சனிக்கிழமை, ஜூன் 20
Shadow

Tag: எஸ்.வி.சேகர் மீது புகார்

எஸ்.வி.சேகர் ஜெயிலுக்கு போக ஆசைப்படுகிறார் – அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்

எஸ்.வி.சேகர் ஜெயிலுக்கு போக ஆசைப்படுகிறார் – அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது எஸ்.வி.சேகரின் நீண்ட நாள் ஆசை... அதை அரசு நிறைவேற்றும்" என நக்கல் அடித்த அமைச்சர். தேசிய கொடியை அவமதிப்பு செய்தார், முதல்வரை தவறாக விமர்சித்தார் என நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார் வந்துள்ளதே... அதன் பேரில் எஸ்.வி.சேகர் கைதாவாரா? என அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்த போது " தேசிய கொடியை அவமதிப்பு செய்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரை அவதூறாக பேசினால் ஈசியாக மக்களிடம் தன்னை விளம்பர படுத்திக் கொள்ள முடியும் என்பதால் அவர் அப்படி நடந்து கொள்கிறார். அவருக்கு ரொம்ப நாள் ஆசை ஜெயிலுக்கு போக வேண்டும் என்று. அந்த ஆசையை அரசு நிறைவேற்றும்" என நக்கல் அடித்தார் அமைச்சர் ஜெயக்குமார்....
தேசிய கொடியை அவமதித்ததாக எஸ்.வி.சேகர் மீது திடீர் புகார்?

தேசிய கொடியை அவமதித்ததாக எஸ்.வி.சேகர் மீது திடீர் புகார்?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    தேசிய கொடியை எஸ்விசேகர்  அவமதித்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதிமுக அரசுக்கும் காமெடி நடிகர் எஸ்.வி.சேகருக்கும் ஏற்கனவே விமர்சன மோதல் இருந்து வரும் நிலையில் எஸ்.வி.சேகர் இந்திய தேசிய கொடியை அவமதித்தார் என புகார் வந்தால் அரசு சும்மா இருக்குமா? சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்கிறார். இவர் தேசிய கொடியை நடிகர் எஸ்.வி.சேகர் அவமதிப்பு செய்ததாக ஒரு புகார் கூறி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் மனு ஒன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளார். அந்த மனுவில், நடிகர் எஸ்.வி.சேகர் தான் நடத்தும் யூடியூப் சேனல் ஒன்றில் இந்திய தேசிய கொடியை அவமதித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் என்றும், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்...