வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: ஷங்கர்

‘இந்தியன் 2’ படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா!

‘இந்தியன் 2’ படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீசா, சூது கவ்வும், நேரம், ஜிகிர்தண்டா, இறைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் பாபி சிம்ஹா. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜிகிர்தண்டா' திரைப்படத்தில் அசால்ட் சேதுவாக நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதே கிடைத்தது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும், 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை பாபி சிம்ஹா இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ...
இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது!

இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'இந்தியன் 2' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றும் படத...
ராம் சரண் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஷங்கர் படக்குழு!

ராம் சரண் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஷங்கர் படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு திரையுலுகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ராம் சரண். இவர் நடிப்பில் வெளியான மகதீரா, யவடு, துருவா, ரங்கஸ்தலம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'ராம்சரண் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதி, தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தின் மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது. அதில், "ராம்சரண் 15' படத்தின் படப்பிடிப்பு திறந்த வெளியில் மக்கள் கூட்டத்துடன் நடைபெற்று வருகிறது. இதனால் ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து...
ராஜமுந்திரி விமான நிலையத்தில் நடிகர் ராம் சரணை சூழ்ந்த ரசிகர்கள்!

ராஜமுந்திரி விமான நிலையத்தில் நடிகர் ராம் சரணை சூழ்ந்த ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ராம் சரண் தற்போது ஆர்சி15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படப்பிடிப்பில் பங்கேற்க ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு கிளம்பினார். அவர் ராஜமுந்திரியில் விமானத்தில் இருந்து இறங்கியவுடன், அவரை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்தனர். வெளியே வந்த அவரை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அங்கிருந்து ஓட்டலுக்கு செல்லும் வழியெல்லாம் அவரது ரசிகர்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளர் திரு, எடிட்டர் ஷமீர் முகமது மற்றும் இசையமைப்பாளர் எஸ் தமன் பணியாற்றியுள்ளனர். இதுகுறித்து கார்த...
முதல் கட்டத்தை முடித்த ஷங்கர்!

முதல் கட்டத்தை முடித்த ஷங்கர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
முதல் கட்டத்தை முடித்த ஷங்கர்! ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ராம்சரண், அடுத்ததாக இயக்குனர் ஷங்கருடன் கூட்டணி அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் அஞ்சலி, ஜெயராம், சுரேஷ்கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் படக்குழுவினருடன் ஷங்கர் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
‘இந்தியன் 2’ பட வழக்கு முடித்து வைப்பு!

‘இந்தியன் 2’ பட வழக்கு முடித்து வைப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
‘இந்தியன் 2’ பட வழக்கு முடித்து வைப்பு! நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 திரைப்படம் உருவானது. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்த நிலையில், திடீரென படப்பிடிப்பு பணிகள் நின்றுபோனது. இந்த நிலையில், இந்தியன்-2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் தொடர்ந்த, இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து லைகா சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லைகா நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதி நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது மத்தியஸ்த நடைமுறையில் பங்கேற்க...
பூஜையுடன் தொடங்கியது ஷங்கர் – ராம்சரண் படம்!

பூஜையுடன் தொடங்கியது ஷங்கர் – ராம்சரண் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பூஜையுடன் தொடங்கியது ஷங்கர் - ராம்சரண் படம்! தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் ஜெயராம், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. இன்று நடைபெற்ற பூஜையில், சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சிரஞ்சீவி, ரன்வீர் சிங், பிரபல இயக்குனர்கள் ராஜமவுலி, லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது. முதலில் பாடல் காட்சியை படமாக்க உள்ளார்களாம். இதற்காக பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாக...
கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ஷங்கர் படம்!

கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ஷங்கர் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ஷங்கர் படம்! தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணுடன் கூட்டணி அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராக உள்ள இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளார். இப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதி உள்ளார். இது முழுக்க முழுக்க அரசியல் கதையம்சம் கொண்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ள கதை தன்னுடையது என செல்லமுத்து என்ற உதவி இயக்குனர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார். இவர் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் விரைவில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகி...
முடிவுக்கு வந்த  ‘இந்தியன்-2’ சர்ச்சை!

முடிவுக்கு வந்த ‘இந்தியன்-2’ சர்ச்சை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
முடிவுக்கு வந்த ‘இந்தியன்-2’ சர்ச்சை! கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படம் தொடர்ந்து தடங்கல்களை சந்தித்து முடங்கி உள்ளது. ஆரம்பத்தில் கமல்ஹாசனின் வயதான தோற்றம் பொருத்தமாக இல்லை என்று படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். பின்னர் படப்பிடிப்பு அரங்கில் நிகழ்ந்த விபத்தும், உயிர்ப்பலியும் பட வேலைகளை முடக்கியது. கமல்ஹாசன் தேர்தல் பணிகளை முடித்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து புதிய படத்தை இயக்கவும், கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்கவும் சென்றுவிட்டனர். இந்தியன்-2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்குமாறு தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றும் தடை கிடைக்கவில்லை. இந்த பிரச்சினைகளால் இந்தியன்-2 படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும்? படம் கைவிடப்படுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்து வந்தன. இந்நிலையில...
ஷங்கர் படத்தில் இணையும் ‘அண்ணாத்த’ பட வில்லன்!

ஷங்கர் படத்தில் இணையும் ‘அண்ணாத்த’ பட வில்லன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஷங்கர் படத்தில் இணையும் ‘அண்ணாத்த’ பட வில்லன்! தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளார். ராம்சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்தை தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ராம்சரணுக்கு தந்தையாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘ரங்கஸ்தலம்’ படத்தில் இணைந்து நடித்திருந்த ஜெகபதி பாபுவும், ராம்சரணும், தற்போது மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளனர். நடிகர் ஜெகபதி பாபு, தற்போது சிவா - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....