திங்கட்கிழமை, மே 13
Shadow

NEWS

ஜிஎஸ்டி பெயரில் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – நிதியமைச்சர் ஜெயக்குமார்

ஜிஎஸ்டி பெயரில் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – நிதியமைச்சர் ஜெயக்குமார்

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜிஎஸ்டி வரி எனக் கூறி கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அபிராமி ராமநாதன் தலைமையிலான திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று நிதி அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன், கேளிக்கை வரி தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து நல்ல முடிவை அறிவிப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளதாக கூறினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ’திரையரங்கங்களுக்கான கேளிக்கை வரியை குறைப்பது தொ...
ஜி.எஸ்.டிக்கு எதிராக டி.ஆர். நாளை ஆர்ப்பாட்டம்..!

ஜி.எஸ்.டிக்கு எதிராக டி.ஆர். நாளை ஆர்ப்பாட்டம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜி.எஸ்.டிக்கு எதிராக ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வரும் டி.ஆர், நாளை காலை 10.30 மணிக்கு பிலிம்.சேம்பர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கையில், “ மத்திய அரசின் ஜி.எஸ்.டியும் 30% கேளிக்கை வரியும் சேர்ந்தால் தமிழ்த்திரையுலகம் முற்றிலும் அழிந்துவிடும். ஆகவே, தமிழ் சினிமாவை இந்த இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்ற சினிமாவை நேசிக்கும், சினிமாவைக் காப்பாற்றத்துடிக்கும் அத்துனை சினிமா கலைஞர்களும்.நாளை  நடைபெறவிருக்கும் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும். சினிமாவை நம்பி வரும் இளைஞர்கள் மற்றும் புதிய திறமைகளுக்கு உத்திரவாதமான சூழ்நிலையை ஏற்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் காப்பாற்றும் பொறுப்புடன் நாளை நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளவேண்டும்..” என்று கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் இணையதள உடகவிய...
நாகேஷ் திரையரங்கம் பட தயாரிப்பாளர் விளக்கம் தர  சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் ..!

நாகேஷ் திரையரங்கம் பட தயாரிப்பாளர் விளக்கம் தர சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் ..!

CINI NEWS, NEWS, செய்திகள்
நாகேஷ்திரையரங்கம் படத்தை வெளியிட தடைகேட்டு,மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்போட்டுள்ளார்..சமீபத்தில் நாகேஷ்திரையரங்கம் படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்..நடிகர் ஆரி, ஆஷ்னாசவேரி நடிப்பில் இசாக் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரான்ஸ் இண்டியா மீடியா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனர் ராஜேந்திர. எம் ராஜன் தயாரித்துள்ளார். மேலும் ஆனந்த்பாபு  இப்படத்தை வெளியிட நஷ்டஈடு தரவேண்டும் என்று கூறிவருவதாக சொல்லப்படுகிறது..ஆனந்த்பாபு அனுப்பியுள்ள மனுவிற்கு படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் தரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.....
கதாநாயகி , பாடலாசிரியர் ஆன “பண்டிகை” தயாரிப்பாளர் விஜயலட்சுமி..!

கதாநாயகி , பாடலாசிரியர் ஆன “பண்டிகை” தயாரிப்பாளர் விஜயலட்சுமி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS
  டீ டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்‌ஷ்மி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பண்டிகை'. ரங்கூன் படத்துக்கு இசையமைத்த விக்ரம் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆரா சினிமாஸ் வாங்கி வெளியிடும் இந்த படம் வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. படத்தை பற்றிய அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. பருத்தி வீரனுக்கு பிறகு நல்ல படம் அமைந்தால் நடிப்பது என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறேன். அதனாலேயே ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்கிறேன். ஃபெரோஸ் சொன்ன கதை பிடித்து போய் இந்தப் படத்தில் நடித்தேன். மிகவும் நேர்த்தியாக படத்தை உருவாக்கியிருக்கிறார். நல்ல இயக்குனராக வருவதற்கான அத்தனை தகுதியையும் அவரிடம் ஆரம்பத்திலேயே பார்த்தேன். பெரிய இயக்குனராக வருவார் என்றார் நடிகர் சரவணன். அங்காடி தெரு படத்த...
பலூனில் வந்த கேக்… அஞ்சலி தந்த இன்ப அதிர்ச்சியில் ஷாக் ஆன ஜெய்..!

பலூனில் வந்த கேக்… அஞ்சலி தந்த இன்ப அதிர்ச்சியில் ஷாக் ஆன ஜெய்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS
ஜெய் பிறந்த நாளன்று அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி – அவரின் பிறந்த நாளுக்காக ‘பலூன்’ இல் பறந்து வந்த கேக்… ரசிகர்களின் கண்ணோட்டத்தில் இருந்து ஒரு கதையை தேர்வு செய்யும் சிறப்பம்சம் கொண்டவர், கார் பந்தய வீரரும், நடிகருமான ஜெய். இவர் தற்போது அஞ்சலி – ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் பலூன் படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். பலூன் படத்திற்கு பிறகு தன்னுடைய வர்த்தக அந்தஸ்து உயரும் என்ற நம்பிக்கையோடு இருக்கும் ஜெய், தனது பிறந்த நாளை, நேற்று பலூன் படக்குழுவினரோடு கொண்டாடினார். சினிஷ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் பலூன் படத்தை, ’70 எம் எம்’ நிறுவனத்தின் சார்பில் டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். பலூன் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் ‘...
விஜய சேதுபதி தரும் கவுரவம்…

விஜய சேதுபதி தரும் கவுரவம்…

CINI NEWS, NEWS
“சினிமா என் குடுமபம் என்றால், திரையுலக பிண்ணனி கலைஞர்கள் என் குடும்பத்தினர்” என்று கூறுகிறர் விஜய் சேதுபதி சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வருபவர்கள் திரையுலக பிண்ணனி கலைஞர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அத்தகைய பல திறமையான பல திரையுலக பிண்ணனி கலைஞர்கள் இன்று திரையுலகில் இருந்தே வெளியேற்றப்பட்டுவிட்டனர். அதற்கு முக்கியமான காரணம், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பம். தமிழ் திரையுலகின் அப்படிப்பட்ட மூத்த திரையுலக பிண்ணனி கலைஞர்களை கௌரவ படுத்த, வருகின்ற மே 1 ஆம் தேதி அன்று பிரம்மாண்ட விழாவை ‘உலகாயுதா’ நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்து இருக்கிறார் இயக்குநர் எஸ் பி ஜனநாதன். தமிழ் திரையுலகின் 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் என மொத்தம் நூறு சவரன் தங்க பதக்கங்கங்களின் செலவை முழுவதுமாக ஏற்று வழங்க இருப்பவர் விஜய் சே...