ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

நடிகைகள்

பிரபல நடிகரின் படத்தில் நிவேதா பெத்துராஜுக்கு நக்சலைட் வேடம்!

பிரபல நடிகரின் படத்தில் நிவேதா பெத்துராஜுக்கு நக்சலைட் வேடம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிரபல நடிகரின் படத்தில் நிவேதா பெத்துராஜுக்கு நக்சலைட் வேடம்! ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் கைவசம் பார்ட்டி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தெலுங்கில் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘விராட பருவம்’. வேணு உடுகுலா இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ், நக்சலைட்டாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராணா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விரைவில் இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளத...
ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனதால் நடிகை நிதி அகர்வால் கோபம்!

ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனதால் நடிகை நிதி அகர்வால் கோபம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனதால் நடிகை நிதி அகர்வால் கோபம்! ஜெயம் ரவி ஜோடியாக பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து பிரபலமானவர் நிதி அகர்வால். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில் நிதி அகர்வால் ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனதால், அவர் கோபமடைந்துள்ளார். நடிகை நிதி அகர்வால் பள்ளியில் படித்தபோது நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அவர் ரகசியமாக வைத்திருந்த இந்த புகைப்படங்களை யாரோ வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டனர். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள். இதனால் கோபமடைந்த நிதி அகர்வால், இதுகுறித்து கூறியதாவது, “என்னுடைய குறிப்பிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பகிரப்படுவதை ...
நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி!

நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி! தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ஏற்கனவே 2 முறை காதல் முறிவை சந்தித்து மூன்றாவதாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். சுமார் 6 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கொடியட்டு (Kurian Kodiyattu) உடல்நலக்குறைவால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது....
‘நவரசா’ ஆந்தாலஜியில் இடம்பெறும் 9 குறும்படங்களின் பெயர் என்ன?… நடிப்பது யார்? – முழு விவரம்!

‘நவரசா’ ஆந்தாலஜியில் இடம்பெறும் 9 குறும்படங்களின் பெயர் என்ன?… நடிப்பது யார்? – முழு விவரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘நவரசா’ ஆந்தாலஜியில் இடம்பெறும் 9 குறும்படங்களின் பெயர் என்ன?... நடிப்பது யார்? - முழு விவரம்! கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி வெப் தொடர் உருவாகி இருக்கிறது. நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த ஆந்தாலஜி தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதனை மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில், இந்த வெப் தொடரில் இடம்பெறும் 9 குறும்படங்களின் தலைப்பு மற்றும் அதில் யார் யார் பணியாற்றி உள்ளார்கள் என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதனை இந்த தொகுப்பில் காணலாம். கிட்டார் கம்பி மேலே நின்று 'காதல்' மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு 'கிட்டார் கம்பி மேலே நின்று' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் மேனன் இயக்கியுள்ளார். சூர்யா, ப்ரயாகா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். பிராஜ...
திடீரென கவர்ச்சிக்கு மாறிய ஜகமே தந்திரம் பட நடிகை!

திடீரென கவர்ச்சிக்கு மாறிய ஜகமே தந்திரம் பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திடீரென கவர்ச்சிக்கு மாறிய ஜகமே தந்திரம் பட நடிகை! மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, கடந்த 2019ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘ஆக்‌ஷன்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்த அவர், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். வழக்கமாக மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தும் அவர், அண்மையில், சேலையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, அதிக லைக்குகளையும் பெற்று வருகிறது...
பாடகியாக அறிமுகமான பிக்பாஸ் லாஸ்லியா!

பாடகியாக அறிமுகமான பிக்பாஸ் லாஸ்லியா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பாடகியாக அறிமுகமான பிக்பாஸ் லாஸ்லியா! இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் கைவசம் ‘பிரெண்ட்ஷிப்’, ‘கூகுள் குட்டப்பன்’ போன்ற படங்கள் உள்ளன. இதில் பிரெண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி இருக்கும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்துள்ளார் லாஸ்லியா. இந்நிலையில், இப்படத்தின் மூலம் நடிகை லாஸ்லியா, பாடகியாகவும் அறிமுகமாகி உள்ளார். பிரெண்ட்ஷிப் படத்தில் இடம்பெறும் ‘அடிச்சு பறக்கவிடுமா’ என்கிற குத்துப் பாடலை தேவாவுடன் இணைந்து பாடியுள்ளார் லாஸ்லியா. இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடை...
ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் பாகுபலி வெப் தொடர் – ஹீரோயின் யார் தெரியுமா!

ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் பாகுபலி வெப் தொடர் – ஹீரோயின் யார் தெரியுமா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் பாகுபலி வெப் தொடர் - ஹீரோயின் யார் தெரியுமா! ராஜமவுலி இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியான படம் ‘பாகுபலி’. இதில் பிரபாஸ், நாசர், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து இருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது. தற்போது பாகுபலி கதை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெப் தொடராக தயாராகிறது. பாகுபலியில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடரை எடுக்கின்றனர். பாகுபலி பட காட்சிகளுக்கு முந்தைய சம்பவங்கள் இந்த தொடரில் இடம்பெற உள்ளன. சுமார் 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடர், ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் இளம் வயது சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில...
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம்!

சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, sports, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவாக சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் மேற்கொள்வதை விடாமல் செய்து வருகிறார். தற்போது முதல்வர் ஆன பிறகும், பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் சைக்கிளிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஞாயிற்றுகிழமையான இன்று கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்றார் மு.க.ஸ்டாலின். வழிநெடுக போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான இந்த சைக்கிள் பயணத்தில் அவரது நண்பர்கள் சிலரும் பங்கேற்றனர். இந்நிலையில் சைக்கிளிங் சென்ற முதல்வருடன், நடிகை யாஷிகா ஆனந்த் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் லைக்குகளும் குவிந்து வருக...
சந்திரமுகி பட வாய்ப்பை இழந்ததால் அழுதேன் – நடிகை சதா!

சந்திரமுகி பட வாய்ப்பை இழந்ததால் அழுதேன் – நடிகை சதா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
சந்திரமுகி பட வாய்ப்பை இழந்ததால் அழுதேன் - நடிகை சதா! ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சதா, அந்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். ‌ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படத்தில் நாயகியாக வந்து பரபரப்பாக பேசப்பட்டார். தொடர்ந்து தமிழ்பட உலகின் முன்னணி நாயகியாக வலம் வந்தார். பின்னர் பட வாய்ப்பு இல்லாததால் ஒரு பாடலுக்கு ஆடும் அளவு இறங்கி வந்தார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். ரஜினியின் சந்திரமுகி பட வாய்ப்பை நழுவவிட்டது குறித்து நடிகை சதா, சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சந்திரமுகி படத்தில் நடிப்பதற்காக இரண்டு முறை வாய்ப்புகள் தேடி வந்தும் சில சூழல்கள் காரணமாக, அதில் நடிக்க முடியாமல் போனது. அதை நினைத்து நான் சில சமயம் அழுதும் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சதா. மாளவிகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவரை அழைத்த...
அஜித்துடன் நடித்தத்தை 27 ஆண்டுகள் கழித்து நினைவுகூர்ந்த பிரபல நடிகை!

அஜித்துடன் நடித்தத்தை 27 ஆண்டுகள் கழித்து நினைவுகூர்ந்த பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அஜித்துடன் நடித்தத்தை 27 ஆண்டுகள் கழித்து நினைவுகூர்ந்த பிரபல நடிகை! கடந்த 1994ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரேவதி நடிப்பில் உருவான திரைப்படம் ’பாசமலர்கள்’. இந்த படத்தில் அஜித் மற்றும் காயத்ரி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். நடிகை காயத்ரி அதன் பின் ’மெட்டி ஒலி’ சீரியல் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழ் பெற்றார். இந்த நிலையில் நடிகை காயத்ரி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ’பாசமலர்கள்’ படத்தில் நடித்தபோது அஜித் மற்றும் படக்குழுவினர்களுடன் இருந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 27 வருடங்கள் கழித்து அஜித்துடன் நடித்ததை நடிகை காயத்ரி நினைவுகூர்ந்து இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ...