செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: இங்கிலாந்து

டாஸ் வென்ற இங்கிலாந்து – இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி!

டாஸ் வென்ற இங்கிலாந்து – இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி!

HOME SLIDER, NEWS, sports, சினி நிகழ்வுகள், விளையாட்டு செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சவுத்தம்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டி20 போட்டியில் 49 ரன் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நாட்டிங்காமில் நடக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான். இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன் ), டேவிட் மாலன், பிலிப் சால்ட், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன...
இங்கிலாந்தில் நடைபெறும் பன்னாட்டு விமான பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்காது!

இங்கிலாந்தில் நடைபெறும் பன்னாட்டு விமான பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்காது!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
இங்கிலாந்தில் வட்டிங்டன் நகரில் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பன்னாட்டு விமான பயிற்சி நடக்கிறது. அதற்கு ‘கோப்ரா வாரியர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில், இந்திய விமானப்படையும் பங்கேற்கிறது. அதற்காக இலகுரக போர் விமானமான தேஜாஸ் விமானங்களை அனுப்பி வைக்கிறது. 5 தேஜாஸ் விமானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், உக்ரைனில் போர் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்தில் நடைபெறும் பன்னாட்டு விமான பயிற்சியில் பங்கேற்கப் போவதில்லை என இந்திய விமானப்படை இன்று டுவிட்டரில் தெரிவித்துள்ளது....
டி20 போட்டி – 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய 4வது வீரர் ஹோல்டர்!

டி20 போட்டி – 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய 4வது வீரர் ஹோல்டர்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது டி20 போட்டி பார்படாசில் நடைபெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. பொல்லார்டு 41 ரன்னும், பாவெல் 35 ரன்னும் எடுத்தனர். அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேம்ஸ் வின்ஸ் 55 ரன்னிலும், சாம் பில்லிங்ஸ் 41 ரன்னிலும் அவுட்டாகினர். ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஜேசன் ஹோல்டர் 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தினார். இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என டி20 தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், ஹொசைன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்நிலையில், டி20 போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய நான்காவது வீரர் ஜேசன் ஹோல்டர் ஆவார். இவருக்கு முன்னதாக, அயர்லாந்தின் காம்பெர், இலங்கையின் லசித் மலிங்கா மற்றும் ஆப்கா...
மாஸ்க்… சமூக இடைவெளி தேவையில்லை – 4000 பேருடன் பிரமாண்டமாக நடக்கும் இசை விருது விழா!

மாஸ்க்… சமூக இடைவெளி தேவையில்லை – 4000 பேருடன் பிரமாண்டமாக நடக்கும் இசை விருது விழா!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
மாஸ்க்... சமூக இடைவெளி தேவையில்லை - 4000 பேருடன் பிரமாண்டமாக நடக்கும் இசை விருது விழா! இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை விருது விழா’, வருகிற மே 11-ந் தேதி நடைபெற உள்ளது. இவ்விருது விழா, லண்டனில் உள்ள ‘ஓ2’ அரேனாவில் நடத்தப்பட உள்ளது. இதில் 4,000 பேர் கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இதில் கலந்து கொள்பவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பின் பெரிய நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இந்த விருது விழா நடைபெற உள்ளதாம். மேலும் இதில் கலந்து கொள்ள உள்ள 4,000 பேரில் 2,500 பேர் முன்களப் பணியாளர்கள் மற்றும் 1,500 பேர் கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்களாவர். நிகழ்ச்சிக்கு முன்னதாக 4000 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்று இல்லை என்று ...