புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: இந்தியன் 2 விபத்து

இந்தியன் 2 விபத்து விளக்கம் தர கமலுக்கு போலீஸ் சம்மன்!

இந்தியன் 2 விபத்து விளக்கம் தர கமலுக்கு போலீஸ் சம்மன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் விபத்து குறித்த விசாரணையில் பதில் அளிக்கும் படி நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி வைத்தனர். சென்னையை அடுத்த பூந்தமல்லி ஈவிபி ஷூட்டிங் ஸ்பாட்டில் கடந்த வாரம் திடீரென கிரேன் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு உதவி இயக்குனர் உட்பட 3 பேர் அதே இடத்தில் பலியானார்கள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்நிலையில் இந்த விசாரணையின் போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி நடிகர் கமல் ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது....
இந்தியன் 2 செட்டில் பலியானவர்களுக்கு லைகா 2 கோடி, கமல் 1 கோடி நிதியுதவி!

இந்தியன் 2 செட்டில் பலியானவர்களுக்கு லைகா 2 கோடி, கமல் 1 கோடி நிதியுதவி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்தியன் 2 செட்டில் பலியானவர்களுக்கு லைகா நிறுவனம் 2 கோடி, கமல் 1 கோடி நிதியுதவி ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தின் படிப்பிடில் நேர்ந்துள்ள கோர விபத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, ஷங்கரின் பிஏ மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் என மூன்று இறந்துவிட்டனர். 10 பேர் காயம் படுகாயம் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் தமிழ் திரையுலகமே கருப்பு தினமாக மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த துணை இயக்குனர் கிருஷ்ணா பிரபல கார்ட்டூனிஸ்ட் மற்றும் விமர்சகரான மதன் அவர்களின் மருமகன் ஆவார். திரைத்துறையில் உள்ள பல்வேறு பிரபலங்கள் இறந்தவர்களின் கும்பத்திற்கு வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர். மேலும் சிலர் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த கு...
என் சகாக்களை இழந்து விட்டேன் – கமல் உருக்கம்

என் சகாக்களை இழந்து விட்டேன் – கமல் உருக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  என் சகாக்களை இழந்து விட்டேன் - கமல் உருக்கம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்து வரும் படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்று இரவு நடந்து வந்தது. அப்போது 150 அடி உயர கிரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நிகழ்ந்தது குறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள கமலஹாசன் ” எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என...
இந்தியன் 2 ஷூட்டிங்கில் பயங்கர விபத்து கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலி, இயக்குநர் ஷங்கர் உட்பட 10 பேர் காயம்!

இந்தியன் 2 ஷூட்டிங்கில் பயங்கர விபத்து கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலி, இயக்குநர் ஷங்கர் உட்பட 10 பேர் காயம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்தியன் 2 ஷூட்டிங்கில் பயங்கர விபத்து கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலி, இயக்குநர் ஷங்கர் உட்பட 10 பேர் காயம்! ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சி பூந்தமல்லியை அடுத்த ஈவிபி செட்டுக்குள் எடுக்கப்பட்டு வருகிறது. கலை இயக்குனர் முத்துராஜா பிரமாண்டமான செட் அமைத்து வருகிறார். நேற்று இரவு நடைபெற்ற படப்பிடிப்பின் போது பிரமாண்டமான கிரேன் எதிர்பாராமல் அறுந்து விழுந்து ஒரு உதவி இயக்குனர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இயக்குனர் ஷங்கருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அஜீத் நடிக்கும் வலிமை ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டு அஜீத் காயம் அடைந்தார். வலிமை ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதற்கு முன...