கொரானா வைரஸ் பீதி எதிரொலி வங்கிகளில் கயிறு கட்டி வாடிக்கையாளர்களை தூர தள்ளி நிறுத்திய அவலம்!
உலகம் முழுதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரானா படுத்தும் பாடு சொல்லி மாளமுடியவில்லை.
இந்தியாவில் சுமார் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியிலும் பெரும் அச்சம் நிலவுகிறது. திரையரங்குகள், வணிகவளாகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சேவை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. குறிப்பாக வங்கிகள் மக்களின் சேவையில் முக்கிய பங்காற்றுபவை.
வங்கிகளில் பொதுமக்கள் அதிகம் வந்து சொல்வார்கள்.
அதே போல், வங்கி ஊழியரின் முகத்திற்கு நேரே, அருகிலேயே நிற்பார்கள். இதனால் கொரோனா ஆபத்து ஏற்படலாம் என்று அச்சமடைந்த வங்கி நிர்வாகம் வாடிக்கை யாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே கயிறுகளை கட்டியுள்ளன. மூன்று கயிறுகள் இடைவெளிவிட்டு கட்டப்பட்டுள்ளன. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருது....




