சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Tag: தமிழக அரசு

மேகதாது அணை கட்ட அனுமதி – மத்திய நீர்வள ஆணைய தலைவர் மீது தமிழக அரசு வழக்கு

மேகதாது அணை கட்ட அனுமதி – மத்திய நீர்வள ஆணைய தலைவர் மீது தமிழக அரசு வழக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்திய கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீர்வள ஆணையம் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்ப்பாசனைத்துறைக்கு உத்தரவிட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2-வது கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடை பெற்றது. கூட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரும், காவிரி மேலாண்மை ஆணைய தலைவருமான மசூத் உசேன் தலைமை தாங்கினார் இதில் தமிழக அரசு சார்பிலும், கர்நாடக அரசு சார்பிலும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழக பொதுப் பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தனது எதிர்ப்புகளை பதிவு செய்தார்...
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க முயற்சிப்பேன் – பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க முயற்சிப்பேன் – பொன்.மாணிக்கவேல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஐஜி பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைந்து அவர் இன்று பணி ஓய்வுபெறுகிறார். வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது. சிபிஐக்கு வழக்குகளை மாற்றும் தமிழக அரசின் அரசாணை சட்டவிரோதம். இன்றுடன் ஓய்வுபெறும் பொன். மாணிக்கவேல் மேலும் ஒரு ஆண்டு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாநில போலீசும், சிபிஐயும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். விசாரணை தொடர்பான அறிக்கையை வேறு எந்த ஒரு அதிகாரியிடமும் அவர் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர் நேரடியாகவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவரை சிறப்பு அதிகாரியாக ஓராண்டு நியமனம்...
7 பேர் யார்? கேள்வியால் பெருங்குழப்பத்தில் இருக்கிறாரா ரஜினி..?!

7 பேர் யார்? கேள்வியால் பெருங்குழப்பத்தில் இருக்கிறாரா ரஜினி..?!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  7 பேர் யார்? கேள்வியால் பெருங்குழப்பத்தில் இருக்கிறாரா ரஜினி..?! நடிகர் ரஜினிகாந்த் பெருங்குழப்பத்தில் இருக்கிறார் என்றே தெரிகிறது. இதற்கு காரணம் சமீபத்திய அவரது பேச்சுக்கள், நடவடிக்கைகள் எல்லாம் அவரை பொதுமக்கள் மத்தியில் கேலிக்ககூத்தாக்கும் விதமாகவே அமைந்துவிடுகிறது. விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ‘7 பேரின் விடுதலையை ரத்து செய்தது குறித்த கேள்விக்கு’ நேரடியாக பதில் சொல்லாமல் ‘எந்த ஏழு பேர்?’ என்று எதிர் கேள்வி கேட்டதோடு மட்டுமல்லாமல், ‘நான் இப்பதான் கேள்விப்படுகிறேன்... இப்பதான் வர்றேன்’ என்றும் பதில் சொல்லி இன்றைய நெட்டிசன்களின் மீம்ஸ் கலாட்டாவில் சிக்கிக் கொண்டார். உண்மையிலேயே ரஜினிகாந்த்துக்கு ராஜீவ் கொலையாளிகளான 7 பேரின் விடுதலை குறித்து செய்தி தெரியாதா அல்லது தெரியாதது போல நடிக்கிறாரா என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்தாலும்...
பள்ளி மாணவிகளுக்கு ”கராத்தே”! தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.!!

பள்ளி மாணவிகளுக்கு ”கராத்தே”! தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பள்ளி மாணவர்கள் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும், என்ற கருத்தை பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம், எழுமின்.  வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கிய எழுமின் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. வெளியான நாளில் இருந்து அனைவராலும் கொண்டாடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஜனங்களின் கலைஞன் விவேக், தேவயானி உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும், உண்மையான தற்காப்புக்கலை பயின்று சாம்பியன்களாகத் திகழும் 6 குழந்தைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழந்தைகள் 6 பேரும் நடிப்பதில் மட்டுமல்ல அடிப்பதிலும் அசத்தி இருக்கிறார்கள். எழுமின் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டியதே அதற்கு சாட்சி. இன்றைய சூழலில் தற்காப்புக்கலை எத்தனை அவசியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்ட எங்களின் எழுமின் திரைப்படம் வெளியாகி ...