேர்தல் கமிஷனில் எழுந்துள்ள பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், “தேர்தல் கமிஷன் விதிகள் ஒருமித்த முடிவுக்குத்தான் முன்னுரிமை தெரிவிக்கின்றன. ஆனால் ஒருமித்த முடிவு இல்லை என்கிறபோது பெரும்பான்மை முடிவை ஏற்கச்சொல்கிறது. அரசியல் சாசன அமைப்பு என்கிற வகையில், சிறுபான்மை முடிவும் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் மோடியையும், அமித் ஷாவையும் பாதுகாக்க இது மிதிபடுகிறது” என்று குறிப்பிட்டார். மேலும், “பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவும் தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறியதாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. ஆனால் அவை குப்பைத்தொட்டியில் போடப்பட்டு விட்டன. இந்தியாவின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை அழிக்கிற பணியை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டுள்ளார்” ...
மோடிக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு கடிதம் அனுப்பிய சோனியா காந்தி..!

மோடிக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு கடிதம் அனுப்பிய சோனியா காந்தி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் அனுப்பி வைத்தார் வரும் 23ஆம் தேதி மாலை டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து சோனியா காந்தி கடிதம் எழுதி இருக்கிறார். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் வரும் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.. காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்கும் 23ம் தேதி தான் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பாஜ அரசின் மீது நாடுமுழுக்க கடும் அதிருப்தி நிலவி வந்தது. இந்த தேர்தலிலும் மோடி அரசு படு தோல்வி அடையும் என கூறப்படும் நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது....
துரியோதனன் ஆணவத்தால் அழிந்தவன் -மோடிக்கு பிரியங்கா எச்சரிக்கை

துரியோதனன் ஆணவத்தால் அழிந்தவன் -மோடிக்கு பிரியங்கா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
துரியோதனன் ஆணவத்தால் அழிந்தவன் - மோடிக்கு பிரியங்கா எச்சரிக்கை   முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை, நம்பர் ஒன் ஊழல்வாதி என்று பிரதமர் மோடி சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அரியானா மாநிலம் அம்பாலாவில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மத்தியில் உள்ள பாஜகவினர் பேசுவதற்கு விஷயம் எதுவும் இல்லையென்றால் எனது குடும்பத்தை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆணவத்தை இந்தியா ஒருபோதும் மன்னித்தது இல்லை. இதற்கு வரலாற்றில் பல்வேறு சான்றுகள் இருக்கின்றன. சிறந்த இதிகாசமான மகாபாரதத்திலும் இதற்கு ஆதாரங்கள் உள்ளன. கவுரவர்களின் அரசனான துரியோதனனிடம் ஆணவம் இருந்ததாலேயே அவர் அழிந்தார் என பிரதமர் மோடி...
4ம் கட்ட தேர்தல் முடிந்ததும் மோடிக்கு பயம் வந்து விட்டது – சொல்கிறார் ராகுல்காந்தி

4ம் கட்ட தேர்தல் முடிந்ததும் மோடிக்கு பயம் வந்து விட்டது – சொல்கிறார் ராகுல்காந்தி

HOME SLIDER, NEWS, செய்திகள்
  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று மத்திய பிரதேசத்தின் திகம்கர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘பாராளுமன்றத்துக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் முகம் சுருங்கி காணப்படுகிறது. அவர் பேட்டிகளின் போது ஒருவித தயக்கத்தை வெளிப்படுத்துகிறார்’ என்று தெரிவித்தார் ரபேல் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய ராகுல் காந்தி, இந்திய விமானப்படையிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியை எடுத்து அம்பானியின் பையில் வைத்துள்ளதாக மோடி மீது குற்றம் சாட்டினார். சுமார் 15 பேரின் நலனுக்காக பிரதமர் மோடி நிதி ஒதுக்குவதாகவும், ஆனால் 25 கோடி மக்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார்...
பா.ஜ.க.,வின் அத்துமீறல்களை மவுனமாக வேடிக்கை பார்க்கும்  தேர்தல் கமிஷன் –  ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பா.ஜ.க.,வின் அத்துமீறல்களை மவுனமாக வேடிக்கை பார்க்கும் தேர்தல் கமிஷன் – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் கூறியதாவது: தேர்தல் கமிஷன், நாட்டு மக்களை பெரிதும் ஏமாற்றி விட்டது. பா.ஜனதாவின் அத்துமீறல்கள், பிரதமர் மோடியின் உரைகள், பா.ஜனதாவால் செலவழிக்கப்படும் பெருமளவு பணம் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. எதிர்க்கட்சி வேட்பாளர்களின் சிறு செலவுகள் என்று கூறப்படுவதை எல்லாம் அவர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கிறது. அதே அணுகுமுறையை மேற்கொண்டால், பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவரும் தகுதியிழப்புக்கு ஆளாக வேண்டி இருக்கும். பா.ஜனதா தனது தோல்வியை மறைக்க ‘தேசியவாதம்’ என்ற கோஷத்தை எழுப்பி வருகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இங்கு எல்லோரும் தேசவிரோதியாகவா இருந்தார்கள்? எல்லோரும் தேசபக் தர்கள்தான். எந்த தேசபக்தரையும் தேசவிரோதியாக கருத முடியாது. ஊடகங்களை கையில் போட்டுக்கொண்டு, இந்த பிரசாரத்தை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது. ...
தீவிரவாதிகள் தாக்குதல் நேரத்தில் போட்டோ ஷூட்டிங்கில் பிசியாக இருந்த பிரதமர் மோடி – காங்கிரஸ் குற்றச்சாட்டு

தீவிரவாதிகள் தாக்குதல் நேரத்தில் போட்டோ ஷூட்டிங்கில் பிசியாக இருந்த பிரதமர் மோடி – காங்கிரஸ் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தீவிரவாதிகள் தாக்குதல் நேரத்தில் போட்டோ ஷூட்டிங்கில் பிசியாக இருந்த பிரதமர் மோடி - காங்கிரஸ் குற்றச்சாட்டு புல்வாமா தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்ததற்கு தேசமே கண்ணீர் விட்டு கதறிய வேளையில், பிரதமர் மோடி போட்டோஷூட்டில் பிஸியாக இருந்தார் என எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40-க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர், நாடே இந்தத் துயர சம்பவத்தை நினைத்து வருந்தியது. இந்நிலையில் வீரர்கள் உயிரிழந்த வேளையில், பிரதமர் மோடி போட்டோஷூட்டில் பிஸியாக இருந்தார் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சிஆர்பிஎப் வீரர்கள் இறந்த செய்தி அறிந்தும், கார்பெட் தேசிய பூங்காவில் மாலை 6.30 மணி வரை போட்டோஷூட்டில் இருந்திருக்கிறார் மோடி. தேசத்துக்காக உயிரிழந்தவர்களை...
சி.பி.ஐ. உயர் அதிகாரி ஊழல் புகார் – ‘கிரைம் திரில்லர்’ படத்துக்கு ஒப்பிட்ட ராகுல்

சி.பி.ஐ. உயர் அதிகாரி ஊழல் புகார் – ‘கிரைம் திரில்லர்’ படத்துக்கு ஒப்பிட்ட ராகுல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதலில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அவர்கள் இருவரின் அதிகாரத்தையும் பறித்து, கட்டாய விடுமுறையில் அனுப்பியது. இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவை நியமித்தது. சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதலில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அவர்கள் இருவரின் அதிகாரத்தையும் பறித்து, கட்டாய விடுமுறையில் அனுப்பியது. இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவை நியமித்தது. ஆனால் மத்திய மந்திரி ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, தீய நோக்கம் கொண்டது என கூறி மறுத்தார். இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. உயர் அதிகாரி தெரிவித்துள்ள ஊழல் புகார் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கடுமையாக விமர்சித்து பதி...