Tag: ஷங்கர்
சென்சார் கத்திரியில் அதிகம் சிக்காமல் தப்பித்த 2.O
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 மணிநேரம் 28 நிமிடங்கள் 52 நொடிகளுக்கு இப்படம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதுவரை உருவான ஷங்கர் படத்திலேயே இதுதான் மிகக்குறைந்த நேரம் ஓடும் திரைப்படமாக இருக்கும். தணிக்கைக் குழுவினர் காட்சிகளில் பெரிய அளவில் கத்திரி வைக்கவில்லை.
ஆனால், வசனங்களில் தாராளமாகக் கைவைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ‘யுனிசெல்’ என்ற நிறுவனத்தின் பெயரைத் திரைப்படத்தில் எங்கெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். அதுபோலவே, ‘புற்று நோய்,’ ‘கருச்சிதைவு’, ‘ஆண்மைக் குறைவு’, ‘லஞ்சம்’, ‘45 வருடம்’ ஆகிய வசனங்களை நீக்கச் சொல்லி இருக்கிறார்கள....
லேட்டா ஆனாலும் வந்துட்டேன் கரெக்ட்டா ஜெயிப்பேன் – 2.O டீசர் விழாவில் ரஜினி அரசியல் சூசகம்!
2 .0 படத்தின் டிரைலர் வெளியீடு விழா இன்று நடைபெற்றது!
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் தான் 2.0. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்இசை அமைத்துள்ளார். லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியவை " 2 .0 படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் சரியாக நடிக்க முடியவில்லை. என...

